பிளாக் பெரியின் புதிய போன்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 அக்
2011
00:00

பிளாக்பெரி கர்வ் வரிசையில் பல மொபைல் போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்திட இருப்பதாக முன்பு ஆர்.ஐ.எம். நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி, சென்ற வாரம் பிளாக்பெரி கர்வ் 9360 என்ற மொபைல் போனை விற்பனைக்குக் கொண்டு வந்தது. இதன் அதிக பட்ச விலை ரூ. 19,990. இதன் டிஸ்பிளே திரை 2.44 அங்குல அகலத்தில் உள்ளது. இதில் பிளாக்பெரி 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. 3ஜி சப்போர்ட், மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், புளுடூத், வை-பி, 3ஜி சப்போர்ட், எச்.எஸ்.டி.பி.ஏ. நெட்வொர்க், குவெர்ட்டி கீ போர்ட் ஆகிய வசதிகளும் இதில் உள்ளன. இதன் பேட்டரி 1000 mAh திறன் கொண்டது. ப்ராசசர் 800 MHz வேகத்தில் இயங்கக் கூடியது.
இதன் சிறப்பு அம்சம், இதில் உள்ள என்.எப்.சி. என்னும் வசதிதான். இது பிளாக்பெரி நிறுவனத்தின் விலை உயர்ந்த போல்ட் 9900 மொபைல் போனில் முன்பே தரப்பட்டிருந்தது. இந்த தொழில் நுட்பம் இனி வரும் காலத்தில் நம் நடைமுறை வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை உண்டு பண்ணும். டெபிட் கார்டு போல, மொபைல் போனைப் பயன்படுத்தும் வசதியை இந்த தொழில் நுட்பம் நமக்குத் தரும்.
இதே வேளையில், பிளாக்பெரி டார்ச் 9860 மொபைல் போனையும் இந்தியாவிற்கு ஆர்.ஐ.எம். நிறுவனம் கொண்டு வந்துள்ளது. இதுவரை எந்த பிளாக்பெரி போனிலும் இல்லாத வகையில், இதில் 3.7 அங்குல அகலத்தில் திரை தரப்பட்டுள்ளது. மற்ற வசதிகளைப் போலவே இதன் தொடுதிரை மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் பிளாக்பெரி ஆப்பரேட்டிங் சிஸ்டம் 7 இயங்குகிறது. மற்ற பிளாக் பெரி போன்களில் இல்லாத வகையில், இதன் சிபியுவில் உள்ள ப்ராசசர் 1.2 கிகா ஹெர்ட்ஸ் திறன் கொண்டது. இதன் மெமரி 768 எம்.பி அளவில் தரப்பட்டுள்ளது. எல்.இ.டி. பிளாஷ் இணைந்த 5 மெகா பிக்ஸல் கேமரா, வை-பி, ஜி.பி.எஸ்., புளுடூத், 1230 mAh திறன் கொண்ட பேட்டரி, 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்த வசதி தரும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் சப்போர்ட் ஆகிய வசதிகளுடன் 4.7 (நீளம்) x 2.4 (அகலம்) x 0.45 (தடிமன் ) என்ற பரிமாணத்தில் 135 கிராம் எடையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 28,500 என்ற அளவில் இருக்கலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X