லேப்டாப் கம்ப்யூட்டர் வாங்கலாமா!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 அக்
2011
00:00

தமிழக அரசு இலவச லேப்டாப் தரும் திட்டத்தினைத் தொடங்கியது முதல், இந்த திட்டத்தில் பயனடையும் மாணவர்கள் இல்லாத குடும்பங்களில் உள்ளவர்களிடம், நாமும் ஒரு லேப்டாப் கம்ப்யூட்டர் வாங்கி வைத்துக் கொண்டால் என்ன என்ற எண்ணம் தோன்றியுள்ளது. தற்போது வீட்டில் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் வைத்திருப் பவர்களும், தங்களின் அடுத்த கம்ப்யூட்டராக மட்டுமின்றி, கூடுதல் கம்ப்யூட்டர் ஒரு லேப்டாப்பாகத்தான் இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். கம்ப்யூட்டர் மலர் ஆசிரியர் குழுவிற்கு வரும் கடிதங்கள், தொலைபேசி அழைப்பு கள் இதனை உறுதி செய்துள்ளன. பலர் லேப்டாப் கம்ப்யூட்டர் ஒன்றில் உள்ள ஹார்ட்வேர் சாதனங்கள் எந்த திறனில் இருக்க வேண்டும் எனக் கேட்டு வருகின்றனர். இது குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம்.
லேப்டாப் கம்ப்யூட்டரைப் பொறுத்த வரை, டெஸ்க்டாப் போன்று அசெம்பிளிங் கம்ப்யூட்டரெல்லாம் கிடைக்காது. நிறுவனங்கள் தயாரித்து, கம்ப்யூட்டர் விற்பனை செய்திடும் கடைகள் அல்லது இந்த நிறுவனங்களின் நேரடி விற்பனை மையங்கள், டீலர்களின் விற்பனைக் கடைகள் ஆகியவற்றில் விற்பனை செய்யப்படும் லேப்டாப் கம்ப்யூட்டரை வாங்க வேண்டும். அந்த வகையில், ஏசர், டெல், ஹ்யூலட் பேக்கார்ட் (எச்.பி.)லெனோவா, சாம்சங், தோஷிபா, சோனி போன்ற நிறுவனங்களின் கம்ப்யூட்டர்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் பல நிலைகளில் இவற்றைத் தயார் செய்து, விலையிட்டு தருகின்றன. விற்பனை யாளர்கள் இவற்றில் ஏதாவது ஒன்றை வாங்கினால், இதனுடன் இணைத்துப் பயன்படுத்தக் கூடிய சாதனம் ஒன்றை (ப்ளாஷ் ட்ரைவ், பிரிண்டர், உறைகள், கூடுதல் ராம், கிராபிக்ஸ் கார்ட், வயர்லெஸ் மவுஸ்) இலவசமாகத் தருவதாக விளம்பரம் அளிப்பார்கள். இது போன்ற இலவச இணைப்புகளுக்கு அதிக மதிப்பு கொடுக்காமல், நீங்கள் கம்ப்யூட்டரை எந்த வேலைகளுக்காகப் பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதன் அடிப்படையிலும், அதற்கென எவ்வளவு செலவழிக்கப் போகிறீர்கள் என்ற அடிப்படையிலும், லேப்டாப் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதுதான் நல்லது.
கம்ப்யூட்டர் ஒன்றின் அதி முக்கிய பாகம் அதன் ப்ராசசர் தான். நல்ல தரம் உயர்ந்த ப்ராசசர் எனில் இன்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள, மூன்று வகை தரத்திலான ப்ராசசர்களைப் பார்க்கலாம். இன்டெல் கோர் ஐ3, ஐ5 மற்றும் ஐ7 (Intel Core i3, i5, i7) என மூன்று நிலைகளில் இந்த இன்டெல் ப்ராசசர்கள் இணைக்கப் படுகின்றன. இதனை அடுத்து இன்டெல் நிறுவனத்தின் இன்டெல் டூயல் கோர் (Intel Dual Core) வரிசைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
அடுத்து இந்த ப்ராசசரின் வேகத்தினையும் பார்க்க வேண்டும். மேலே தரப்பட்டுள்ள எண்ணுடன் அந்த ப்ராசசரின் வேகத்திறனும் குறிப்பிடப்படும். இதனை எஏத் என்ற அளவால் குறிப்பிடப்பட்டிருக்கும். எண்களின் மதிப்பு கூடுதலாக இருந்தால், அதன் திறன் சிறப்பு எனப் பொருள். இதனால், ப்ராசசருக்கு ஏற்றார் போல விலை வித்தியாசம் இருக்கும். வேறு நிறுவனங்களின் ப்ராசசர்கள் அல்லது குறைவான திறன் கொண்ட ப்ராசசர்கள், இன்றைய லேப்டாப் பயன்பாட்டுக்கு ஈடு கொடுக்க முடியாததாக இருக்கும்.
கம்ப்யூட்டர் இயங்குவதில், ராம் மெமரி ஒரு முக்கிய பாகமாகும். இதில் தான் கம்ப்யூட்டர் இயங்கத் தேவையான சிஸ்டம் புரோகிராம்கள், அப்ளிகேஷன் புரோகிராம்கள் மற்றும் நாம் உருவாக்கும் பைல்கள் அனைத்தும் தங்கிச் செயல்படுகின்றன. எனவே இதன் கொள்ளளவு எவ்வளவு அதிகமோ, அந்த அளவு அது அமைந்துள்ள கம்ப்யூட்டர் சிறப்பாகவும் வேகமாகவும் இயங்கும். இதில் தற்போது டி.டி.ஆர் 2 ராம் (DDR2) மற்றும் டி.டி.ஆர்.3 ராம் (DDR3) பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றுள் டி.டி.ஆர்.3 பொருத்தப்பட்டது விலை சற்றுக் கூடுதலாக இருக்கும். இதன் அளவும் இதில் முக்கியம். குறைந்தது 2 ஜிபி உள்ளதாக இருக்க வேண்டும். 4ஜிபி இருப்பது மிகவும் நல்லது. இதன் அளவு கூடுகையில் விலையிலும் சற்று கூடுதல் இருக்கும்.
அடுத்ததாக நாம் கவனிக்க வேண்டியது ஹார்ட் டிஸ்க். தற்போது சாலிட் ஸ்டேட் டிஸ்க் என்னும் நவீன வகை டிஸ்க்குகள் கிடைத்தாலும், அவ்வளவாக அது பரவலாக்கப் படவில்லை. எனவே ஏற்கனவே புழக்கத்தில் உள்ள ஹார்ட் டிஸ்க் வகை இணைக்கப்பட்டுள்ளதனையே கேட்டு வாங்கலாம். ஹார்ட் டிஸ்க் தயாரிப்பில் புகழும் பெயரும் பெற்ற நிறுவன ஹார்ட் டிஸ்க் இருப்பது நல்லது. நிறுவனங்கள் இதில் சிறந்த வகையினையே பொருத்தித் தருவதால், இது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. அளவு குறைந்தது 500 ஜிபி இருப்பது நல்லது. இப்போ தெல்லாம், திரைப்படங்கள், பாடல்கள், அனிமேஷன் வகை புரோகிராம்கள் பயன்படுத்துவது அதிகமாகி வருவதால், இவற்றைத் தேக்கி வைக்க, அதிக அளவிலான ஹார்ட் டிஸ்க் தேவைப் படுகிறது. எனவே சற்றுக் கூடுதலான விலையில், கூடுதலான கொள்ளளவு கொண்ட ஹார்ட் டிஸ்க் பொருத்தப்பட்டுள்ளது இருப்பின், அதனையே வாங்கலாம். மேலும் இந்த ஹார்ட் டிஸ்க்கின் செயல்பாட்டு வேகத்தினையும் பார்க்க வேண்டும். பொதுவாக இப்போது பொருத்தப்படும் ஹார்ட் டிஸ்க்குகளின் செயல் வேகம் 7200 RPM ஆக உள்ளது. இதற்கும் குறைந்த வேகம் கொண்ட ஹார்ட் டிஸ்க் எனில் சற்று யோசனை செய்வது நல்லது.
முன்பெல்லாம், கம்ப்யூட்டரில் கிராபிக்ஸ் கார்ட் இருப்பதைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. ஆனால், இன்றைய லேப்டாப் கம்ப்யூட்டர்களில், இவற்றை இணைத்திருப்பது பற்றி தனியே குறிக்கப்பட்டு விளம்பரப் படுத்தப் படுகிறது. நீங்கள் அனிமேஷன், டிசைனிங், போட்டோ ஷாப் போன்ற அப்ளிகேஷன் புரோகிரம்களைப் பயன்படுத்தப் போகிறீர்கள் என்றால், நல்ல செயல்திறன் கொண்ட கிராபிக்ஸ் கார்ட் பொருத்திய லேப்டாப் கம்ப்யூட்டரை வாங்குவதே நல்லது. பின் நாளில் நாம் இந்த புரோகிராம்களைப் பயன்படுத்தலாம் அல்லவா! எனவே நல்ல கிராபிக்ஸ் கார்ட் உள்ளதையே வாங்கலாம்.
இந்த கிராபிக்ஸ் கார்டில் இரண்டு வகையான கார்டுகள் பொருத்தப் படுகின்றன. அவை – Dedicated Graphics மற்றும் Integrated graphics ஆகும். இதில் முதல் வகையே சிறந்தது. இந்த கார்ட் இருந்தால், வீடியோ, ஹை டெபனிஷன் படங்கள் ஆகியவை இயங்குவதற்கு உதவியாக இருக்கும்.
இவற்றுடன் லேப்டாப் கம்ப்யூட்டரை, டிவியுடன் இணைத்துப் பார்க்க HDMI Port, அதிக எண்ணிக்கையில் யு.எஸ்.பி. போர்ட் (குறைந்தது 4), இணைந்த வெப் கேமரா, முன்பக்கமாக மைக், சரவுண்ட் ஸ்பீக்கர், ஹெட்செட் போர்ட், ஆகிய இணைப்புகள் இருக்க வேண்டும். சிலருக்கு லேப்டாப்பில் உள்ள ட்ரேக் பேட், கீ போர்ட் ஆகியவற்றைப் பயன்படுத்துவது சிரமமாக இருக்கும். இவர்கள், இதற்கென சிறியதான மவுஸ் மற்றும் சுருட்டி வைத்துப் பயன்படுத்தக் கூடிய கீ போர்டுகளை வாங்கிப் பயன்படுத்தலாம்.
எந்த நிறுவன லேப்டாப் வாங்கினாலும், அதற்கான நிறுவன லெதர் பேக் இணைத்துத் தரப்படும். இது இல்லாமல் வாங்கவே கூடாது. வீடுகளில் பத்திரமாக வைத்திட இது உதவும். வெளி ஊர்களுக்குப் போகும்போது எடுத்துச் செல்ல இதனைப் பயன்படுத்தலாம். அதிக இடம் எடுக்காத, போம் வைத்துத் தயார் செய்த லேப்டாப் கம்ப்யூட்டர் பைகள் கடைகளில் கிடைக்கும். இவை அதிக இடம் பிடிக்காது; எனவே இவற்றையும் வாங்கிப் பயன்படுத்தலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மீனாட்சிசுந்தரம் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
10-அக்-201107:51:03 IST Report Abuse
மீனாட்சிசுந்தரம் சார் தயவு செய்து monitor சைஸ் அதன் பேட்டரி நிக்கும் டைம் details தந்தால் நல்லது .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X