இணைய வழி எஸ்.எம்.எஸ். என்னவாகும்?
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 அக்
2011
00:00

நாள் ஒன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ்.கள் மட்டுமே ஒருவர் அனுப்ப முடியும் என்ற கட்டுப்பாட்டினை ட்ராய் TRAI (Telecom regulatory Authority of India) அமைப்பு விதியாகக் கொண்டு வந்து அமல்படுத்தியுள்ளது. இது பலருக்கு நிம்மதியைத் தந்துள்ளது. இதனால் இலவச எஸ்.எம்.எஸ். அனுப்பும் சேவையினை வழங்கி வரும் வே2எஸ்.எம்.எஸ். போன்ற தளங்களின் பணி என்னவாகும்? இந்த சந்தேகத்துடன் அந்த தளத்தினை அணுகுகையில் சில தகவல்கள் கிடைத்தன.
இந்தத் தடை விற்பனையாளர்களுக்கு பெரிய அளவில் இழப்பினைத் தந்துள்ளது. குறைந்த செலவில், அல்லது செலவே இல்லாமல் மேற்கொண்டு வந்த விளம்பரங்களுக்கு இனி வழி இல்லை. தங்கள் நண்பர்களுடன் எப்போதும் தொடர்பு கொள்ள கல்லூரி மாணவர்களும் மாணவிகளும் இதனைப் பயன்படுத்தி வந்தனர். இந்த தடையால் அவர்கள் தங்கள் வழிமுறைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டியதுள்ளது. இருப்பினும் இந்த தடை தேவைதான். பலருக்கு இதனால் நிம்மதி கிடைத்துள்ளது. வேலைகளுக்கிடையே இத்தகைய விளம்பரக் குறுஞ்செய்தி வருவதும், அதனை என்னவென்று பார்த்து எரிச்சலடைவதும், தலைவலியாய் இருந்து வந்தது. இனி இந்தத் தொல்லை இல்லை.
இருப்பினும் அதிக எண்ணிக்கையில் எஸ்.எம்.எஸ். அனுப்பப் பல வழிகள் கிடைக்கத்தான் செய்கின்றன. இலவச அல்லது நாள் ஒன்றுக்கு நூறு என்ற வரையறையுடன் எஸ்.எம்.எஸ். அனுப்பும் வசதியினைத் தரும் சிம் கார்டுகளை ஒன்றுக்கு இரண்டாக வாங்கி வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம்.
இரண்டாவது வழி இன்னும் சிறப்பானது. இலவச எஸ்.எம்.எஸ்.களை வாங்கி அனுப்பும் இணையதளங்கள் இந்த வகையில் உதவிக்கு வருகின்றன. way2SMS.com, 160by2.com, fullonsms. com and whozzat.com ஆகிய தளங்கள் இத்தகைய சேவைகளைச் சிறப்பாக வழங்கி வருகின்றன. ஆனால், இவை தொல்லை தராத செய்திகளை மட்டுமே அனுமதிக்கின்றன. இவற்றில் 160by2 இணைய தளம் மொபைல் போன் வழியாக தளத்தைப் பயன்படுத்தும் அப்ளிகேஷன்களையும் தருகிறது. இந்திய சோஷியல் இணைய தளமான SMSGupsup, மொத்தமாக நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பும் வசதியைத் தருகிறது.
இவற்றின் மூலம் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் குறுஞ்செய்திகளை அனுப்பலாம் என்றாலும், இந்த தளங்களும் வணிக ரீதியில் அனுப்பப்படும் செய்திகளைத் தடை செய்வதால், சரியான காரணங்களுக்கு மட்டுமே இந்த வசதியினைப் பயன்படுத்துவது உறுதி செய்யப்படுகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X