ஸ்டீவ் ஜாப்ஸ் மறைவு (1955 - 2011)
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 அக்
2011
00:00

ஆப்பிள் நிறுவனத்தைத் தோற்றுவித்து, பெர்சனல் கம்ப்யூட்டர், மேக் கம்ப்யூட்டர், ஐ-போன், ஐ-பாட், ஐ-பேட், ஐ-ட்யூன், ஸ்மார்ட் போன் எனப் பல்வேறு சாதனங்களை உருவாக்கி, மனித குல சிந்தனை வளர்ச்சியில் புதிய சாதனையைப் படைத்த ஸ்டீவ் ஜாப்ஸ், தன் 56ஆவது வயதில், சென்ற புதன் கிழமை மரணமடைந்தார்.
கணையத்தில் ஏற்பட்ட புற்று நோயுடன் 2004 ஆம் ஆண்டு முதல் போராடி வந்த ஸ்டீவ் ஜாப்ஸ், சென்ற சில மாதங்களாக ஓய்வில் இருந்தார். இறுதியில் தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உடன் இருக்க மரணத்தைத் தழுவினார். அன்பு மனைவி லாரீன், நான்கு குழந்தைகள், அவரை ஆழமாக நேசித்த ஆப்பிள் நிறுவனத்தின் 49 ஆயிரம் ஊழியர்களை விட்டுவிட்டு மறைந்துவிட்டார் என ஆப்பிள் நிறுவனம் தன் இணைய தளத்தில் இவர் மரணத்தை அறிவித்தது.
ஸ்டீவ் ஜாப்ஸ் வடிவமைத்துத் தந்த அனைத்தும், மனித வாழ்க்கையில் பெரும் திருப்புமுனைகளை ஏற்படுத்தின. தொழில் நுட்ப சாதனங்களை எளிமையாக்கி இதயத்திற்கு எடுத்துச் சென்றன.
தொடுதிரை இயக்கத்துடன் 2010ல் அவர் கொண்டு வந்த ஐ-பேட் என்னும் டேப்ளட் பிசியைப் பார்த்து, டிஜிட்டல் உலகமே வியந்தது. அனைத்து பன்னாட்டு நிறுவனங் களும் அதே போல சாதனங்களை உருவாக்கி விற்பனைக்குக் கொண்டு வந்ததே இதற்கு சாட்சியாகும்.
பில் கேட்ஸ் ஒவ்வொரு அலுவலகத்தின் மேஜையிலும் பெர்சனல் கம்ப்யூட்டரைக் கொண்டு வந்தார். ஸ்டீவ் ஜாப்ஸ் அதனை வீட்டின் எந்த அறையிலும் வைத்துப் பயன்படுத்தும்படி உருவாக்கினார். இறுதியில் ஒவ்வொரு மனிதனின் பாக்கெட்டி லும் இருக்கும்படி மாற்றினார். இதனால் அனைவரின் இதயத்திலும் இடம் பிடித்தார். இந்த வகையில் அனைவரின் அன்புக்குரிய விஞ்ஞானியாக தனி ஒரு இடம் பிடித்தார். இந்த உலகம் சென்று கொண்டிருந்த பாதையை மாற்றினார். அதனை மேம்படுத்தினார்.
மனிதர்கள் வாழும் வரை ஸ்டீவ் ஜாப்ஸ் உருவாக்கிய சாதனங்கள் வாழும். அதன் மூலம் அவரும் வாழ்வார்.
முற்றிலும் புதிய முறையில் சிந்தித்து, தான் எண்ணியதில் முழுமையாக நம்பிக்கை வைத்து, அதனை தைரியத்துடன் இந்த உலகிற்குச் சொல்லி, உலகை உயர்த்திய மாமனிதர் அவர்.
டிஜிட்டல் உலகில் ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு சகாப்தம். அதனை நாம் தொடர்வோம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan - Bhavani,இந்தியா
14-அக்-201108:14:48 IST Report Abuse
Nagarajan இது வரை கம்ப்யுட்டர் மலர்களில் வெளியான டிப்ஸ், தீர்வுகள் போன்றவற்றை தொகுத்து புத்தகமாக வெளியிட்டால் என் போன்ற வயதானவர்களுக்கு. அனைத்தையும் நினைவில் வைத்துகொள்ள முடியாதவர்களுக்கு உதவியாக இருக்கும். அகர வரிசையில் தொகுத்து வெளியிடவும்.
Rate this:
Share this comment
Cancel
thiyagarajan - salem,இந்தியா
10-அக்-201116:22:17 IST Report Abuse
thiyagarajan My great salute to mr steeve jobs , his contribution to the electronic world is very excellent , we lost one of the pioneer of the computer, i am very angry on almighty for his act
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X