ஆகாஷ் - உலகின் விலை குறைந்த டேப்ளட் பிசி! இந்தியாவில் தயாரிப்பு!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 அக்
2011
00:00

ஆகாஷ் என்ற பெயரில் சென்ற வாரம் டில்லியில் டேப்ளட் பிசி ஒன்று அறிமுகமாகியுள்ளது. இந்த விலையில் டேப்ளட் பிசி கிடைக்குமா என்ற ஆச்சரியத்துடன் ரூ.2,276 என இதன் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டத்தின் கீழ் இதன் பாதி விலையில் மாணவர்களுக்கு இந்த டேப்ளட் பிசி கிடைக்கும் என்பது இன்னொரு இனிப்பான செய்தி. இந்த விலை அனைத்து வரிகள் மற்றும் கொண்டு செல்லும் செலவும் சேர்த்துத்தான் என்பது அடுத்த இன்ப அதிர்ச்சியாகும். கல்வி நிலையங்களுக்கு இந்த பிசி ரூ.1,100 லிருந்து ரூ.1,200 விலையில் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

இதன் தொழில் நுட்ப திறன்கள்:
கிராபிக்ஸ் அக்ஸிலரேட்டர் மற்றும் எச்.டி. வீடியோ ப்ராசசர் இணைந்த 366 Mhz ப்ராசசர், 800 x 450 ரெசல்யூசன் திறனுடன் கூடிய 7 அங்குல அகல ரெசிஸ்டிவ் தொடு திரை, ஆண்ட்ராய்ட் 2.2 (ப்ரையோ) ஆப்பரேட்டிங் சிஸ்டம், 256 எம்பி ராம் நினைவகம், 2ஜிபி பிளாஷ் மெமரி, ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் வை-பி இணைப்பு, மைக், ஸ்டீரியோ ஹெட்செட் இணைப்புக்கான 3.5 மிமீ ஆடியோ ஜாக், இரண்டு யு.எஸ்.பி. போர்ட், DOC, DOCX, PPT, PPTX, XLS, XLSX, ODT, ODP ஆகிய பார்மட் டாகுமெண்ட்களுக்கான சப்போர்ட், பி.டி.எப். ரீடர், டெக்ஸ் எடிட்டர், மல்ட்டிமீடியா மற்றும் இமேஜ் இயக்கம், PNG, JPG, BMP மற்றும் GIF ஆகிய இமேஜ் பார்மட்டுக்களுக்கான சப்போர்ட், ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஆடியோவினைப் பொறுத்த வரை MP3, AAC, AC3, WAV, WMA ஆகிய பார்மட்டுக்களை இதனால் கையாள முடியும். வீடியோ வகையில் MPEG2, MPEG4, AVI, FLV ஆகிய பார்மட்டுகள் இதில் இயங்குகின்றன. இதன் எடை 350 கிராம். கூடுதலாக 32 ஜிபி வரை இதன் மெமரியை அதிகப்படுத்த யு.எஸ்.பி. போர்ட் தரப்பட்டுள்ளது.
இந்த டேப்ளட் பிசியினை வெளியிட்ட மத்திய அமைச்சர் கபில்சிபல், இதனை ரூ.500 என்ற அளவில் கொண்டு வர அரசு ஆசைப் படுகிறது என்று தெரிவித் துள்ளார். அதிக எண்ணிக்கை யில் இவை தயாரிக்கப் படுகையில் இந்த விலையில் தரப்படுவது சாத்தியமே. பன்னிரண்டாவது திட்டத்தில், 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இது வழங்கப்படும். இதனைத் தயாரித்து வழங்கும் டேட்டாவிண்ட் நிறுவனத்திற்கு அரசு ஒரு லட்சம் டேப்ளட் பிசிக்கள் தேவை என ஆர்டர் கொடுத்துள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயரும் என்றும், பத்து லட்சம் என்ற எண்ணிக்கையை எட்டினால், அரசுக்கு ஒரு டேப்ளட் பிசி ரூ.1,750க்குக் கிடைக்கும். ஐ.டி.ஐ. நிலையங்கள் உட்பட, அனைத்து கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்களும் இதே போன்று டேப்ளட் பிசி தயாரிக்க கேட்டுக் கொள்ளப்படும் என்றும் குறிப் பிட்டுள்ளார்.
வர்த்தக ரீதியாக இது டில்லியில் வரும் வாரத்தில் ரூ. 2,999 க்குக் கிடைக்கும். இந்த மாடலில் செல்லுலர் மோடம் ஒன்று இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த டேப்ளட் பிசி "ஆகாஷ்' அறிமுகப் படுத்தப்பட்டது பன்னாட்டளவில் ஓர் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. தற்போது 200 டாலர் என்ற அளவில் குறைந்த பட்ச விலையை டேப்ளட் பிசிக்கள் மார்க்கட்டில் விற்பனையாகி வருகின்றன. எனவே ஆகாஷ் வர்த்தக ரீதியாக வருகையில், இவை விற்பனையில் அடிபட்டுப் போகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாமரன் - chennai,இந்தியா
20-அக்-201112:50:15 IST Report Abuse
பாமரன் சென்னை கம்ப்யூட்டர் விற்பனையாளர்களே, ஒரு நடை டெல்லி சென்று, சென்னையிலும் டேப்ளட் பிசி, வீட்டுக்கு வீடு சென்றடைய வழி செய்யுங்களேன்
Rate this:
Share this comment
Cancel
imran - chennai,இந்தியா
18-அக்-201100:06:56 IST Report Abuse
imran சார், டேப்ளட் எப்போ சென்னைல கிடைக்கும் ....நான் உங்க பதிலுக்கு காத்திருக்கிறேன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X