சி மொழி தந்த டெனிஸ் ரிட்ச்சி மறைவு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 அக்
2011
00:00

கணினி பயன்பாட்டில் சி என்னும் மொழி ஒன்றை உருவாக்கி, நவீன கால கணினிப் பயன்பாட்டிற்கு அடித்தளம் அமைத்த கணினி விஞ்ஞானி டெனிஸ் ரிட்ச்சி சென்ற வார இறுதியில் காலமானார். ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்து ஒரு வார காலத்திற்குள் இன்னொரு கணினி வித்தகர் மரணம் அடைந்துள்ளார். இவரும் புற்று நோயால் அவதிப்பட்டு, தன் இல்லத்தில் அதற்கான சிகிச்சை எடுத்து வருகை யில் காலமானதாக தகவல் கிடைத்துள்ளது. அக்டோபர் 8ல் காலமானது நேற்றுதான் உலகிற்கு அவரின் நண்பரால் அறிவிக்கப்பட்டது.
சிலர் சரித்திரத்தை மாற்றி பெயர் பெறுவார் கள்; சிலர் சரித்திரத்தை உருவாக்கிப் புகழ் பெறுவார்கள். ரிட்ச்சி இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்.
நவீன கணினி பயன்பாட்டிற்கு பல புதிய கட்டமைப்புகளைத் தந்த ஆராய்ச்சி நிறுவனம் பெல் லேப்ஸ். இதன் உரிமையாளர் அலிஸ்டர் ரிச்சியின் மகனான டெனிஸ் ரிட்ச்சி, அதே ஆய்வுக் கூடத்தில் இணைந்து "சி' மொழியை உருவாக்கினார். இதன் கட்டமைப்பில் பின்னர் "சி ப்ளஸ் ப்ளஸ்' மற்றும் "சி ஷார்ப்' உருவாக்கப்பட்டது. இன்றைய பல ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் மற்றும் சாப்ட்வேர் புரோகிராம்கள் சி மொழியை யே அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு இயங்கி வருகின்றன. Java, JavaScript, Objective C and Cocoa, Python, Perl, and PHP ஆகியவை இதற்கு எடுத்துக் காட்டுகளாகும்.
விண்டோஸ் இயக்கத்திற்கு முன் கணினியில் பெரும்பாலும் பயன்பட்டு வந்த யூனிக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, டெனிஸ் ரிட்ச்சி, கென் தாம்ப்ஸன் என்ற தன் நண்பருடன் இணைந்து உருவாக்கினார். இன்றும் யூனிக்ஸ் சிஸ்டம் பெரிய நெட்வொர்க்குகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்டர்நெட்டின் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக யூனிக்ஸ் முதலில் தேர்ந்தெடுக் கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. "ஓப்பன் சோர்ஸ்' என்னும் புதிய இயக்கம் கணினி அறிவியலில் தோன்ற இது ஒரு காரணமாகவும் அடிப்படையாகவும் அமைந்தது. இன்று உலக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களும், புரோகிராமிங் மொழிகளும் -- கூகுள் ஆண்ட்ராய்ட், ஆப்பிள் மேக் ஓ.எஸ். மற்றும் ஐ.ஓ.எஸ்., ஜாவா ஸ்கிரிப்ட் - சி மொழி மற்றும் யூனிக்ஸ் சிஸ்டத்தின் அடிப்படை யில் உருவானவையே.
ரிட்ச்சி தன் நண்பர்களுடன் இணைந்து 1978ல் எழுதிய "சி புரோகிராமிங் மொழி' நூல் இன்னும் கணினி உலகின் பைபிளாகக் கருதப்படுகிறது.
இவரின் கணினி மொழி கண்டு பிடிப்பிற்காகப் பல விருதுகள் வழங்கப்பட்டன. 1999ல் அமெரிக்க அரசின் தொழில் நுட்பத்திற்கான தேசிய விருது வழங்கப் பட்டது அனைத்திற்குமான முத்தாய்ப்பாக இருந்தது.
1941 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் பிறந்து ஹார்வேர்ட் பல்கலையில் இயற்பியலில் டாக்டர் பட்டம் பெற்றவர் ரிட்ச்சி. தன் 30 ஆவது வயதில் யூனிக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை உருவாக் கினார். 2011 அக்டோபர் 8ல் காலமானார்.
கணினி உலகில் திருப்புமுனைகளை உருவாக்கியவர்களின் பட்டியலில் முதல் ஐந்து பேரில் ஒருவராக ரிட்ச்சி என்றும் எண்ணப்படுவார். அவருடைய உருவாக் கங்கள் இன்னும் பல புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுக்கும் என்பது உறுதி.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thangaraj - Annur,இந்தியா
19-அக்-201116:05:44 IST Report Abuse
Thangaraj I'm very regret for his death.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X