கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 அக்
2011
00:00

கேள்வி: செக்டிஸ்க் கட்டளையுடன் சேர்த்துத் தரக்கூடிய ஆப்ஷன் களை சுட்டிக் காட்டி விளக்கவும்.
-ஆ. ராம்சிங், தேனி.
பதில்: செக்டிஸ்க் கட்டளையைக் கீழ்க் கண்டவாறு அமையலாம்; chkdsk [volume:][[Path] FileName] [/f] [/v] [/r] [/x] [/i] [/c] [/l[:size]] இதில் chkdsk என்பது டிஸ்க்கின் டிரைவ் லெட்டர் (C: D: E: போல). இதில் வால்யூம் பெயரையும் தரலாம்.
/f எனக் கொடுக்கையில் டிஸ்க்கில் உள்ள பிழைகள் குறிக்கப்படுகின்றன. இதற்கு டிஸ்க் லாக் செய்யப்பட வேண்டும். செக்டிஸ்க் புரோகிராமினால் அந்த டிஸ்க் டிரைவ் லாக் செய்யப்பட முடியாவிட்டால், ஒரு சிறிய மெசேஜ் காட்டப்படும். அதில் அடுத்தமுறை நீங்கள் கம்ப்யூட்டரை ஸ்டார்ட் செய்திடுகையில் இந்த டிரைவினை செக் செய்து கொள்ளலாமா என்று கேட்கப்படும்.
/v எனக் கொடுத்தால் ஒவ்வொரு டைரக்டரியில் உள்ள ஒவ்வொரு பைலையும் செக் செய்கையில், அந்த பைலின் பெயர் காட்டப்படும்.
/r எனத் தரும்போது பழுதடைந்த டிஸ்க் பிரிவுகள் (ஞச்ஞீ ண்ஞுஞிtணிணூண்) கண்டறியப்பட்டு அதில் உள்ள தகவல்கள் மீட்டு எடுக்கப்படும். இதற்கும் டிஸ்க் லாக் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
/x இந்த கட்டளை என்.டி.எப்.எஸ். (NTFS) பைல் வகை இருக்கும் சிஸ்டங்களில் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். /து கட்டளை //ஞூ என்ற கட்டளைக்குமான பணியையும் சேர்த்தே மேற்கொள்ளும்.
/i – (NTFS) பைல்களில் மட்டுமே செயல்படும். இது, இன்டெக்ஸ் செய்யப்பட்டுள்ளவற்றைச் சற்று நிதானமாகவே செக் செய்திடும்.
/c இதுவும் (NTFS) பைல்களில் மட்டுமே செயல்படும். /c என்ற கட்டளை போல்டர் ஸ்ட்ரக்சர்களில் உள்ள சைக்கிள்களை செக் செய்யாது. இதனால் செக்டிஸ்க் பைல் இயங்குவதற்கான நேரத்தைக் காட்டிலும் குறைவான நேரத்திலேயே இது இயங்கி முடிக்கும்.
/l[:size] – என்ற கட்டளையும் (NTFS) பைல்களில் மட்டுமே செயல்படும். நீங்கள் டைப் செய்யும் அளவில் லாக் பைலை அமைக்கும். சைஸ் என்ற பாராமீட்டரை அமைக்காவிட்டால் /l என்பது அந்த லாக் பைலின் ஒரிஜினல் சைஸைக் காட்டும்.

கேள்வி: ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்த போது, அஞ்சல் தளம் ஒன்றில், ஸ்டீவ் அவர்கள் தான் ஆப்பிள் நிறுவனம் மூலம் யு.எஸ்.பி. போர்ட் உருவாக்கி அதன் பயன்பாட்டினைக் கொண்டு வந்தார் என்று படித்தேன். அது உண்மையா?
-கா. பிரித்விராஜ், மதுரை.
பதில்: உங்கள் சந்தேகம் சரியே. ஸ்டீவ் ஜாப்ஸ் இதனை வடிவமைக்கவில்லை. யு.எஸ்.பி. 1 வரைமுறை 1994 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இன்டெல், காம்பேக், மைக்ரோசாப்ட், டிஜிட்டல், ஐ.பி.எம். மற்றும் நார்தர்ன் டெலிகாம் நிறுவனங்கள் இணைந்து இதனை உருவாக்கினர். மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் இயக்கத்தில் இதனை இயக்க தனி சாப்ட்வேர் தொகுப்பு ஒன்றை வடிவமைத்தது. பெர்சனல் கம்ப்யூட்டர் கேபின் பின்புறம் அதிகமான எண்ணிக்கையில் போர்ட்களை அமைப்பதனைத் தவிர்க்கும் நோக்கத்துடன் இது உருவாக்கப்பட்டது.
யு.எஸ்.பி. 2.0 வரையறை ஏப்ரல் 2000ல் அறிமுகமானது. முந்தையதைக் காட்டிலும் அதிக டேட்டா பரிமாறும் வகையில் சாதனம் இயங்க வேண்டும் என்ற இலக்குடன் யு.எஸ்.பி.2 உருவானது. 2008 ஆம் ஆண்டில் நவம்பர் 17ல், யு.எஸ்.பி. 3.0. உருவானது. இது யு.எஸ்.பி. 2க் காட்டிலும் பத்து மடங்கு அதிக டேட்டாவினைப் பரிமாறும் திறன் கொண்டது.

கேள்வி: எக்ஸெல் தொகுப்பில், மதிப்பினை இரண்டு தசமஸ்தானத்திற்கு மாற்ற என்ன பார்முலா கொடுக்க வேண்டும். Round என்ற பார்முலாவினைப் பயன்படுத்தலாமா?
-டி.கலா தேவி, சிவகாசி.
பதில்: நீங்கள் எண்ணுவது சரியே. Round என்ற கட்டளை இதற்கு உதவுகிறது. செல்லில் உள்ள மதிப்பு ஒன்றினை நாம் அமைத்திடும் தசம ஸ்தான அளவில் வரையறை செய்து அளிக்கும். இதனை அமைத்திடும் விதம் =ROUND(A1,2) இந்த பார்முலாவில் செல்லில் உள்ள மதிப்பை எடுத்து அதனை இரண்டு தசம ஸ்தானத்திற்கு மாற்றித்தரும்.

கேள்வி: விக்கி கால்க் என்பது என்ன? இதனை இலவசமாகப் பெற முடியுமா? தள முகவரி தரவும்.
-என். சுகவனம், விழுப்புரம்.
பதில்: விக்கி கால்க் (WikiCalc): என்பது எக்ஸெல் போன்ற ஒரு ஒர்க்ஷீட். ஒர்க் ஷீட் ஒன்றின் கால்குலேஷன்கள் அனைத்தையும் இதில் மேற்கொள்ளலாம். இதன் மூலம் இணைய தளங்களையும் உருவாக்கலாம். அனைவரும் எடிட் செய்திடும் வகையில் ஸ்ப்ரெட் ஷீட்களையும் உருவாக்கலாம். இதனை http://www.softwaregarden.com/products/wikicalc/ என்ற முகவரியில் பெறலாம்.

கேள்வி: சென்ற வாரம் எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவ் ஒன்று வாங்கினேன். என்னிடம் விண்டோஸ் எக்ஸ்பி ஹோம் மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டர்கள் இரண்டு உள்ளன. எப்படி இவற்றில் உள்ள சி ட்ரைவில் உள்ள அனைத்தையும் பேக் அப் காப்பியாக, எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவில் கொண்டு வருவது?
-ஆர்.கே. சந்திர சேகரன், மதுரை.
பதில்: அதாவது எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க்கில் பேக் அப் செய்ய வேண்டிய டிஸ்க் ட்ரைவின் இமேஜ் அல்லது மிர்ரர் ஒன்றை உருவாக்க எண்ணுகிறீர்கள். விண்டோஸ் எக்ஸ்பி ஹோம் எடிஷன் சிஸ்டத்தில் இந்த எக்ஸ்டர்னல் பேக் அப் ட்ரைவிற்கான புரோகிராம் எதுவும் இல்லை.எனவே உங்கள் ட்ரைவுடன் இதற்கெனத் தரப்பட்டுள்ள புரோகிரா மினைப் பயன்படுத்தவும். அல்லது கோஸ்ட் (Ghost) போன்ற தர்ட் பார்ட்டி புரோகிராமினைப் பயன்படுத்தவும். விண்டோஸ் எக்ஸ்பியின் மற்ற எடிஷன் களில், இதற்கான பேக் அப் சாப்ட்வேர் தரப்பட்டுள்ளது. Start>All Programs> System Tools எனச் சென்றால் கிடைக்கும். விஸ்டாவில் Start>Control Panel>Backup and Restore Center எனச் சென்று இந்த வசதியைப் பெறலாம். விண்டோஸ் 7ல் Start> Control Panel> System and Maintenance>Backup and Restore எனச் சென்று, பேக் அப் வேலைகளை மேற்கொள்ளலாம். மேலே சொன்ன அனைத்திலும், குறிப்பிட்ட டைரக்டரி சென்று பேக் அப் செய்திட இயக்கியவுடன், உங்களுக்கு பேக் அப் விண்டோஸ் காட்டப்படும். இங்கு எப்படி, எந்த ட்ரைவில் பேக் அப் தேவை எனக் குறிப்பிட்டுவிட்டால், சி ட்ரைவில் இருந்து அனைத்தும் பேக் அப் ஆகிவிடும்.

கேள்வி: என் கம்ப்யூட்டரில் தமிழ் டெக்ஸ்ட் எடிட்டர் ஒன்றை இன்ஸ்டால் செய்தேன். சிஸ்டம் தொடங்கும்போதே அதுவும் இயங்கித் தயாராக நிற்கிறது. எனக்கு இது தேவை இல்லை. எனவே இந்த அமைப்பை நீக்கி, தேவைப்படுகையில் மட்டும் இதனை இயக்கும்படி அமைக்க என்ன செய்திட வேண்டும்?
-ஆ. சீதாராமன், கும்பகோணம்.
பதில்:தேவையில்லாத புரோகிராம் சிஸ்டத்துடன் இயங்கி ராம் மெமரியை எடுத்துக் கொண்டு, அதன் ட்ரைவர் செட் அப்பை இயக்கிக் கொண்டு இருப்பது பல வேளைகளில் தொல்லை தரலாம். இந்த அமைப்பை எப்படி நீக்குவது எனக் காணலாம்.
1.முதலில் அந்த புரோகிராமின் அமைப்பைக் காணவும். அதனைத் திறக்கவும்.
2. அதில் செட்டிங்ஸ் பேனல் உள்ளதா எனப் பார்க்கவும். செட்டிங்ஸ், பிரிபரன்ஸ், ஆப்ஷன்ஸ், டூல்ஸ் எனச் சென்றால், அதில் startup இயங்கும்போது, இந்த புரோகிராம் இயங்காமல் இருக்க ஆப்ஷன் தரப்பட்டிருக்கும். அதனைத் தேர்ந்தெடுத்து, சேவ் செய்து வெளியே வரவும்.
இரண்டாவதாக சிஸ்டம் கான்பிகரேஷன் பயன்பாட்டினைப் (System Configuration Utility) பயன்படுத்தலாம். இதனை MSConfig எனவும் அழைப்பார்கள். ஸ்டார்ட் மெனு தேடல் கட்டத்தில் MSConfig என டைப் செய்து கிடைக்கும் விண்டோவினைப் பார்க்கவும். இதில் Startup என்று உள்ள டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் பல புரோகிராம்கள் அதன் டைரக்டரியுடன் காட்டப்படும். இதில் காட்டப்படும் புரோகிராம்கள் அனைத்தும், ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கத் தொடங்குகையில், உடன் இணைந்து இயங்கி, எப்போதும் செயல்படத் தயாராய் இருப்பவை. இதில் நீங்கள் குறிப்பிட்ட தமிழ் டெக்ஸ்ட் எடிட்டர் இருக்கும். அதன் முன் உள்ள சிறிய கட்டத்தில் உள்ள டிக் அடையாளத் தினை நீக்கி, சேவ் செய்து வெளி யேறவும்.
மீண்டும் கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்குகையில், உங்களுக்கு அதன் அமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக ஓர் எச்சரிக்கையைக் கொடுக்கும். அந்த பாக்ஸில் Don’t show this message or launch the System Configuration Utility when Windows starts என்று இருப்பதன் முன் டிக் அடையாளத்தை ஏற்படுத்தித் தொடரவும். இதன் பின்னர், அந்த எச்சரிக்கை காட்டப்படாமல், குறிப்பிட்ட புரோகிராம் இயக்கப்படாமல் கம்ப்யூட்டர் இயங்கும்.
மூன்றாவதாக ஒரு வழி உள்ளது. இந்த வழியை மேற்கொள்ள சில தர்ட் பார்ட்டி புரோகிராம்கள் இருக்கும். அதில் சிகிளீனர் ஒன்று. இந்த புரோகிராம்கள் மூலமாகவும், ஸ்டார்ட் அப் போது இயங்கும் புரோகிராம்களின் நிலையை மாற்றலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X