ஒரு சின்ன பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 நவ
2011
00:00

கூகுள் டாக்ஸ், ஜிமெயில் அக்கவுண்ட் என கூகுள் சார்ந்த தகவல்கள் அனைத்தும் மிகவும் பயனுடையதாகவும், புதிதாகத் தெரிந்து கொள்வதாகவும் இருந்தன. இதுபோல புதியதான ட்ரிக்ஸ் மற்றும் டிப்ஸ் தரவும்.
-ஆ. சுப்பையா, மதுரை.

சிஸ்டம் டிப்ஸ் கட்டங்கள் பிரமாதமாக நினைவு படுத்தும் செய்திகளாக இருந்தன. அடிக்கடி நினைவு படுத்தவும்.
-மீ. சுலோசனா பாஸ்கரன், தேவாரம்.

டவுண்லோட் காம் தளம் நல்ல சேவையைத் தந்து வருகிறது. 15 ஆண்டுகள் இந்த சேவையைத் தொடர்ந்துள்ளது என்பது பாராட்டத்தக்கது. அதைக் காட்டிலும் இந்த தளத்தில் பிரச்னை இல்லாத புரோகிராம்கள் கிடைப்பதுதான். இதனை நீங்கள் சுட்டிக் காட்டியிருக்கலாம்.
-பேரா. என். கார்த்திகேயன், திருச்சி.

நேஷனல் ஜியாக்ரபிக் தளம் சென்று பார்த்து வியப்படைந்தேன். இப்படித்தான் போட்டோக்களைக் காத்திருந்து எடுக்க வேண்டும். இணையத்தில் இவை கிடைப்பது இன்னும் சிறப்பு. இதே போல் இதன் டாகுமெண்டரி படங்கள் கிடைக்கின்றனவா?
-எஸ். முருகதாஸ் ஈஸ்வரன், தர்மபுரி.

டாஸ்க் மேனேஜர் கட்டுரை மிகத் தெளிவாகப் பாடம் சொல்லித் தரும் வகையில் தரப்பட்டுள்ளது. உங்களுக்கு என் பாராட்டுக்கள்.
-டாக்டர் சிவபிரகாசம், சென்னை.

நாள் முழுவதும் மவுஸுடன் இருக்கிறோம். இப்போது உங்கள் கட்டுரையைப் படித்தவுடன் பயன்படுத்தச் சற்று பயமாக உள்ளது. வலது கை மணிக்கட்டு வலிக்கத் தொடங்கினால், அனைத்தும் அல்லவா பாதிக்கப்படும். அன்பான எச்சரிக்கை கொடுத்ததற்கு நன்றி.
-என். கோகுல்தாஸ், மதுரை.

இன்று உலகை ஆண்டு கொண்டிருக்கும் தொழில் நுட்பத்தின் பெயர்கள் சூட்டிய சூழல் வேடிக்கையும் வினோதமாயும் உள்ளது. எந்த ஒரு விஞ்ஞானியும் எப்போதும் சீரியஸாக இருக்க மாட்டார்கள் என்பது புலனாகிறது.
-என். ருக்மாங்கதன், விழுப்புரம்.

விண்டோஸ் 7 சிஸ்டத்தில் தான் இத்தனை வகைகள். இதற்கு முன் இது போலக் குழப்பமாக இருந்ததில்லை. என் கேள்விக்கான தங்கள் பதில் இதனைத் தெளிவு படுத்தியது. நன்றி.
-நி.முருகேச பாண்டியன், மதுரை.

டாகுமெண்ட் பிரேக் ஏற்படுத்துவது எளிது. அதனை எப்படி நீக்குவது என்பதில் தான் சிக்கல் இருந்தது. அதனைத் தீர்த்துவிட்டீர்கள்.
-ஆ.கனகவள்ளி, திண்டிவனம்.

சில ஆண்டுகளுக்கு முன் கார்பெல் சிண்ட்ரோம் என மணிக்கட்டு வலி குறித்து எழுதி இருந்தீர்கள். அந்தக் கட்டுரை மெடிகல் ரீதியாக இருந்தது. இந்த வாரம் எங்கள் பொட்டில், சாரி, மணிக்கட்டில் அடிப்பது போல் இருக்கிறது.
-தியாகேசன், திருத்தணி.

இன்டர்நெட் தளம் ஏன் எண்ணில் இல்லை என்ற கேள்விக்கு நீங்கள் அடித்த ஜோக் படித்து விழுந்து விழுந்து சிரித்தோம். எதார்த்தமான ஒரு நுட்பத்தை எளிதாகச் சுட்டிக் காட்டியுள்ளீர்கள். உங்கள் வழி தனி வழி.
-லீமா ரோஸ், புதுச்சேரி.

மவுஸ் பிடித்தால் மணிக்கட்டு வலி வரும் என்ற செய்தி போல, கம்ப்யூட்டரில் செயலாற்றுகையில், கண்களைப் பாதுகாக்க, முதுகு, இடுப்பு வலி வராமல் தடுக்க என்ன வழிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் விளக்கவும்.
-ஆ. சுப்பிரமணியன், கோவை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V G GANESAN - chennai,இந்தியா
13-நவ-201105:17:26 IST Report Abuse
V G  GANESAN Last three weeks I could not download computer malar and save. please change your format,sothat all can download and save.
Rate this:
Share this comment
Cancel
karthi - சென்னை,இந்தியா
09-நவ-201116:59:37 IST Report Abuse
karthi அருமை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X