கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 நவ
2011
00:00

கேள்வி: டிஜிட்டல் கேமரா விலிருந்து படங்களை என் பெர்சனல் கம்ப்யூட்டரில், போல்டர் ஒன்றுக்கு மாற்றினேன். பின்னர் அவற்றை சிடி ஒன்றில் எழுதிய பின்னர், அழித்துவிட்டேன். போல்டரையே அழிக்க முயற்சிக்கையில், போல்டரில் பைல்கள் உள்ளது எனவும், போல்டரை நீக்க முடியாது எனவும் செய்தி கிடைக்கிறது. நிச்சயமாக அதில் எந்த போட்டோ பைலும் இல்லை. கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்து அழிக்க முயற்சித்தாலும் அழிய மறுக்கிறது. என்ன காரணம்?
-ஆ. அன்புக்கரசி, கோவை.
பதில்: இந்த பிரச்னை நம் கண்களுக்குத் தெரியாத பிரச்னை ஆகும். இதனைத் தீர்த்துவிடலாம். போட்டோக்கள் உள்ள போல்டரைத் திறக்கையில், விண்டோஸ் அவற்றை தம்ப் நெயில் என்ற முறையில் சிறிய அளவில் காட்டும். இவை சிஸ்டத்தினால், தானாக உருவாக்கப்படும். இந்த தம்ப் நெயில் காட்சிகள் கூட umbs.db என்ற பெயரில் உள்ள பைலில் வைக்கப்படும். இந்த பைல் சாதாரணமாகக் காட்டப்பட மாட்டாது. எனவே தான் போல்டரை நீக்க எண்ணி முயற்சிக்கையில், பைல் உள்ளது என்ற செய்தி வருகிறது. இந்த பைல் தானாக உருவாகும் சூழ்நிலை அமைப்பை மாற்றினால், இந்நிலையைத் தவிர்த்துவிடலாம்.
Tools கிளிக் செய்து Folder Options செல்லவும். கிடைக்கும் விண்டோவில் View டேப் தேர்ந்தெடுக்கவும். இங்கு ‘Do not cache thumbnails’ என்ற வரி இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்து, அதன் முன் உள்ள பாக்ஸில் சிறிய டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின்னர் Apply மற்றும் OK கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: சில புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்கையில், டி.எல்.எல். பைல் எனச் சிலவற்றைக் காட்டி, இதனை நீக்கவா? வேறு சில புரோகிராம்கள் இதனைப் பயன்படுத்தலாம் என்று காட்டப்படுகிறது. இதனை நீக்கலாமா? எப்படி நீக்கப்படும் புரோகிராம்களுக்கு மட்டுமே இவை சார்ந்தவை என்று அறிவது?
-கா.பிரபாகர், சென்னை.
பதில்: நல்ல கேள்வி. பலரின் மனதில் தோன்றும் ஐயம் இது. டி.எல்.எல். பைல் (Dynamic Link Library) என்பது சில வகையான சாப்ட்வேர் புரோகிராம்களுக்கான சப்போர்ட் தரும் பைல்களாகும். (இவை பெரும்பாலும் உங்கள் விண்டோஸ் டைரக்டரியில் காணப்படும்.) புரோகிராம் ஒன்று ஒரு சிறிய பொதுவான செயல்பாட்டினை மேற்கொள்ள வேண்டியதிருக்கலாம். இதற்கென அந்த புரோகிராமில் கோடிங்வரிகளை எழுதி, அந்த புரோகிராமின் அளவை அதிகப்படுத்தாமல், இது போன்ற டி.எல்.எல். பைல்களை அந்த இடத்தில் அழைத்து இயங்க வைக்கும்படி புரோகிராம் அமைக்கலாம். பொதுவான செயல்முறைகளுக்கென இவை எழுதப்பட்டு அமைக்கப்படுவதால், பல சாப்ட்வேர்கள் இந்த டி.எல்.எல். பைல்களைப் பயன்படுத்தும். சாப்ட்வேர் புரோகிராம் ஒன்றை அழிக்கையில், இதனை அழிக்கவா? இதனை மற்ற புரோகிராம்கள் பயன்படுத்தலாம் என செய்தி கிடைத்தால், அவற்றை அழிக்கக் கூடாது. ஆனால், நீங்கள் கேட்பது போல, அந்த சாப்ட்வேர் புரோகிராம் மட்டுமே பயன்படுத்தும் டி.எல்.எல். பைல்களை வைத்திருப்பதில் பயன் இல்லையே. இவற்றை நாம் எப்படி அறிந்து கொள்வது? இன்ஸ்டால் செய்யப்பட்ட சாப்ட்வேர் புரோகிராம்களை, கம்ப்யூட்டரில் இருந்து நீக்க, அதன் மெனுவிலேயே அன் இன்ஸ்டால் என்று ஒரு பிரிவு கொடுத்திருப்பார்கள். அதனைக் கிளிக் செய்வதன் மூலம், நீக்கினால், சார்ந்த டி.எல்.எல். பைல்கள் தாமாக நீங்கிவிடும். அல்லது சிகிளீனர் போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்தியும் அன் இன்ஸ்டால் செய்திடுகையில் இவை நீக்கப்படும்.

கேள்வி: ஆபீஸ் 2007, சர்வீஸ் பேக் 2 இணைத்துப் பயன்படுத்தி வருகிறேன். அடுத்த சர்வீஸ் பேக் கிடைக்குமா? அல்லது ஆபீஸ் 2010 க்கு மாறலாமா?
-டி.கமல் பிரகாஷ், கோவை.
பதில்: நல்ல நேரத்தில் இந்த கேள்வி கேட்டீர்கள். சென்ற அக்டோபர் 25ல் மைக்ரோசாப்ட் தன் ஆபீஸ் 2007 தொகுப்பிற்கான இறுதி சர்வீஸ் பேக் 3ஐ வெளியிட்டுள்ளது. இதன் அளவு 351 எம்.பி. இது தானாக நம் ஆபீஸ் தொகுப்பில் இப்போதைக்கு அப்டேட் ஆகாது. தேவைப்படுபவர்கள் http://www.microsoft.com/download /en/details.aspx?id=27838 என்ற முகவரிக்குச் சென்று டவுண்லோட் செய்து பெற்றுப் பயன்படுத்தலாம். மூன்று மாதங்கள் கழித்தே, இது தானாக அப்டேட் செய்திடும் வகையில் கம்ப்யூட்டர்களுக்கு அனுப்பப்படும்.
இதனை அடுத்து வேறு சர்வீஸ் பேக் வராது. சர்வீஸ் பேக்2, 2009ல் வெளியானது. சர்வீஸ் பேக் 2க்கான சப்போர்ட் இன்னும் ஓராண்டு தான் கிடைக்கும்.
ஆபீஸ் 2007க்கான பாதுகாப்பு சப்போர்ட், ஏப்ரல் 11, 2017 வரை மட்டுமே கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேள்வி: டாக் எக்ஸ் பார்மட்டில் உள்ள வேர்ட் டாகுமெண்ட்டை, பழைய டாக் பார்மட்டில் மாற்றுவதற்கு உதவிடும் சிறப்பான ஆன்லைன் தளம் ஒன்று தரவும். பல தளங்கள் அவற்றின் புரோகிராம் ஒன்றை டவுண்லோட் செய்திடக் கட்டாயப்படுத்து கின்றன.
-கே. உலகநாதன், திருப்பூர்.
பதில்: ஆபீஸ் 2007 தொகுப்பின் பார்மட்களை 2003 பார்மட்டுக்கு, அது வேர்ட், எக்ஸெல், பிரசன்டேஷன் என எதுவாக இருந்தாலும், ஆன்லைனிலேயே மாற்றங்களை மேற்கொள்ள உதவும் ஒரு சிறந்த தளம் www.zamzar.com. இதில் பைலை அப்லோட் செய்வது மிக எளிதாகவும், வேகமாகவும் நடைபெறு கிறது. இன்டர்பேஸ் மிகத் தெளிவாக வழி காட்டுகிறது. நம் மின்னஞ்சல் முகவரி யைக் கேட்டு வாங்கி, மாற்றப்பட்டுள்ள பைல் குறித்த தகவலை, மின்னஞ்சலுக்கு அனுப்புகிறது. ஒரு நிமிடத்திற்குள்ளாக பார்மட்டினை மாற்றி அனுப்புகிறது. மாற்றப்பட்டுள்ள பைல் கிடைக்கும் தளத்திற்கான லிங்க்கினை சில நிமிடங்களுக்குள் மின்னஞ்சலில் தருகிறது. எந்தப் பிரச்னையும் இல்லை.

கேள்வி: என் கம்ப்யூட்டரில் விண்டோஸ் எக்ஸ்பி வைத்துள்ளேன். இதில் சிஸ்டம் இயக்கம் குறித்த தகவல்களைப் பெற எந்த ஐகானை அழுத்திப் பெற வேண்டும்?
-தே. பால சுந்தரி, ஸ்ரீவில்லிபுத்தூர்.
பதில்: எந்த ஐகானையும் அழுத்த வேண்டாம். Start பட்டன் அழுத்தி Run கட்டத்தைத் தேர்ந்தெடுங்கள். இதில் CMD என டைப் செய்து என்டர் அழுத்த கருப்பு திரையில் டாஸ் ப்ராம்ப்ட் என்று சொல்லப்படும் கட்டளைப் புள்ளி கிடைக்கும். இதில் Systmeinfo என இடைவெளி விடாமல் டைப் செய்து என்டர் அழுத்தவும். இப்போது உங்கள் சிஸ்டம் படிக்கப்பட்டு, சிஸ்டம் குறித்த தகவல்கள் கிடைக்கும்.

கேள்வி: கூகுள் தன் குரோம் பிரவுசரில், தன் கூகுள் சர்ச் இஞ்சினைத் தந்திருப்பது போல, மொஸில்லா, பயர்பாக்ஸ் பிரவுசரில் என்ன தேடல் இஞ்சின் தரப்பட்டுள்ளது. எப்படி இதனைப் பெறுவது?
-எஸ். கே. ரோஸ்மேரி, காரைக்கால்.
பதில்: பயர்பாக்ஸ் பிரவுசரில் இத்தகைய சர்ச் இஞ்சின் இல்லை. அதற்கான ஆட் ஆன் தொகுப்பு ஒன்று இணையத்தில் கிடைக்கிறது. மிகவும் வேகமாகத் தகவல்களைத் தேடித் தருகிறது. இதனை பயர்பாக்ஸ் பிரவுசருடன் இணைத்து இயக்கலாம். இதன் பெயர் சைபர் சர்ச் (Cybersearch).
1.உங்கள் பயர்பாக்ஸ் பிரவுசரை முதலில் இயக்கவும்.
2. அடுத்து சைபர் சர்ச் ஆட் ஆன் தொகுப்பை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திட வேண்டும். இதற்கு https://addons.mozilla.org/enUS/firefox/addon/7931 என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். அங்கு “add to Firefox” என்று இருக்கும் பச்சை வண்ண பட்டனில் கிளிக் செய்திடவும். தானாக ஆட் ஆன் இணைக்கப்படும். இனி மீண்டும் பயர்பாக்ஸ் பிரவுசரை மூடி மீண்டும் திறக்கவும். இப்போது சைபர் சர்ச் இயக்கத்தினைத் தர பயர்பாக்ஸ் தயாராக இருக்கும்.
3. அட்ரஸ் பாரில் டைப் செய்திடும்போதே, தளங்கள் வேகமாகத் தேடித் தரப்படுவதனைக் காணலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
babu - singapore,இந்தியா
12-நவ-201107:59:41 IST Report Abuse
babu எனது லேப்டாப் ஐ தொடர்ந்து பயன் படுத்தும் போது, உதாரணத்திற்கு படம் பார்க்கும் போது சிறிது நேரம் கழித்து ஒலி இல் சிறிய அதிர்வு போலவும் வீடியோ வில் ஸ்லொவ் மோசன் போலவும் தோன்றுகிறது. மீண்டும் ரீ ஸ்டார்ட் செய்தல் தான் சரி ஆகிறது.இது என்ன பிரச்சினை? எப்படி இதனை தடுக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X