நோக்கியாவின் விண்டோஸ் போன் லூமியா 800
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 நவ
2011
00:00

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைத் தன் மொபைல் போன்களில் அமைத்துத் தன் எதிர்கால வர்த்தகத்தினை மீண்டும் முன்னுக்குக் கொண்டு செல்ல நோக்கியா முயற்சி செய்கிறது.
அந்த வகையில், அக்டோபர் இறுதியில் தன் விண்டோஸ் மொபைல் போனாக லூமியா 800 என்ற மாடலை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. மீகோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் நோக்கியா என்9 போல இது வடிவமைக்கப் பட்டுள்ளது. ஆனால் சில மாற்றங்களும் இதில் உள்ளன.
என்9, ஆண்ட்ராய்ட் கேலக்ஸி நெக்ஸஸ், ஐ போன் 4எஸ் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில், லூமியா 800 சற்று கூடுதல் வேகம் கொண்ட ப்ராசசரைக் கொண்டுள்ளது. ஆனால், மற்றவற்றில் சிறிது பின்தங்கியே உள்ளது.
ஐபோன் 4எஸ் -3.5 அங்குலம், என்9-3.7 அங்குலம் என்றபடி அமைக்கப்பட்டிருக்கையில், இதன் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே திரை 3.7 அங்குலம் அகலத்தில் உள்ளது.கேலக்ஸி நெக்ஸஸ் திரை 4.65 அங்குலம் என்பது குறிப்பிடத்தக்கது. திரையின் ரெசல்யூசன் 800 x 480 என்ற படி மற்றவற்றிடமிருந்து குறைவானதாகவே உள்ளது.
இதன் தடிமனும் மற்றவற்றைக் காட்டிலும் கூடுதலாக 12.1 மிமீ அளவில் அமைந்துள்ளது. இதன் மொத்த பரிமாணம் 117 x 61 x 12 மிமீ. இதன் எடை 142 கிராம்.
லூமியாவின் ப்ராசசர் 1.4 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கக் கூடியது. இதன் ராம் நினைவகம் 512 எம்பி. உள் நினைவகம் விரிவுபடுத்த முடியாத 16ஜிபி அளவிலானது. மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் இதில் இல்லை.
இதன் கேமரா 8 எம்பி திறனுடன், கார்ல் ஸெய்ஸ் லென்ஸ் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வீடியோ அழைப்புகளுக்கு முன்புறமாக இதில் கேமரா இல்லை.
ஆண்ட்ராய்ட் இயக்கம் இல்லாத, ஐ- போன் அல்லாத, புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் மொபைல் போன் தேடுபவர்களுக்கு, நோக்கியாவின் லூமியா 800 ஒரு நல்ல போனாக இருக்கும். இதன் விண்டோஸ் மாங்கோ, இதனைப் பயன்படுத்துபவர்களுக்கு, அனைத்து வழிகளிலும் புதிய அனுபவத்தினைத் தரும் என்பது உறுதி. பதியப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9, ஸ்கை ட்ரைவில் 25 ஜிபி டேட்டா பதிய அனுமதி, எக்ஸ் பாக்ஸ் லைவ் இணைவு, மியூசிக் மற்றும் வீடியோ பிளேயர், 1450 mAh திறன் கொண்ட பேட்டரி ஆகியவை இன்னும் சில சிறப்புகளாகும். கருப்பு, சியான் மற்றும் மெஜந்தா வண்ணங்களில் இந்த மாடல் கிடைக்கும்.
மேலே குறிக்கப்பட்டுள்ள அனைத்து திறன்களிலும் சற்று குறைவாகத்திறன் கொண்டதாக லூமியா 710 என்ற மாடலும் அறிமுகமாகியுள்ளது. விரைவில் இந்தியாவிலும் இவை அறிமுகமாகும். இவற்றின் விலை அப்போது தெரியவரும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X