எத்தனை வாடிக்கையாளர்கள்? எது உண்மை?
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 நவ
2011
00:00

ஒவ்வொரு மாதமும் மொபைல் சந்தாதாரர் எண்ணிக்கை,இந்தியாவில், ஒரு கோடி எண்ணிக்கைக்கு மேலாகவே அதிகரித்துக் கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியிடப்படுகின்றன. ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் நிறுவனம் விற்பனை செய்த சிம்களின் எண்ணிக்கையில் புதிய சந்தாதாரர்களின் எண்ணிக்கையை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. உண்மையில் என்ன நடக்கிறது?
அதிகார பூர்வமாக இந்தியாவில் மொபைல் சந்தாதாரர் எண்ணிக்கை 90 கோடி என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது. ஆனால் அரசு, இவர்களில் 30 கோடி பேர் மொபைல் பயன்படுத்துவதே இல்லை என்கிறது. வெளியிடப்படும் தகவல்களின் படி, நான்கு பேரில் மூன்று பேர் மொபைல் பயன் படுத்துவதாகத் தெரிகிறது. ஆனால், உண்மையிலேயே இரண்டில் ஒருவர் தான் பயன்படுத்துகின்றனர். நிறைய எண்கள் பயன்படுத்தப்படுவதே இல்லை. பல பழைய எண்கள் புதிய சந்தாதாரர்களுக்கு வழங்கப் படுகையில், அவை புதியவை என்ற கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ஆனால் மொபைல் சேவை நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்கள் பலர், வாழ்நாள் முழுவதும் பயன்படுத்த என இணைப்பு களையும் அவற்றிற்கான எண்களையும் வாங்கி உள்ளனர். இவர்களின் எண்களை நீக்க முடியாது என்கின்றனர்.
இந்த நிறுவனங்களின் இந்த செயல்பாட்டில் இன்னொரு மறைமுக நோக்கமும் உள்ளதாக இந்த துறையில் பணியாற்றும் பலர் கூறுகின்றனர். ஸ்பெக்ட்ரம் ஒதுக் கீட்டில் கூடுதல் அலைவரிசை பெறுவதற் காக, இந்த நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகமாகக் காட்டி வருகின்றனர் என்பதே. இது நிச்சயம் உண்மையாக இருக்கலாம். அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர் களைக் கொண்டிருந்தால் தான், அலைவரிசை யின் அளவை கூடுதலாகப் பெற முடியும்.
எது, எப்படியோ, வாசகர்கள் ஒவ்வொரு வரும் தாங்கள் வாங்கிய மொபைல் சேவை எண்கள் அனைத்தை யும் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனரா என்பதனைச் சுய சோதனை செய்தாலே, இந்த எண்ணிக் கைக் குழப்பத்தின் பின்னணியைத் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement

 

மேலும் மொபைல் மலர் செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P .Mani - Obajana,நைஜீரியா
14-நவ-201119:24:20 IST Report Abuse
P .Mani ஒவ்வொரு கம்பெனியும், தாங்க இலவசமாக வாடிக்கையாளர்களின் கைகளில் பலவந்தமாக திணித்த சிம் கார்டு களை எல்லாம் கணக்கு போட்டால் அது பெரிய தப்பு கணக்கு ஆகும் உண்மையான கணக்கு போட போனால், ஒவ்வொரு கம்பெனியும் மொத்தம் எவ்வளவு மணி நேரங்கள் பேசுவதற்கு உபயோகப்படுத்தி இருக்கிறார்கள் (local / STD / ISD ) என தர வாரியாக கணக்கு போட்டால் பிழைத்த கொள்ளலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X