இந்த வார டவுண்லோட் விண்ஸிப் புதிய பதிப்பு 16
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 நவ
2011
00:00

பைல்களைச் சுருக்கி, பதிந்து காப்பதில் வெகு காலமாகப் பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர் களால் பயன்படுத்தப்படும் சாப்ட்வேர் விண்ஸிப். இதன் பதிப்பு 16 அண்மையில் வெளியாகியுள்ளது. இதனை டவுண்லோட் செய்திட http://www.winzip.com/downwz.htm என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். இதன் புதிய சிறப்புகளை இங்கு காணலாம்.
இந்த பதிப்பில் 64 பிட் இஞ்சின் பயன்படுத்தப்படுவதால், சுருக்கி விரிக்கும் பணி தற்போது அதிக வேகமாகவும், எளிதாகவும் மேற்கொள்ளப்படுகிறது. பழைய சிறப்பு வசதிகள் தொடர்ந்து கிடைக்கின்றன. இமேஜ்கள் 25% சுருக்கப் படுகின்றன. பாதுகாப்பு தரும் வகையில் AES encryption மற்றும் பாஸ்வேர்ட் பயன் படுத்தும் வசதி கிடைக்கிறது.
சுருக்கப்பட்ட பைல் பெரியதாக இருந்தால், இமெயிலில் அனுப்புவது இயலாது. இதற்கு புதியதாக Zip Send என்ற வசதி தரப்பட்டுள்ளது. You Send It இணைய தளத்தின் கூட்டுடன் 50 எம்.பி. சுருக்கப்பட்ட பைல் அனுப்பப்படுகிறது. நீங்கள் ஏற்கனவே Zip Send Pro பயனாளர் என்றால், இந்த அளவு 2 ஜிபி வரை அனுமதிக்கப்படுகிறது.
அடுத்த புதிய வசதி Zip Share. இதன் மூலம் ஸிப் செய்யப்பட்ட பைலை கிளவ்ட் கம்ப்யூட்டிங் வசதிக்கு அனுப்பி விட்டு, அதற்கான லிங்க் ஒன்றை பேஸ் புக் தளத்தில் நம் நண்பர்கள் டவுண்லோட் செய்திட வசதியாக அனுப்பலாம்.
எதிர்காலத்தில் பயன்படுத்தக் கூடிய வகையில் “Zip to Bluray” என்ற ஒரு வசதி கிடைக்கிறது. காத்து வைத்திட சுருக்கப்பட்ட டேட்டாவினை 50 ஜிபி அளவில் ஒரு புளுரே டிஸ்க்கில் இதன் மூலம் பதிய முடியும். புளுரே டிஸ்க் பயன்பாடு பரவலாகக் கிடைக்கையில் இதனை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மொத்தத்தில், ஏற்கனவே பல வசதிகளைக் கொண்டுள்ள விண்ஸிப் புரோகிராமில் கூடுதல் பயன்பாடு பல சேர்க்கப்பட்டுள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X