ஒரு சின்ன பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 நவ
2011
00:00

விண்டோஸ் 7 இயக்கத்திற்கு மாறிய என் போன்றோருக்குப் பல புதிய வசதிகளை உங்கள் கட்டுரை "விண்டோஸ் 7 ட்யூனிங்' கற்றுக் கொடுத்தது. தயவு செய்து தொடர்ந்து இது போன்ற ட்ரிக்ஸ் மற்றும் டிப்ஸ்களை வாரந்தோறும் 4 பக்கங்களாவது வெளியிடவும்.
-எஸ். திருமூர்த்தி, போடிநாயக்கனூர்.

விண்டோஸ் ட்யூனிங் என்ற தலைப்பின் கீழ் தந்துள்ள ஒவ்வொரு தகவலும், மிக மிகப் பயனுள்ளவை. எழுதிய ஆசிரியருக்குப் பாராட்டுக்களும் நன்றியும்.
-பொறியாளர் கே. சட்டநாதன், திருப்பூர்.

விண்டோஸ் ரீ இன்ஸ்டால் செய்த பின்னர், ட்ரைவர்களைத் தேடி மனம் பதைப்பதும், பின் இன்னொரு கம்ப்யூட்டர் மூலம் ட்ரைவர்களை டவுண்லோட் செய்வதும் பெரிய தொல்லை. இதற்கான நல்ல தீர்வாக நீங்கள் தகவல் தந்துள்ள டபுள் ட்ரைவர் புரோகிராம் அமைந்துள்ளது.
-டி. அவினாஷ் குமார், சென்னை.

நான் ஒரு கம்ப்யூட்டர் டெக்னீஷியன். என் அனுபவத்தில், என்னை ரீ இன்ஸ்டால் செய்திட அழைக்கும் யாருமே ட்ரைவர் புரோகிராம் உள்ள சிடிக்களை வைத்திருப் பதில்லை. நீங்கள் தந்துள்ள வழிகாட்டுதலை எல்லாரும் பின்பற்றினால் மிகவும் நல்லது.
-உ. யோகேஷ், கோவை.

விண்டோஸ் தொடக்க ஒலி நன்றாகத்தானே உள்ளது. அதை ஏன் நிறுத்த வேண்டும். இதற்குப் பதிலாக, இந்த சவுண்ட் பைல்கள் எல்லாம் எங்குள்ளது என்றும், அவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்றும் ஒரு கட்டுரை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
-ஆர். தேவகி, சென்னை.

தெரிந்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில் கலவையாகத் தந்துள்ள அனைத்தும் சரியான அட்வைஸ், சார். சராசரி மனிதனின் மனத்தைப் படித்துக் கூறியவையாக உள்ளன.
-மா. சாரங்கநாதன், ஆசிரியர், மயிலாடுதுறை.

எப்போதும் பயன்படுத்தப்படும் தொகுப்பு களில் ஒன்று சிகிளீனர். இன்னும் இலவசமாகக் கிடைக்கும் இதனைப் பற்றிய அப்டேட்டட் தகவலுக்கு நன்றி.
-ஆர். அய்யப்ப சாமி, புதுச்சேரி.

பைல்கள் பற்றி அறியாத பல தகவல்கள் இப்போது தெரிந்து கொண்டேன். நூற்றுக் கணக்கில் இந்த பார்மட்டுகள் இருப்பதாக ஓர் இதழில் படித்திருக்கிறேன். எனவே விட்டுப் போனவற்றையும் எழுதுங்கள்.
-மா. துரைராஜ், சிதம்பரம்.

கம்ப்யூட்டரிலும், மொபைல் போனிலும் விண்டோஸ் சிஸ்டம் இருந்தால், நமக்கு எளிதாகத்தானே இருக்கும். அதிகக் கட்டணம் இன்றி இது கிடைத்தால் நன்றாக இருக்கும்.
-கா. இளங்கோவன், உசிலம்பட்டி.

தம்ப்ஸ். டிபி பைல் குறித்த பதில் என் நீண்ட நாள் சந்தேகத்தினைப் போக்கியது.
-கே. தேவகி, விருதுநகர்.

நீங்கள் தகவல் தந்த ஸம்ஸார் தளம் சென்று வேர்ட் டாகுமெண்ட்டின் பார்மட்டை மாற்றினேன். மிக எளிது மட்டுமின்றி, விரைவாகவும் பைல் கிடைத்தது. ஓரிரு நிமிடங்களிலேயே அனைத்து வேலைகளும் முடிந்தன. நன்றி.
-ஆ. குருசாமி, மதுரை.

விண்டோஸ் 7 ட்யூன் செய்தால், உறக்கம் வந்திடுமா என்ன? ஏன் ஒரு பெண் கீ போர்டில் தலை சாய்த்து உறங்குகிறார்போல் படம் போட்டுள்ளீர்கள்?
-க.மாதவி, விழுப்புரம்.

சிறிய நகரங்களில் இன்டர்நெட் பயன்பாடு, பெரிய நகரங்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளது என்று அறிய மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. இது நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.
-பேரா. டாக்டர் எஸ். செல்வராஜ், மதுரை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SELVA SANKAR MURUGESAN - TIRUNELVELI,இந்தியா
18-நவ-201103:34:03 IST Report Abuse
SELVA SANKAR MURUGESAN நிச்சயமாக உதவும் கேள்விகள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X