கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 நவ
2011
00:00

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் டேட்டாவினை, அவை ஒவ்வொன்றுக்குப் பின்னும் கமா கொடுத்து அமைத்தால், பின் டேபிள் மெனு டேபிள் அமைக்கலாம் என்று படித்தேன். ஆனால் என் கம்ப்யூட்டரில் வரவில்லை. என்ன கட்டளை கொடுக்க வேண்டும்?
-டி.ஆப்ரஹாம் சுந்தரம், நிலக்கோட்டை.
பதில்: முதலில் நீங்கள் கூறும் டேட்டாவினைச் சரியாக டைப் செய்து, ஒவ்வொன்றை அடுத்து கமா அல்லது வேறு அடையாளம் இருப்பதனை உறுதி செய்து கொள்ளவும். பின்னர், அந்த டெக்ஸ்ட் முழுவதையும் தேர்ந்தெடுத்து டேபிள் மெனுவைத் திறக்கவும். இதில் Convert என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். இதன் பின் கிடைக்கும் ஆப்ஷன்களில் Text to Table என்பதில் கிளிக் செய்திடவும். பின் ஓகே அழுத்த டேட்டா அனைத்தும் டேபிளில் அமைந்துவிடும். பொறுமையாக ஒவ்வொரு ஸ்டெப்பாக மேற்கொள்ளவும். உங்கள் கம்ப்யூட்டரிலும் டேட்டா டேபிளில் அமையும்.

கேள்வி: நான் நிறைய பைல்களை டெஸ்க்டாப்பில் வைத்து இயக்குகிறேன். இதனால், அடிக்கடி, டெஸ்க்டாப்பில் நிறைய ஐகான்கள் உள்ளன. கிளீன் செய்கிறாயா? என்ற செய்தி வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்த முடியாதா?
-செ. பாலச் சந்திரன், மதுரை.
பதில்: டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் (Properties) தேர்ந்தெடுங்கள். டிஸ்பிளே ப்ராப்பர்ட்டீஸ் (Display Properties) திரை கிடைக்கும். இதில் டெக்ஸ்க்டாப் (Desktop) டேப்பினைத் தேர்ந்தெடுங்கள். அதில் கஸ்டமைஸ் டெஸ்க் டாப் (Customize Desktop) என்ற பட்டனைக் கிளிக் செய்திடுங்கள். அடுத்து டெஸ்க்டாப் ஐட்டம்ஸ் (Desktop Items) என்று ஒரு புதிய விண்டோ கிடைக்கும். இதில் “Run Desktop Cleanup Wizard every 60 days” என்று உள்ள இடத்தில் காணப்படும் கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்து விடுங்கள். ஓகே கிளிக் செய்திடுங்கள். இனி எந்த எச்சரிக்கை செய்தியும் வராது.

கேள்வி: சில வேளைகளில் என் கம்ப்யூட்டரில் ரன் டைம் எர்ரர் 70 என எனக்குக் கிடைக்கிறது. ஆனால், அதனால், தொடர்ந்து கம்ப்யூட்டரில் பணி ஆற்றுவதில் பிரச்னை இல்லை. இது எதனைக் குறிக்கிறது?
-க. சிவசுப்பிரமணியன், சென்னை.
பதில்: இது போல பாப் அப் பாக்ஸ் ஒன்று எழுந்து வந்து, ஏதேனும் ஒரு செய்தியைக் கொடுத்தால், அதனை அலட்சியப்படுத்தாமல், அந்த செய்தியினை அப்படியே காப்பி செய்திடவும். பின்னர், இணையத்தில் தேடல் சாதனம் ஒன்றில் இதனை அமைத்து என்டர் செய்தால், ஏற்கனவே இது போல பிழைச் செய்தி பெற்றவர்கள் இதன் தன்மை குறித்து தகவல்களை இணையத்தில் தந்திருக்கலாம். தீர்வுகளும் தரப்படலாம். பொதுவாக, எந்த சாப்ட்வேர் அப்ளிகேஷன் இயக்குவதில் இந்த பிரச்னை வருகிறதோ, அதனைத் தயாரித்த நிறுவனம், இது போன்ற பிழைச் செய்திகளைப் பட்டிய லிட்டு, அவற்றிற் கான தீர்வினையும் தரும்.

கேள்வி: எம்.எஸ். ஆபீஸ் 2007 தொகுப்பிற்கான, இரண்டாவது சர்வீஸ் பேக் வெளிவந்துள்ளதாகவும், அதனைத் தற்போது நாமாக, டவுண்லோட் செய்திட வேண்டும் எனவும் கேள்விப் பட்டேன். இதற்கான இணைய தள முகவரி எது?
-கே. எஸ். ரிஷி, கோவை.
பதில்: இன்னும் மூன்று மாதங்களுக்கு இந்த சர்வீஸ் பேக் தானாக உங்கள் கம்ப்யூட்டரில் அப்டேட் ஆகாது. இதனை நீங்கள் கீழ்க்காணும் முகவரியில் உள்ள தளத்தில் இருந்து பெறலாம்.
http://www.microsoft.com/download/en/details.aspx?displaylang=en&id=5

கேள்வி: சில புரோகிராம்களின் ஐகான்கள் மீதாகக் கர்சரைக் கொண்டு சென்றால், அந்த புரோகிராம் குறித்த சிறிய குறிப்பு காட்டப் படுகிறது. ஆனால் பல புரோகிராம்களுக்கு இது போல் கிடைப்பதில்லை. இதனை எப்படிக் கொண்டு வருவது?
-சி. கமலா, திருப்பூர்.
பதில்: உண்மைதான். ஐகான் அல்லது டூல்பார் மீது கொண்டு சென்றால், சிறிய விளக்கம் தரப்படும். நீங்கள் விரும்பும் புரோகிராம் அல்லது ஐகான் குறித்த தகவல் உங்களுக்குத் தர வேண்டும் என்றால், நீங்களே அதனை அமைக்கலாம். அந்த ஷார்ட்கட் அல்லது ஐகான் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில், ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். அது ஷார்ட்கட் ஐகானாக இருந்தால், ஷார்ட்கட் டேப்பின் மீது கிளிக் செய்தால், கிடைக்கும் விண்டோவில் கமெண்ட் (Comment) என்று ஒரு கட்டம் இருக்கும். அதில் நீங்கள் விரும்பும் வகையில் குறிப்பினை எழுதி, பின்னர் அப்ளை (Apply) பட்டனிலும் ஓகே பட்டனிலும் கிளிக் செய்து வெளியேறவும்.
இதுவே பைல் ஐகானாக இருந்தால், ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுத்து, பின்னர் சம்மரி (Summary) என்ற பிரிவில் உள்ள Comment பாக்ஸில் நீங்கள் விரும்புவதை எழுதி, அப்ளை (Apply) கிளிக் செய்து வெளியேறினால், நீங்கள் எழுதிய கமென்ட் மொத்த தகவல் கட்டத்தில் மற்ற தகவல்களுடன் கிடைக்கும்.

கேள்வி:விண்டோஸ் 7 சிஸ்டத்தில் அமைந்துள்ள கம்ப்யூட்டர் ஒன்றை வாங்கிப் பயன்படுத்தி வருகிறேன். இதில் டிபிராக் செய்வதற்கான கட்டளை எந்த மெனுவில் உள்ளது? எக்ஸ்பியில் உள்ளபடி கிடைக்க வில்லை. விளக்கம் தரவும்.
-கே.திலீப், குடிமங்கலம்.
பதில்: விண்டோஸ் 7 இயக்கத்தில் கூடுதல் வசதிகளுடன் டிபிராக் கொடுக் கப்பட்டுள்ளது. ஆனால் இதனைப் பயன்படுத்தச் சற்று கவனமாக ஸ்டெப்ஸ் மேற்கொள்ள வேண்டும். கவலைப் படாதீர்கள். இதோ நீங்கள் கேட்ட வழி. Start கிளிக் செய்து search box இல், cmd என டைப் செய்திடவும். இங்கு மேலாகக் காட்டப்படும் பட்டியலில் cmd ஐகான் மீது ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் “Run as administrator” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது command விண்டோ திறக்கப்படும். இங்கு defrag என டைப் செய்து என்டர் தட்டவும். இப்போது டிபிராக் கட்டளையுடன் பயன்படுத்த, அதன் செயல்பாட்டி னை வரையறை செய்திட, நிறைய ஸ்விட்ச்கள் காட்டப்படும். டிபிராக் கட்டளையை ஒரு (/) உடன் நீங்கள் விரும்பும் ஸ்விட்சுடன் அமைத்து என்டர் தட்டவும். எடுத்துக்காட்டாக, சி ட்ரைவ் முழுமையும் டிபிராக் செய்திட defrag/c எனக் கொடுக்கவும். இந்தக் கட்டளையுடன் ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்விட்ச்களையும் இணைத்துக் கொடுக்கலாம். எடுத்துக்காட்டாக defrag /c /h எனவும் தரலாம். இப்படியே பட்டியலில் தரப்பட்டுள்ள ஸ்விட்சுகளில் பலவற்றை இணைத்து, கொடுத்து, டிபிராக் கட்டளை பயன்படுத்துவதில் சாம்பியனாகலாம்.

கேள்வி: எந்த அலுவலகம் அல்லது நண்பர்கள் இல்லம், கல்லூரி மாணவர்கள் விடுதி சென்றாலும், கம்ப்யூட்டர் களிலும் லேப்டாப் களிலும் விண்டோஸ் எக்ஸ்பி தான் அதிகமாகப் பயன்படுத்துவது தெரிகிறது. ஆனால் நீங்கள் அது தொடர்ந்து குறைந்து வருவதாகவும், விண்டோஸ் 7க்கு மாற வேண்டும் எனவும் எழுதுகிறீர்கள். உண்மை நிலை என்ன?
-கே. காஞ்சனா பிரகாஷ், விருதுநகர்.
பதில்: கம்ப்யூட்டர் மலரில் இது குறித்து வந்த கட்டுரையை நன்கு படித்துப் பார்க்கவும். விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு நாம் மாற வேண்டியதற்கான காரணங்கள் பல தரப்பட்டுள்ளன. விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திலே நீங்கள் விரும்பினால், எந்த சூழ்நிலையில் உங்கள் கம்ப்யூட்டர் இயங்கும் என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
பெரும்பாலான கம்ப்யூட்டர்களில் நீங்கள் எக்ஸ்பியைப் பார்த்தாலும், பன்னாட்டளவில், தற்போது விண்டோஸ் 7, எக்ஸ்பியைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையில் பயன்படுத்தப்படுகிறது என்பதே உண்மை. ஸ்டேட் கவுண்ட்டர் என்ற ஆய்வு அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. எக்ஸ்பி 38.5%, விண்டோஸ் 7 - 40.5% என அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் ஆசிய நாடுகளில், எக்ஸ்பி 55%, விண்7 - 36% பயன்படுத்தப் படுகிறது. எனவே உங்களுடைய கூற்று இன்றுவரை உண்மையே.
எது எப்படி இருந்தாலும், கம்ப்யூட்டர் பயன்பாட்டினைப் பொறுத்தவரை, நீங்கள் அப்டேட்டாக இருக்க விரும் பினால், விண்டோஸ் 7 மாறிக் கொள்வதே நல்லதே.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sasikala Naagaraaj - Chennai,இந்தியா
18-நவ-201122:39:07 IST Report Abuse
Sasikala Naagaraaj Hi Sasikala here from Chennai. I am using Hp Laptop and i am using windows xp as operating system. But when i switch on my laptop before entering the password i am seeing under administrator account it was showing me you have 600 unread mail message. everyday it was increasing.But whenever i open my mail i use to signout it properly. i dont know how to delete it.can you please give me a good solution.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X