இந்த வார டவுண்லோட் போட்டோ பைல் மாற்ற
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 நவ
2011
00:00

டிஜிட்டல் கேமராக்களைப் பயன்படுத்துவது பெருகி வரும் இந்நாளில், அவற்றைக் கையாள்வதிலும் பல தேவைகள் அதிகரிக்கின்றன. போட்டோக்களின் அளவுகளை மாற்றவும், போட்டோ பைல்களின் பார்மட்களை மாற்றவும் விரும்புகிறோம். இவற்றை ஒவ்வொன்றாக படங்களுக்கான அப்ளிகேஷன்களில் திறந்து நம் விருப்பத்திற்கேற்ப மாறுதல் செய்திட நமக்கு அதிக நேரம் எடுக்கிறது. இந்த தேவையை வேகமாக நமக்கு நிறைவேற்றும் புரோகிராம் ஒன்றை அண்மையில் இணையத்தில் பார்க்க நேர்ந்தது. அதன் பெயர் Fast stone Photo Resizer. இந்த புரோகிராமினைப் பயன்படுத்தி, போட்டோக்களின் அளவு மற்றும் பார்மட்களை மிக எளிதாகவும், வேகமாகவும் மாற்றலாம். இது போல பல புரோகிராம்கள் இருந்தாலும், இதன் வேகம் குறிப்பிடத்தக்கதாகவும், செயல் திறன் நம்பிக்கை கொள்ளக் கூடியதாகவும் உள்ளது. இதனை http://www.faststone.org/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் மூலம் போட்டோக்களில் ஓரளவிற்கு எடிட்டிங் வேலையையும் மேற்கொள்ளலாம்; சுழற்றி வைக்கலாம்.
மேலே குறிப்பிட்ட தளம் சென்றவுடன், அந்த இணையப் பக்கத்தில், கீழாக Fast Stone Photo Resizer இருப்பதனைக் காணலாம். இதனை உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்து கொள்ளவும். டவுண்லோட் செய்தவுடன், டெஸ்க்டாப் திரையில் ஒரு ஐகான் காணப்படும். இதன் மீது கிளிக் செய்து, இந்த அப்ளிகேஷனைத் திறக்கவும். முகப்புப் பக்கத்திலேயே, நீங்கள் மாற்றம் மேற்கொள்ள விரும்பும் போட்டோ பைல்களைத் தேர்ந்தெடுக்க வசதி கிடைக்கும். போட்டோக்களைத் தேர்ந்தெடுக்கலாம். ஒவ்வொன்றாகத் தேர்ந்தெடுத்து Add பட்டன் கிளிக் செய்தால் போதும். தேர்ந்தெடுத்து முடித்த பின்னர், அடுத்து இந்த படங்களில் என்ன மாற்றம் செய்திட விரும்புகிறீர்கள் என்று காட்ட வேண்டும். போட்டோக்களின் அளவினை மாற்ற விரும்பினால், Advanced Options பட்டன் கிளிக் செய்து, Resize பாக்ஸ் தேர்ந்தெடுக்க வேண்டும். இது மேலாக இடது புறம் காணப்படும். இதில் Standard Size என்பதைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது நீங்கள் விரும்பும் அளவைக் குறிப்பிடலாம். அளவு குறித்த தேர்வை அமைத்த பின்னர், ஓகே பட்டனில் கிளிக் செய்திடலாம். அடுத்து, எந்த போல்டரில் அளவு மாற்றப்பட்ட படங்கள் சேவ் செய்யப்பட வேண்டும் என்பதனைக் காட்டவேண்டும். மீண்டும் Browse கிளிக் செய்தால் Browse For Folder என்ற விண்டோ திறக்கப்படும். இதில் போல்டரைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்தால், தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டோக்கள் அனைத்தும், குறிப்பிட்ட அளவில் மாற்றப்பட்டு சேவ் செய்யப்படும். இதே போல மொத்தமாகவும் பார்மட் மாற்றங்களை மேற்கொள்ளலாம். இந்த சாப்ட்வேர் புரோகிராமினைச் சோதனை செய்வதற்காக, 106 போட்டோக்களைத் தேர்ந்தெடுத்து அளவை மாற்றினேன். முதலில் இவற்றிற்கு 250 எம்பி இடம் தேவைப்பட்டது. அளவு மாற்றியவுடன் இவை எடுத்துக் கொண்ட இட அளவு 16.9 எம்.பி. எடுத்துக் கொண்ட நேரம் 9 நிமிடங்களே. இணையத்திற்கு அப்லோட் செய்து மாற்றியிருந்தால், நிச்சயம் அதிக நேரம் ஆகி இருக்கும். அடிக்கடி போட்டோக்களைக் கையாள்பவர்கள் இந்த அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பினைப் பயன்படுத்தலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயprakaash - uaedubai,இந்தியா
02-டிச-201120:34:15 IST Report Abuse
ஜெயprakaash good news
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X