மொபைல் கதிர் வீச்சு: அரசின் அதிரடி விதிகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 டிச
2011
00:00

மொபைல் போன் பயன்படுத்து கையில் ஏற்படும் கதிர்வீச்சு குறித்து நிபந்தனைகள் விதிப்பதில் அரசு கடுமையான முடிவிற்கு வந்துள்ளது. இதனால் மொபைல் போன்களின் விலை உயரும் வாய்ப்பு உள்ளது. அதிகக் கதிர்வீச்சு உள்ள மொபைல் போன்களை இனி விற்பனை செய்திட முடியாது.
இந்தியாவில் மொபைல் போன் பயன்பாடு அதிகரிப்பதனால், மக்கள் நலம் குறித்து இந்த நடவடிக்கைய அரசு மேற்கொள்கிறது. இந்த கதிர்வீச்சினை நம் உடலில் உள்ள திசுக்கள் அடையும் அளவை அடிப்படையாகக் கொண்டு இது தீர்மானிக்கப்படுகிறது. இதனை எஸ்.ஏ.ஆர். ரேட் (SAR - Specific Absorption Rate) எனக் கூறுகின்றனர். இது Watt per Kg என அளக்கப்படுகிறது. இதுவரை ஐரோப்பாவில் உள்ள நடைமுறைப்படி 2W/Kg மேலாகக் கதிர்வீச்சு உள்ள மொபைல் போன்கள் மட்டுமே தடை செய்யப்பட்டன. தற்போது அமெரிக்க நடைமுறையினைப் பின்பற்றி இது 1.6W/Kg என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த அளவிற்கும் குறைவாக கதிர்வீச்சு உள்ள மொபைல் போன்களை மட்டுமே, இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்திட முடியும். இங்கே தயாரிக்கப்படும் போன்களும் இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டே இருக்க வேண்டும்.
அரசு விதிகளின்படி மொபைல் போன் ஒன்றின் கதிர்வீச்சு, அந்த போன், அதனுடன் தரப்படும் உதவிக் குறிப்பு புத்தகம் ஆகியவற்றில் குறிப்பிடப்பட வேண்டும். இவை தகவல் தொடர்பு துறை மற்றும் மொபைல் போன் நிறுவனங்களின் இணைய தளங்களிலும் தகவலாகத் தரப்பட வேண்டும். மொபைல் போன்களை விற்பனை செய்திடும் கடைகளிலும், பொதுமக்கள் பார்த்து அறிந்து கொள்ளும் வகையில் இவை அறிவிக்கப்பட வேண்டும்.
இதே போல மொபைல் போன் டவர்களில் ஏற்படும் கதிர்வீச்சும் கட்டுப்படுத்தப் படுகிறது. தற்போதைய அனுமதிக்கப் பட்ட அளவு மேலும் 10% குறைக்கப்படுகிறது.
இனி விற்பனை செய்யப்படும் மொபைல் போன்களுடன், போன்களைக் கைகளில் வைத்துப் பேசாமல் தள்ளி வைத்து, அதனை ஹெட்செட் ஒன்றுடன் இணைத்துப் பேச உதவிடும் வகையில், போனுடன் ஹேண்ட்ஸ் பிரீ ஹெட்செட் ஒன்று கட்டாயமாக வழங்கப்பட வேண்டும். இதனால், மொபைல் போன் விலை உயரும் வாய்ப்பு உள்ளது.
இன்னும் இந்த விதிமுறைகள் அறிவிக்கப் படாததால், மொபைல் போன் நிறுவனங் கள் இது குறித்த கருத்துக்களைத் தெரிவிக்கவில்லை. பெரும்பாலான சீன மொபைல்கள் மட்டுமே இந்த கதிர்வீச்சு அளவை மீறி இருப்பதாக ஒரு கருத்து மக்களிடையே நிலவி வருகிறது. மற்ற வெளிநாட்டு நிறுவனங்களின் போன்கள் அனைத்தும் இந்த விதிமுறைகளை ஏற்கனவே பின்பற்றி வருவதால், அவற்றிற்கு பாதிப்பு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெங்கடேசன் - cuddalore,இந்தியா
05-டிச-201110:52:24 IST Report Abuse
வெங்கடேசன் மொபைல் போன் கதிர் விசினால் இன்றைய வளர்ந்து வரும் நாடுகளில் மனிதர்கள் மட்டும் மின்றி பறவைகள் விலங்குகள் போன்றவைகள் மிக அதிகளவில் பாதிக்கபடுகின்றன. இதனால் மிக அறிய வகை உயிர் அழிந்து வருகின்றன. இதனை அரசு விரைவில் இதற்கு ஒரு சட்டம் கொண்டுவர வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X