ஒரு சின்ன பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 டிச
2011
00:00

நீங்கள் குறிப்பிட்ட மால்வேர் பைட்ஸ் என்னும் புரோகிராம் மிக அருமையாக வேலை செய்கிறது. குழப்பம் இன்றி வழி நடத்துகிறது. சிறிது அதிக நேரம் ஸ்கேன் செய்திட எடுத்துக் கொண்டாலும், மிகவும் பயனுள்ள புரோகிராம்.
-எஸ்.கே. இஸ்மாயில், விழுப்புரம்.

டூப்ளிகேட் பைல்கள் உருவாவதற்கு நாம் தான் முக்கிய காரணம். இந்த பிழையைச் சரி செய்திட நீங்கள் சரியான நேரத்தில் பல மருந்துகளை தந்துள்ளீர்கள். நன்றி.
-கே.எம். சகாதேவன், சென்னை.

இப்போது இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் நம் பயன்பாட்டினை வெளிப் படையாகவே காட்டும் வகையில் அப்ளி கேஷன்களைத் தருகின்றனர். இருப்பினும் நம்மிடம் பிட் மீட்டர் ஓ.எஸ். இருப்பது அவசியம் தான் என்பதனை உங்கள் கட்டுரை விளக்குகிறது.
-டி. எம். சுகுணா, மதுரை.

தமிழ் டெக்ஸ்ட் படிக்கும் கம்ப்யூட்டர் என்றவுடன் ஏதோ சுற்றி வளைத்து மேஜிக் என எண்ணினேன். ஆனால் அந்த தளம் சென்று இயக்கிப் பார்க்கையில் தமிழ் கொஞ்சம் மழலையாக வாசிக்கப்பட்டது. இது போன்ற முயற்சிகள் இன்னும் நிறைய மேற்கொள்ளப் பட வேண்டும்.
-பேரா. டாக்டர் எஸ். சுரேஷ் கண்ணன், கோயம்புத்தூர்.

கம்ப்யூட்டரை ஆசிரியர் இன்றி கற்றுக் கொண்டு வரும் என் போன்றவர்களுக்கு கம்ப்யூட்டருக்குப் புதியவரா என்ற தொடர் கட்டுரைகள் மிகவும் உதவுகின்றன. இந்த வாரம் தந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் முதன்மைப் பணிகள் ரத்தினச் சுருக்கமாக விளக்கம் தந்தது. உங்கள் சேவைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
-தே. பரமசிவம், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், பரமக்குடி.

நீங்கள் எழுதிய பின்னர் தான், விண்டோஸ் 7 மீடியா பிளேயர் கொண்டிருந்த வித்தியாசங்கள் தெரிந்தன. ஒருவேளை நான் குறைவாகவே இதனைப் பயன்படுத்துவதால் எனக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். இருப்பினும் நீங்கள் குறிப்பிட்டுள்ள அம்சங்கள் நல்ல வழி காட்டுபவையாக உள்ளன.
-என்.கே. உதய மூர்த்தி, புதுச்சேரி.

மொபைல் கதிர்வீச்சில் இவ்வளவு பிரச்னைகளா? அப்படியானால் அரசு ஏன் இதுவரை, ஏன் இன்னும் கூட, சும்மா இருந்தது, இருக்கிறது. எல்லாவற்றிற்கும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குக் கூட வெளிநாட்டினரைப் பார்த்த பின் தான் செயல்பட வேண்டுமா? தங்களைப் போன்ற பத்திரிக்கைகள் இதனைத் தட்டிக் கேட்கக் கூடாதா?
-கா. தமிழ்ச் செல்வன், திருப்பூர்.

ரீ பூட்டிங், வார்ம் பூட்டிங் விளக்கம் மிக அருமை.
-எம். சாதனா, ஹோசூர்.

ஏதோ மொபைல் வாங்கினோம்; பேசினோம்; பாட்டு கேட்டோம் என்று இருந்தவர்களின் வயிற்றில் கதிர்வீச்சு குறித்து எழுதி புளியைக் கரைத்து விட்டீர்களே சாமி! இப்போது மொபைலில் மணி அடித்தாலே காது போய்விடுமா, மூளை போய்விடுமா என்று பயமாக உள்ளது. தள்ளிவைத்து ஹெட் செட் போட்டுத்தான் இப்போதெல்லாம் மொபைல் பேசுகிறேன். படுக்கும் போது தள்ளியே வைக்கிறேன். தகவலுக்கு நன்றி.
-நீ.ஆராவமுதன், பழநி.

நீங்கள் கொடுத்துள்ள டூப்ளிகேட் பைல்களைக் கண்டறியும் புரோகிராம்களில் ஈஸி டூப்ளிகேட் பைல் பைண்டர் டவுண்லோட் செய்து பயன்படுத்தினேன். உங்கள் விளக்கத்திற்கும் மேலாகவே நன்றாக வேலை செய்கிறது. தந்த தகவல்களுக்கு நன்றி.
-எஸ். ஆர். பிரபாகரன், தாம்பரம்.

இன்டர்நெட் பயன்படுத்துதலில் பிட் மீட்டர் ஓ.எஸ். பல வழிகளில் நமக்கு பயன் படுகிறது. நம் பதற்றத்தைத் தணிக்கிறது. அனைவரும் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.
-நி. முருகேசன் சின்னையா, விருதுநகர்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X