கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 டிச
2011
00:00

கேள்வி: நான் விண்டோஸ் 7 பயன்படுத்தத் தொடங்கி உள்ளேன். இதில் நான் பயன்படுத்தும் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் தவிர, மற்றவர்களுக்கான கெஸ்ட் அக்கவுண்ட் எப்படி அமைப்பது?
-பழ.மெய்யப்பன், பள்ளத்தூர்.
பதில்: மிக எளிதாக அமைக்கலாம். முதலில் Start அழுத்துங்கள். பின்னர் உங்களுக்கு சர்ச் பாக்ஸ் ஒன்று காட்டப் படுகிறது அல்லவா! அதில் “Guest Account” என டைப் செய்து என்டர் தட்டவும். திரையில் Manage Accounts என்ற விண்டோ கிடைக்கும். இதில் உள்ள ஐகான்களில் Guest user என்ற ஐகானில் கிளிக் செய்திடவும். இதனை அடுத்து கிடைக்கும் விண்டோவில் Turn On என்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். இப்போது நீங்கள் கேட்ட கெஸ்ட் அக்கவுண்ட் உருவாக்கப்பட்டு பயன்பாட்டிற்குக் கிடைக்கும். இதனை உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்குக் கொடுத்து பயன்படுத்தச் சொல்லலாம்.

கேள்வி: ரேடியோ சம்பந்தப்பட்ட தொழில் நுட்ப சொல்லாக ஹெர்ட்ஸ் பயன்பத்தப் படுகிறது. கம்ப்யூட்டரிலும் இதே சொல்லைப் பயன்படுத்துகிறோம். இரண்டும் வெவ்வேறா? அல்லது ஒரே அளவா? ஒரே அளவு என்றால், எப்படி இரண்டுக்கும் சரியாகப் பொருந்தும்?
-நீ. மதுமதி பாஸ்கரன், கோவை.
பதில்: அருமையான கேள்வி. முதன் முதலில் இது குறித்துப் படிக்கும் போது பல ஆண்டுகளூக்கு முன் எனக்கும் இதே சந்தேகம் வந்தது. ஹெர்ட்ஸ் என் பதனைச் சுருக்கமாக ஏத் என்று எழுதுகிறோம். இது Hertz என்பதன் சுருக்கம். ஜெர்மன் பிசிக்ஸ் விஞ்ஞானி Heinrich Rudolf என்பவரின் குடும்ப பெயர். ரேடியோ மற்றும் எலக்ட்ரிக்கல் அலை வரிசையினை மெட்ரிக் முறையில் அளந்திட இந்த பெயர் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு ஹெர்ட்ஸ் என்பது ஒரு விநாடியில் ஏற்படும் ஒரு சுற்று அல்லது அசைவு (ரேடியோ அலைவரிசையில்) கம்ப்யூட்டரைப் பொறுத்த வரை இது மானிட்டருடன் அதிகம் சம்பந்தப்படுத்தி பேசப்படுகிறது. சி.ஆர்.டி. மானிட்டர் (டிவி பெட்டி போல இருப்பது) அதன் ஸ்கிரீன் இமேஜை தொடர்ந்து காட்டாமல் விட்டு விட்டுத் தான் காட்டுகிறது. ஆனால் அதனை நாம் நம் கண்களால் பார்த்தால் கண்கெட்டுப் போகும். எனவே தான் விநாடியில் பலமுறை இது விட்டுவிட்டுக் காட்டப்படுகையில் இடைவெளி தெரிவதில்லை. எடுத்துக்காட்டாக 85 Hz என்பதில் விநாடி நேரத்தில் 85 முறை இமேஜ் பின் வாங்கப்பட்டு மீண்டும் காட்டப்படுகிறது. அத்தனை முறை காட்டப்படுவதனாலேயே இமேஜ் அப்படியே நிலையாக நிற்பது போல நாம் உணர்கிறோம்.
மெஹா ஹெர்ட்ஸ் Mehahertz (MHz) என்பது பத்து லட்சம் சுற்றுகளாகும். அதாவது ஒரு விநாடியில் பத்து லட்சம் சுற்றுகள் ஏற்படுகின்றன. ஒரு கம்ப்யூட்டர் பிராசசர், உள்ளாக அமைந்த ஒரு கடிகாரத் துடிப்பினை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. ஒவ்வொரு துடிப்பிற்கும் ஒரு செயல் மேற்கொள்ளப்படுகிறது. எத்தனை முறை இந்த துடிப்பு ஏற்படுகிறது என்பதுதான் பிராசசரின் கிளாக் ஸ்பீட் என அழைக்கப்படுகிறது. இந்த வேகம் மெஹா ஹெர்ட்ஸ் என்பதில் அளக்கப்படுகிறது.
முதலில் வந்த பெர்சனல் கம்ப்யூட்டர்கள் 4.77 மெஹா ஹெர்ட்ஸ் வேகம் கொண்ட பிராசசர்களைக் கொண்டிருந்தன. அதாவது விநாடிக்கு ஏறத்தாழ 48 லட்சம் கிளாக் துடிப்புகள். தற்போதைய பெண்டியம் 4 கம்ப்யூட்டர் பிராசசர் 3.2 கிகாஹெர்ட்ஸ் வேகம் கொண்டுள்ளன. (ஒரு கிகா ஹெர்ட்ஸ் என்பது 1000 மெஹா ஹெர்ட்ஸ்.) எனவே கணக்குப் போட்டு இந்த அதிவேக துடிப்புகளை உணர்ந்து கொள்க.
கிஹா ஹெர்ட்ஸ் Gigahertz (GHz) கம்ப்யூட்டர் உலகில் கம்ப்யூட்டர் பிராசசரின் வேகத்தைக் குறிப்பிடப் பயன் படுத்தப்படுகிறது. ஒரு கிகா ஹெர்ட்ஸ் என்பது 1000 மெஹா ஹெர்ட்ஸ். தற்போது வரும் கம்ப்யூட்டர் பிராசசர் வேகம் இந்த அளவிலேயே சொல்லப்படுகிறது.

கேள்வி: விண்டோஸ் 7 தொகுப்பில், சிங்கிள் கிளிக் செய்தால், பைல்களைத் திறக்கும் வகையில் அமைக்க எங்கே எந்த செட்டிங்ஸ் அமைக்க வேண்டும்?
-சி.உதயகுமார், திருப்பூர்.
பதில்: விண்டோஸ் 7 ஐப் பொறுத்தவரை எதனையும் முதலில் அதன் சர்ச் பாக்ஸ் வழியாகத் தேடிப் பார்க்கவும். எனவே, குtச்ணூt கிளிக் செய்து சர்ச் பாக்ஸில் “Folder Options” என டைப் செய்து என்டர் அழுத்தவும். “Singleclick to open an item” என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என்பதனை உறுதிப்படுத்தவும். பின் Apply என்பதில் கிளிக் செய்து, அதன் பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: சில வாரங்களுக்கு முன்னர் கேள்வி பதில் பகுதியில் எய்ம்ஸ் எனப்படும் மருத்துவ மையம் அனுப்பிய ஆன்லைன் ஹால் டிக்கட் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் மட்டுமே திறக்கும்படி அமைத்திருப்பதனை நீங்களும் வாசகரும் சுட்டிக் காட்டி இருந்தீர்கள். அது போல வேறு சில தளங்களும் திறக்க மறுக்கின்றன. இது குறித்து புகார் செய்திட முடியுமா?
-என். கலியபெருமாள், காரைக்குடி.
பதில்: புகார் அல்ல, தளம் குறிப்பிட்ட பிரவுசரில் திறக்கவில்லை என்ற செய்தியை அந்த தளம் அமைத்தவருக்கு அனுப்பலாம். ஏனென்றால், அவர்கள் அனைத்து பிரவுசர்களிலும் திறக்கும் படி அமைத்து, அந்த தளம் திறக்க முடியாமல் இருந்தால், அதனை அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லலாமே. திறக்க முடியாத தளங்களை, இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் திறந்து, அங்கிருந்தவாறே, தளத்தில் கொடுக்கப் பட்டுள்ள தொடர்பு முகவரிக்கு இதனைத் தெரியப்படுத்தலாம். அப்போது உங்கள் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம், பிரவுசர் பதிப்பு எண், திறக்க முடியாத நாள் என்பன போன்ற தகவல்களைத் தருவது அவசியம். எனவே இதெல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு கடிதம் எழுதி அனுப்பவும்.
பயர்பாக்ஸ் பிரவுசரில், டூல்பாரில் ஹெல்ப் (Help) பட்டனை அழுத்தவும். அதன்பின் Report Broken Website என்பதில் கிளிக் செய்து விஷயத்தைக் கடிதமாக அனுப்பவும்.

கேள்வி: கம்ப்யூட்டரில் நாம் பயன்படுத்தும் ராம் மெமரியின் அளவினை அவ்வப்போது கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டுமா? அதற்கான புரோகிராம் ஒன்றைக் கூறவும்.
-ச. நரேஷ் குமார், சென்னை.
பதில்: இப்போதெல்லாம், கம்ப்யூட்டரில் அடுத்தடுத்து பல அப்ளிகேஷன் புரோகிராம்களைத் திறந்து பயன்படுத்துகிறோம். ஸ்டார்ட் அப் புரோகிராமிலும் நிறைய அப்ளிகேஷன் புரோகிராமினைத் திறக்கும் வகையில் அமைத்து விடுகிறோம். இதில் பாதி நாம் அறியாமல், நமக்கு அடிக்கடி தேவைப் படாத புரோகிராம் ஆகும். இத்தகைய புரோகிராம்கள் குறித்து அறிந்த போதும், அவற்றை இயக்க நிலையில் இருந்து நீக்காமல் விட்டுவிடுகிறோம். இதனால், திடீரென கம்ப்யூட்டர் நமக்கு ராம் மெமரியில் இடம் இல்லை என்ற எச்சரிக்கை செய்தியினைத் தருகிறது. இப்படி இல்லாமல், ராம் மெமரியின் பயன்பாடு குறித்து ஒரு கண்காணிப்பாளராக இருந்து செயலாற்றும் பல புரோகிராம்கள் குறித்து முன்பு எழுதி இருந்தேன். அவற்றில் சிறந்த ஒன்று Mem Info என்பதாகும். இதனை டவுண்லோட் செய்து இயக்கிவிட்டால், அது சிஸ்டம் ட்ரேயில் அமர்ந்து கொண்டு, மெமரி மற்றும் சிபியு பயன்பாட்டினைத் தொடர்ந்து கண்காணிக்கிறது. மெமரி பயன்பாட்டினை வண்ணக் குறியீட்டில் காட்டுகிறது. மெமரியைப் பயன்படுத்துவது சற்று அதிகமாகும் போது நம்மை எச்சரிக்கிறது. எந்த அளவில் எச்சரிக்கை செய்திட வேண்டும் என்பதனையும் இதில் செட் செய்துவிடலாம். மெமரியை டிபிராக் செய்திடும் வசதியும் இதில் உண்டு. சிஸ்ட்ரே மீட்டர் போல இது செயல்படுகிறது. அண்மையில் வெளி வந்த இதன் பதிப்பு, வண்ணக் குறியீடுகளுடன் நமக்கு தகவல்களைக் காட்டுகிறது. இதனைப் பெற http://www.carthagosoft.net/meminfo. htm என்ற தளத்திற்குச் செல்லவும்.

கேள்வி: என் கம்ப்யூட்டரில் யூசர் படமாக செட் செய்து தரப்பட்டிருக்கும் என் போட்டோவினை நான் மாற்ற விரும்புகிறேன். அதற்கு எப்படி செட் செய்திட வேண்டும்?
-ஆர். உமாராணி, திண்டுக்கல்.
பதில்: என்ன ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்று சொல்லவில்லையே! பரவாயில்லை.
ஸ்டார்ட் பட்டன் அழுத்தி, கண்ட்ரோல் பேனல் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். கண்ட்ரோல் பேனல் விண்டோ வில், யூசர் அக்கவுண்ட்ஸ் என்ற பிரிவிற்குச் செல்லவும். எந்த அக்கவுண்ட்டிற்கான படத்தை மாற்ற வேண்டுமோ, அதனைக் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Change the picture என்பதில் கிளிக் செய்திடவும். இனி நீங்கள் விரும்பும் படத்தினை, அது இருக்கும் ட்ரைவ், போல்டர் சென்று தேர்ந்தெடுத்து, கிளிக் செய்திடவும். படம் ஹைலைட் ஆன பின்னர், பட்டனை அழுத்தவும். கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திடாமலேயே, புதிய படம் இருப்பதைக் காணலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முகமது அஸ்லம் - திருப்பூர்,இந்தியா
25-டிச-201117:11:29 IST Report Abuse
முகமது அஸ்லம் நான் விண்டோஸ் 7 பயன்படுத்துகிறேன். எனது லேப்டாப் { I3 PROCESSOR,2GB ராம்} மெதுவாக இயங்குகிறது. எனது லேப்டாப்'ய் வேகமாக இயக்க நான் என்ன செய்ய வேண்டும் மற்றும் லேப்டாப்'ய் ஆன் செய்யும்போது அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.. நான் என்ன செய்ய வேண்டும்?
Rate this:
Share this comment
Cancel
ஹாரிஸ் - சென்னை,இந்தியா
19-டிச-201118:49:28 IST Report Abuse
ஹாரிஸ் கம்ப்யூட்டர் மலரை pdf file ஆக வையுங்கல் ப்ளீஸ்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X