பெங்களூருவில் கூகுளின் தெருப்பார்வை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 டிச
2011
00:00

கூகுள் சில மாதங்களுக்கு முன் தொடங்கி வெற்றிகரமாக இயக்கிக் கொண்டிருக்கும் ஒரு வசதி கூகுள் ஸ்ட்ரீட் வியூ (Street View). இது கூகுள் மேப்ஸின் ஒரு பகுதியாக 27 நாடுகளில் 100 நகரங்களில் இயங்கி வருகிறது. தற்போது இந்தியாவிலும் இந்த வசதி அறிமுகப் படுத்தப்பட இருக்கிறது. முதல் முறையாக பெங்களூருவில் இது தொடங்கப்படுகிறது. அதற்கான அடிப்படைக் கட்டமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த ஸ்ட்ரீட் வியூ எனப்படும் தெருப் பார்வை நமக்கு என்ன வழங்கும்? இது அமல்படுத்தப்படும் நகரின் தெருக்களை மிகவும் நெருக்கமாகக் காட்டும். கூகுள் மேப்ஸ் சென்று தெருக்களை முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும். பின் மேப்பின் இடது பக்கம் ஆரஞ்ச் வண்ணத்தில் உள்ள “Pegman” ஐகானை இழுத்துவந்து நீல நிற வண்ணத்தில் உள்ள தெருவில் இட வேண்டும். உடன் அந்த தெருவின் தெளிவான தோற்றம் நமக்குக் கிடைக்கும்.
இதற்கென கூகுள் நிறுவனம் பெங்களூருவில் முதலில் தெருக்களைத் தன் கேமராவிற்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளது. கார்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களிலும் கூகுள் கேமராக்களை அமைத்து, படங்களைப் பிடித்து வருகிறது.
சில இடங்களில் சைக்கிள்களில் கேமராவினைப் பொருத்தி படங்களை எடுத்து வருகிறது. எடுக்கப்பட்ட இந்த படங்கள், புரோகிராம் மூலமாக வழிமுறை செய்யப்பட்டு, கூகுள் மேப்களில் 360 டிகிரி கோணத்தில் பார்க்கும் வகையில் பதிக்கப்படும். இதனால் நகரங்களில் உள்ள வீதிகளில் நாம் ஏதேனும் ஒரு தெருவில் உள்ள முக்கிய அலுவலகம் அல்லது வர்த்தக மையம் இருக்கும் இடத்தைச் சரியாக நினைவில் கொள்ளவில்லை என்றால், இதன் மூலம் தேடிப் பெறலாம். இந்த ஸ்ட்ரீட் வியூ வசதியைப் பயன்படுத்த, கூகுள் மேப்ஸ் தளம் சென்று, நேவிகேஷன் டூல் மேலாக உள்ள ஒரு மனிதனின் சிறிய படத்தின் மீது (Pegman) கர்சரை வைத்து இழுத்து வந்து, எந்த தெருவின் படம் வேண்டுமோ அங்கு விட வேண்டும்.
பெங்களூரு இந்திய தகவல் தொழில் நுட்பத்தின் தலைநகரமாக இயங்கி வருவதால், கூகுள் ஸ்ட்ரீட் வியூ வசதியை அதில் தொடங்கத் திட்டமிட்டு இயங்கி வருவதாக, கூகுள் இந்தியா உற்பத்திப்பிரிவின் தலைவர் வினய் கோயல் தெரிவித்துள்ளார்.
நகரம் ஒன்றின் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்பவர்கள், பணியாற்றும் வல்லுநர்கள், சட்ட விதிமுறைகளை அமல்படுத்துபவர்கள், ஏன், வீடு வாடகைக்கு தேடுபவர்களுக்குக் கூட இது உதவும்.
சுற்றுலா பயணங்களை மேற்கொள்பவர் கள் இந்த வசதி மூலம் தாங்கள் தங்கும் மற்றும் செல்ல விரும்பும் இடங்களைப் பார்க்கலாம். வர்த்தகர்கள் தங்கள் மையங்களின் வரைபடத்தை இன்னும் தெளிவாகத் தங்கள் இமெயில் மற்றும் இணைய தளங்களில் பதித்து வைக்க முடியும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இளங்கோ - சேலம்.tn,இந்தியா
31-டிச-201110:58:33 IST Report Abuse
இளங்கோ நல்ல செய்திதான் ஆனா கெடுதலும் இருக்கு.....
Rate this:
Share this comment
Cancel
குரு - பெங்களூர்,இந்தியா
26-டிச-201116:13:22 IST Report Abuse
குரு ஆமாம் ! குண்டு போடுபவர்களுக்கும் இன்னும் வசதி செய்து கொடுகிறார்கள். நல்ல செய்திதான் ஆனா கெடுதலும் இருக்கு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X