கம்ப்யூட்டர் கல கல கூக்குரலிடும் யாஹூ தளம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 டிச
2011
00:00

இந்த வாரம் நீங்கள் கல கல எனச் சிரிக்காமல், உங்கள் கம்ப்யூட்டர் கல கல எனக் கூக்குரலிடும் நிகழ்வைக் காணலாம். பெரும்பாலானவர்கள் யாஹூ தளம் சென்று பார்க்கும் வழக்கத்தினைக் கொண்டிருக்கலாம். வித்தியாசமாக, இந்த இணைய தளத்தின் பெயரில் தான் ஓர் ஆச்சரியக் குறி அமைந்துள்ளது. அதில் என்ன ஆச்சரியம் என்று யாராவது எண்ணியதுண்டா?
சென்ற வாரம், நான் இந்த யோசனை யுடன் அதன் ஆச்சரியக் குறியை நோக்கிக் கர்சரை நகர்த்தினேன். கர்சர் ஏதோ லிங்க் இருப்பது போல மாறியது. ஏன் இப்படி? என்ற ஆச்சரியத்துடன் கிளிக் செய்தேன். உடனே ""யா ஆ ஆ ஆ ஹூ, ஹூ கு ஹூ'' என உரத்த குரலில் ஒரு சத்தம் ஸ்பீக்கரில் கேட்டது. இது என்னடா வம்பு? எனச் சுற்று முற்றும் பார்த்துவிட்டு மீண்டும் அதே போல கிளிக் செய்தேன். மீண்டும் அதே உரத்த குரலில் ""யா ஆ ஆ ஆ ஹூ, ஹூ கு ஹூ'' என்று யாரோ கூவும் குரல் கேட்டது. மீண்டும் மீண்டும் அழுத்த அதே குரல் ஓங்காரமிட்டு கேட்டது. என் தாயார், சமையலறையிலிருந்து ஓடி வந்து என்ன பிரச்னை? என்று என்னையும் கம்ப்யூட்ட ரையும் ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டுப் பின் மீண்டும் சமையலறைக்குள் நுழைந்தார்.
சற்று யோசித்த பின்னரே, அந்த லிங்க் உள்ள இடத்தில் ஒரு ஆடியோ பைல் தொடர்பு கொடுக்கப்பட்டு அது பிளே ஆகிறது என்று புரிந்து கொள்ள முடிந்தது.
நீங்களும் இதனைக் கிளிக் செய்து பாருங்கள். நீங்கள் செல்ல வேண்டிய முகவரி www.yahoo.com. இந்தியாவிற்கான யாஹூ தளம் இல்லை. நீங்கள் www.yahoo.com என பிரவுசரின் முகவரிக் கட்டத்தில் டைப் செய்து என்டர் தட்டினாலும் அது இந்திய யாஹூ தளத்திற்குத்தான் (http://in.yahoo. com/?p=us) செல்லும். உடனே அதன் வலது பக்கம் உள்ள Go to yahoo.com என்பதில் கிளிக் செய்தால், உங்களுக்கு www.yahoo.com தளம் கிடைக்கும். பின்னர், ஆச்சரியக் குறியில் கிளிக் செய்திடவும்.
இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். மொஸில்லா பயர்பாக்ஸ், கூகுள் குரோம் ஆகிய பிரவுசர்களில் இது செயல்படுகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் செயல்படவில்லை.
சோதனை செய்து குரலை கேட்க ஆவலாயுள்ளவர்கள், சீக்கிரம் கிளிக் செய்து பாருங்கள். ஏனென்றால், சத்தமில்லாமல் இதனை அறிமுகம் செய்த யாஹூ, சொல்லாமலேயே இதனை எடுத்துவிடலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X