கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 டிச
2011
00:00

கேள்வி: பி.டி.எப். பைலில் உள்ள டாகுமெண்ட்டில், டெக்ஸ்ட் காப்பி செய்திட முடியவில்லை. இதனை எப்படி மேற்கொள்வது?
-கா. உலகநாதன், மதுரை.
பதில்: பி.டி.எப். டாகுமெண்ட் ரீடரில் காட்டப்படும் கை அடையாளம் காட்டப் படும். இதனை உங்கள் டாகுமெண்ட் டைப் பிடித்து மேலும் கீழும் நகர்த்தத் தந்துள்ள வசதியாகும். டெக்ஸ்ட் காப்பி செய்திட, அந்த கர்சரை Select Text tool ஆக மாற்ற வேண்டும். டூல்பாரில் கை ஐகானை அடுத்து பார்த்தால், டெக்ஸ்ட் கர்சர் கிடைக்கும். இதில் பாய்ண்ட்டர் ஆரோ தெரியும். இதுதான் உங்கள் டெக்ஸ்ட் டூல். இதனைத் தேர்ந்தெடுத்து பி.டி.எப். பக்கத்தில் உங்களுக்குத் தேவையான டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து பின் காப்பி செய்திடலாம். இதனைப் பயன்படுத்தி பி.டி.எப். டாகுமெண்ட்டில் உள்ள படங்களையும் செலக்ட் செய்திடலாம். அதற்கு “Copy Image” என்று இருப்பதனை தேர்ந்தெடுக்கவேண்டும். உங்களுடைய அடோப் ரீடர் தொகுப்பு இந்த வசதியைக் கொண்டிருக்காவிட்டால், லேட்டஸ்ட் அப்டேட்டட் பதிப்பை இறக்கிப் பதியவும். இது முற்றிலும் இலவசமே. இதற்கு நீங்கள் செல்ல வேண்டிய வெப்சைட் முகவரி :http://get. adobe.com/ reader/

கேள்வி: விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், ஸ்டார்ட் மெனுவில் தேவைக்கென சில புரோகிராம்களை பின் அப் செய்து வைத்தேன். ஆனால் அவை இப்போது தேவை இல்லை. இவற்றை எப்படி நீக்குவது எனத் தெரியவில்லை. டிப்ஸ் தரவும்.
-கா.சிவமூர்த்தி, ஆண்டிபட்டி.
பதில்: ஸ்டார்ட் மெனுவில் இருந்து புரோகிராம்களை அமைக்கவும் நீக்கவும் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மிக எளிதான வழிகள் உள்ளன. ஸ்டார்ட் பட்டனில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் ஸ்டார்ட் மெனுவில் நீங்கள் பின் அப் செய்துள்ள புரோகிராம்கள் அனைத்தும் மேலாகக் காட்டப் படும். எந்த புரோகிராமினை நீக்க வேண்டுமோ அதற்குச் செல்லவும். அதில் ரைட் கிளிக் செய்திடவும். கீழ் விரி மெனு ஒன்று கிடைக்கும். இதில் உள்ள “Unpin From Start Menu” என்பதில் கிளிக் செய்திடவும். சில விநாடிகளுக்கு இந்த புரோகிராம் ஆரஞ்ச் வண்ணத்தில் காட்டப்பட்டுப் பின்னர் நீக்கப்படும். இனி, அந்த புரோகிராமினை இயக்க, சர்ச் பாக்ஸில் அந்த புரோகிராமின் பெயரை டைப் செய்து, அதன் பின்னர் “All Programs” பட்டியலில் உள்ள புரோகிராமின் மீது கிளிக் செய்து இயக்கலாம்.

கேள்வி: பயர்பாக்ஸ் பிரவுசரில் பெர்சனா என்று தரப்பட்ட ஒரு வடிவமைப்பை ஏற்படுத்தினேன். இப்போது அதனை நீக்க விரும்புகிறேன்; அல்லது வேறு ஒன்றுக்கு மாற்றவும் எண்ணுகிறேன். இதனை எப்படி மேற்கொள்வது?
-நா. வசந்த், திருப்பூர்.
பதில்: பெர்சனா அல்லது தீம் என பயர்பாக்ஸ் பிரவுசருக்கான இணைப்புகள், உங்கள் பிரவுசர் விண்டோவிற்கு சில நகாசு வேலைப்பாடு களை அளிக் கின்றன. இவற்றை நீக்கி புதியனவற்றை அமைப்பதற்கான வழிமுறைகள் சற்று சுற்றி வளைப்பதாக இருந்தாலும், மிக எளிமையானவையாகவே உள்ளன.
பயர்பாக்ஸ் பிரவுசரைத் திறந்து Tools>Adds on எனச் செல்லவும். அல்லது Ctrl+Shift+A என்ற கீகளை ஒரு சேர அழுத்தவும். தொடர்ந்து கிடைக்கும் Adds on Manager விண்டோவில் Appearance டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு நீங்கள் முன்பு பயன்படுத்திய பெர்சனாஸ் அல்லது தீம்ஸ் வரிசையாகக் கிடைக்கும். ஏற்கனவே பயன்படுத்திய ஒன்றுக்கு மாற விரும்பினால், அதனைத் தேர்ந்தெடுத்து Enable என்பதில் கிளிக் செய்திடவும். இருக்கின்ற ஒன்றை நீக்க, அந்த தீம் முன்னால் Remove என்பதனைக் கிளிக் செய்திடவும்.

கேள்வி: யு-ட்யூப் விடீயோ பைல்களை டவுண் லோட் செய்திடுகையில், நாம் விரும்பும் பார்மட்டில் பதிந்து கொள்ள முடியுமா? இதற்கான புரோகிராம் தரும் இணைய தளம், அதனைப் பயன்படுத்தும் விதம் குறித்து விளக்கமாகத் தருமாறு வேண்டுகிறேன்.
-எம். கருணா மூர்த்தி, திருப்பூர்.
பதில்: யு-ட்யூப் தளத்தில் உள்ள வீடியோ கிளிப்களை டவுண்லோட் செய்திட பல தளங்கள் இருந்தாலும், நீங்கள் கேட்டபடி, விரும்பிய பார்மட்டில் டவுண்லோட் செய்து பதியக் கூடிய வசதி சிலவற்றில் மட்டுமே உண்டு. அதில் சிறந்த தளமாக நான் கருதுவது www.downloadtube.org என்ற முகவரியில் உள்ளது இந்த தளம். தேவையற்ற பார்மட்டுகள் எதுவும் இந்த தளம் தரும் ஆப்ஷன்களில் இல்லை. இதில் செயல்படுவதும் எளிது. இதன் இன்டர்பேஸ் இதற்கு உதவிடுகிறது. வழக்கம் போல, நீங்கள் டவுண்லோட் செய்திட விரும்பும், இணைய பக்கத்தின் முகவரியினை காப்பி செய்து, இந்த தளத்தில் இட வேண்டும்.
அடுத்த வசதி தான் கேக் மீது இடப்படும் சாக்லேட் கோலம் போல. இங்கு நீங்கள் விரும்பும் பார்மட்டில் அதனை டவுண்லோட் செய்திடலாம். வழக்கமாக யு-ட்யூப் தளத்தில் வீடியோ பைல்கள் எப்.எல்.வி. (‘FLV’) பார்மட்டில் அமைக்கப்பட்டிருக்கும். இவற்றை டவுண்லோட் செய்தவுடன், எப்.எல்.வி. பிளேயர் ஒன்றில் தான் இயக்க முடியும். ஆனால் இந்த தளத்தில் எம்பி4, உங்கள் போன், ஐ பாட் போன்றவற்றில் இயங்கும் வண்ணம் டவுண்லோட் செய்திடுகை யிலேயே மாற்றிப் பதிந்து கொள்ளலாம். முகவரி அமைத்து, தேவையான பார்மட் அமைத்தவுடன் Convert and Download என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து Download என்ற பட்டனில் கிளிக் செய்தவுடன், நீங்கள் விரும்பிய வீடியோ கிளிப்பிங் நிமிடங்களில் உங்கள் கம்ப்யூட்டரில் நீங்கள் தேர்ந்தெடுத்த பார்மட்டில் இருக்கும்.

கேள்வி: வேர்டில் சில வேளைகளில் பேக் கிரவுன்ட் பிரிண்டிங் வசதியை நிறுத்த வேண்டியதிருக்கும் என ஒரு கம்ப்யூட்டர் நூலில் படித்தேன். எதற்காக இந்த வசதி? ஏன் இதனை நிறுத்த வேண்டும்?
-கா.பிரமோத், சென்னை.
பதில்: வேர்ட் தொகுப்பானது, டாகுமெண்ட்களை அச்செடுக்கையில், பின்புலத்தில் அதே பணி நடைபெறும். அதாவது டாகுமெண்ட் ஒன்றை அச்செடுக்கையில் அதனை நீங்கள் எடிட் செய்திடலாம்; அல்லது வேறு ஒரு டாகுமெண்ட்டைப் பயன்படுத்தலாம். இதற்கு அதிகமான அளவில் மெமரி இடம் தேவைப்படும். அந்த அளவில் மெமரி இடம் இல்லாத போதும், பிரிண்டரின் மெமரியும் போதுமான அளவில் இல்லாத போதும், அச்செடுப்பதில் சிரமம் ஏற்படும். எனவே பெரிய டாகுமெண்ட் ஒன்றினை உடனடியாக, அவசரமாக அச்சடிக்கும் தேவை ஏற்பட்டால், இந்த பேக்கிரவுண்ட் பிரிண்டிங் செயலைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம். இதற்குக் கீழ்க்காணும் செட் அப் ஏற்படுத்தவும்.
Tools கிளிக் செய்து Options தேர்ந்தெடுக்கவும். நிறைய டேப்களுடன் Options டயலாக் பாக்ஸ் கிடைக்கும். அதில் Print என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் “Background printing” என்ற பகுதியில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: கம்ப்யூட்டரில் சிறிய இடைவேளையில் ஓய்வு எடுத்தால், மானிட்டர் மற்றும் சிபியுவினை ஸ்விட்ச் ஆப் செய்திட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இது ஏன்? இதனால் கம்ப்யூட்டர் கெட்டுப் போகாதா?
-சி. முத்துக் குமரன், ஸ்ரீரங்கம்.
பதில்: நிச்சயமாய் ஆப் செய்திட வேண்டும். இதற்கெனவே விண்டோஸ் இயக்கத்தில் பவர் மேனேஜ்மென்ட் புரோகிராம் வசதிகள் தரப்பட்டுள்ளன. அதில் உள்ள ஆப்ஷன்களைப் பயன் படுத்தவும்.

கேள்வி: கூகுள் தளத்தில் சைட் பிரிவியூ எங்கு கிடைக்கும். இணைய தளங்களுக்குச் செல்லாமலேயே அதன் முகப்பு பக்கத்தினைப் பார்க்கலாம் என்று கூறப்படுகிறதே. நான் தேடிக் கிடைக்கவில்லை.
-சி. நரேந்திரன், கோவை.
பதில்: இது கூகுள் தள முகப்பு பக்கத்தில் கிடைக்காது. தேடு தளத்தில் ஒரு குறிப்பிட்ட சொல் கொடுத்து, தளங்களின் பட்டியலைப் பெறுகிறீர்கள். பல்லாயிரக்கணக்கில் இவை கிடைக்கும். நீங்கள் தேடும் தளம் உள்ளதா என ஒவ்வொன்றையும் காண இயலாது. அதற்குப் பதிலாக, உங்கள் கர்சரை அந்த தளம் குறித்த தகவலின் வலது புறம் கொண்டு சென்றால், பிரிவியூ எனக் காட்டப்பட்டு சில நொடிகளில், தளத்தின் முகப்பு பக்கம் ஓர் இமேஜாகக் காட்டப்படும். இதனைப் பார்த்த பின்னர், நீங்கள் தேடும் தளம் இதுதானா என முடிவு செய்திடலாம். புதிய தளங்களைத் தேடினாலும், நாம் தேடும் பொருள் இதில் இருக்குமா என்பதனை ஓரளவிற்கு அனுமானிக்கலாம்.

கேள்வி: எனக்கு இணைய இணைப்பு கிடைத்தவுடன், என் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் மற்றும் பயர்வால் புரோகிராம்கள் அப்டேட் செய்யப்படுகின்றன. இது நாள்தோறும் தேவையா?
பதில்: ஆயிரக்கணக்கில் வைரஸ் புரோகிராம்கள் அன்றாடம் தயாரிக்கப் பட்டு, திருட்டுத்தனமாக அனுப்பப் படுகின்றன. எனவே தான் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் கள் அவ்வப்போது அவற்றைச் சமாளிக்கும் வகையில் மேம்படுத்தப்படுகின்றன. இவற்றை நாமும் அப்டேட் செய்து கொள்வது நல்லது. அதனால்தான், தானாகவே இயங்கி அப்டேட் செய்யப்படும் வகையில் இவை வைக்கப்படுகின்றன. இது நாம் கம்ப்யூட்டரை பயம் இன்றி இயக்கும் சூழ்நிலைகளைத் தருகின்றன. இவற்று டன் ஆண்ட்டி ஸ்பைவேர் புரோகிராம் ஒன்றையும் பதிந்து, அதனையும் அப்டேட் செய்து கொள்வது நல்லது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜானகிராமன்.ஜ - சேலம்,இந்தியா
01-ஜன-201220:06:06 IST Report Abuse
ஜானகிராமன்.ஜ கம்ப்யூட்டர் சம்மந்தமான கேள்வி இந்த வாசகர் கருத்து பகுதியில் கேட்டால் விளக்கம் அளிக்கப்படுமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X