கம்ப்யூட்டர் கல கல பனி விழும் கூகுள் தளம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 ஜன
2012
00:00

கூகுள் தளத்தில் எப்படி பனி விழும்? நீங்கள் கேட்டுக் கொண்டால், அந்தக் காட்சியையும் கூகுள் காட்டுகிறது. கூகுள் தளத்தினைத் திறந்து, அதன் தேடுதல் தளம் செல்லவும். இதன் சர்ச் பாக்ஸில் “let it snow” என டைப் செய்திடவும். உடனே, உங்கள் கம்ப்யூட்டர் திரையில் பனி விழத் தொடங்கும். தொடர்ந்து பனி விழுவதனால், கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் மானிட்டர் திரை வெண்மைப் பனியால் மூடப்படும். எழுத்துக்கள் என்ன உள்ளன என்று தெரியாது. அப்படியானால் என்ன செய்வது என்று கவலைப்படுகிறீர்களா? கூகுள் வலது மேற்புறத்தில் “defrost” என்ற ஒரு லிங்க் தந்துள்ளது. இதில் கிளிக் செய்தால், அனைத்து பனியும் பகலவனைக் கண்டது போல பறந்துவிடும். அல்லது மவுஸ் கர்சர் மூலம் ஓர் இதயத்தின் படத்தை, உங்கள் இனிஷியல் எழுத்துக்களை அமைக்கவும். பனி விலகும்.
இது போல கூகுள் இன்னும் சில வித்தைகளைத் தந்துள்ளது. “tilt” மற்றும் “askew” என்ற சொற்களை, இந்த தேடல் கட்டத்தில் டைப் செய்திடவும். உடனே நீங்கள் உங்கள் தலையைச் சாய்த்துப் பார்க்கும் விதத்தில், மானிட்டரின் திரை சாய்வான கோணத்தில் இருக்கும்.
இதே போல இன்னொரு வேடிக்கையும் உள்ளது. பொதுவாக நாம் தவறாக ஒரு சொல்லை டைப் செய்தால், நீங்கள் இந்த சொல்லுக்குத்தானே தேடுகிறீர்கள் என்று சரியான சொல்லைக் காட்டி, அதற்கான தேடல் விளைவுகளைக் காட்டும். ஆனால் “recursion” என்ற சொல்லை தேடல் கட்டத்தில் டைப் செய்தால், மீண்டும் அதே சொல்லை அதே எழுத்துக்களில் காட்டி இந்த சொல்லா? என்று கூகுள் கேட்கும். ஏன் இந்த தவறான தடுமாற்றம்? கூகுளுக்குத் தான் வெளிச்சம்.
முன்பு இதே போல ஒரு விளையாட்டினை gravity என்ற சொல்லை டைப் செய்தால், கூகுள் தந்து வந்தது. இந்த சொல்லை டைப் செய்து என்டர் தட்டியவுடன், அந்த பக்கச் செய்திகள் ஒருகோட்டை இடிந்து விழுவதைப் போல சிறு சிறு பகுதிகளாகத் தரையில் விழுவதைப் பார்க்கலாம். இப்போது இந்த விளையாட்டினை நிறுத்திவிட்டது. அது எப்படி இருந்தது என்று காண வேண்டுமானால், http://mrdoob.com/projects /chromeexperiments/google_gravity/ என்ற முகவரியில் உள்ள தளம் சென்று காணவும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X