கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 ஜன
2012
00:00

கேள்வி: ஒர்க்ஷீட் ஒன்று உருவாக்கினேன். அதில் செல் ஒன்றில் உள்ள டேட்டாவினைக் கீழே உள்ள சில செல்களில் மட்டும் காப்பி செய்திட வேண்டும். ஹேண்டில் பயன்படுத்தினால், அனைத்தும் காப்பி ஆகிறது. எப்படி இந்த வேலையை மேற்கொள்ளலாம்?
-தே. அழகர்சாமி, மதுரை.
பதில்: முதலில் எந்த டேட்டாவைக் காப்பி செய்திட வேண்டும் என திட்டமிடுகிறீர்களோ அந்த செல்லுக்குச் சென்று டேட்டாவை Ctrl+C கீகளை அழுத்திக் காப்பி செய்திடவும். இனி Ctrl கீயை அழுத்திக் கொண்டு எந்த எந்த செல்களில் எல்லாம் அதனை பேஸ்ட் செய்திட எண்ணு கிறீர்களோ அந்த செல்களைத் தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்து முடித்த பின்னர் Ctrl+V கீகளை அழுத்தினால் குறிப்பிட்ட டேட்டா தேர்ந்தெடுத்த அனைத்து செல்களிலும் பேஸ்ட் செய்யப்படும்.

கேள்வி: விண்டோஸ் 7 தொகுப்பில், சிங்கிள் கிளிக் செய்தால், பைல்களைத் திறக்கும் வகையில் அமைக்க எங்கே எந்த செட்டிங்ஸ் அமைக்க வேண்டும்?
-சி.உதயகுமார், திருப்பூர்.
பதில்: விண்டோஸ் 7 ஐப் பொறுத்தவரை எதனையும் முதலில் அதன் சர்ச் பாக்ஸ் வழியாகத் தேடிப் பார்க்கவும். எனவே, Start கிளிக் செய்து சர்ச் பாக்ஸில் “Folder Options” என டைப் செய்து என்டர் அழுத்தவும். “Singleclick to open an item” என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என்பதனை உறுதிப்படுத்தவும். பின் Apply என்பதில் கிளிக் செய்து, அதன் பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: பேஸ்புக் தளத்தில் டைம்லைன் என ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளதாகப் படித்தேன். இதனை எப்படி இயக்குவது? இதன் பயன் என்ன?
-ஆர்.வெங்கடேஷ், கோவை.
பதில்: பேஸ்புக் தளத்தின் புதியதாக வந்துள்ள மாற்றம் டைம்லைன். இது மூன்று மாதங்களுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டாலும், இப்போது இதன் வாடிக்கையாளர் களுக்குக் கிடைக்கிறது. இப்போது இது ஒரு ஆப்ஷனல் லிங்க் மூலம் கிடைத்தாலும், விரைவில் எப்போதும் தானாகவே கிடைக்கும். உங்களுடைய தளப் பக்கத்தில் உள்ள போஸ்டிங்ஸ், போட்டோக்கள், மற்றும் பிற பதிவுகளை இரண்டாக இது பிரிக்கிறது. அண்மைக் காலத்திய போஸ்டிங்ஸ் விவரங்களுடன் கிடைக்கும். பழைய பதிவுகளின் ஹைலைட்ஸ் கிடைக்கும். திருமணம், பிறப்பு போன்றவை மைல்ஸ்டோன்கள் எனக் காட்டப்படும்.இந்தப் பிரிவுகளின் மேலாக இவற்றைக் காட்டும் வகையில் போட்டோ ஒன்று அமைத்துக் கொள்ளலாம். பேஸ்புக் தளத்தில் இது ஒரு நல்ல மாற்றம் தான். பலரும் இதனை விரும்பியுள்ளதாக பின்னூட்டு தகவல் கள் கிடைத்துள்ளன.

கேள்வி: அடாசிட்டி சாப்ட்வேர் பயன்படுத்தி, மொபைல் போன்களுக்கு ரிங் டோன் தயாரிப்பது எப்படி? முடியுமா? வழி காட்டவும்.
-ஆ. சிவமூர்த்தி, திருப்பூர்.
பதில்: நிச்சயம் முடியும். இங்கு எம்பி 3 வடிவில் ரிங் டோன் அமைப்பது குறித்து சொல்கிறேன். ஏனென்றால், பெரும்பாலான மொபைல் போன்கள், எம்பி3 ரிங் டோனை ஏற்றுக் கொள்கின்றன. முதலில் அடாசிட்டி புரோகிராம் உங்களிடம் இல்லை எனில் http://audacity.sourceforge.net/download என்ற முகவரியில் உள்ள தளம் சென்று, டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடவும். அதே தளப் பக்கத்தில் LAME MP3 என்ற என்கோடரையும் டவுண்லோட் செய்திடவும். இதன் மூலம் தான் உங்கள் பாடலை இறக்கி, பின்னர் மொபைல் போனுக்கு மாற்ற இயலும். அடுத்து File>import>audio எனச் செல்லவும். இப்போது பாடலை இயக்கி, உங்களுக்குத் தேவையான பகுதியை கட் செய்திடவும். 15 விநாடிகள் ஒலிக்கின்ற அளவு இருந்தால் போதும். இதற்கு ஒரு பெயர் கொடுத்து தனியே பதிவு செய்து, File>export தேர்ந்தெடுத்து போனுக்கு அனுப்பவும். இந்த பகுதியை அமைக்கையில் பிட் ரேட் எவ்வளவு தேவை எனக் கேட்கும். பிட்ரேட் அதிக எண்ணிக்கையில் இருந்தால், தெளிவு இருக்கும். ஆனால் பைல் பெரிதாகி இடம் அதிகம் பிடிக்கும். உங்கள் போன் எந்த அளவில் பைல் ஒன்றைக் கொள்ளும் எனப் பார்த்து அமைத்திடவும்.

கேள்வி: ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம்களைத் திறந்து செயல்படுகையில், மானிட்டரில் ஒரு புரோகிராம் விண்டோ மட்டுமே காட்டப்படுகிறது. திறந்திருக்கும் அனைத்து புரோகிராம்களும் ஓரளவாவது திரையில் காட்டப்படும் வகையில் செட் செய்திட முடியுமா?
-சி. புஷ்பராஜ், பொள்ளாச்சி.
பதில்: நீங்கள் கேட்டுள்ளபடி செட் செய்திட, கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு எந்த விண்டோக்களை திரையில் ஒரே நேரத்தில் தோன்றும்படி வேண்டும் எனத் திட்டமிடுகிறீர்களோ, அவற்றைக் கிளிக் செய்திடவும். கிளிக் செய்து தேர்ந்தெடுத்தபின், ஏதாவது ஒன்றின் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். இங்கே கிடைக்கும் மெனுவில் Tile Horizontally, Tile Vertically என இரண்டு ஆப்ஷன் கிடைக்கும்.
விண்டோக்கள் நெட்டு வாக்கில் அமைக்கப்பட வேண்டுமா,படுக்கை வாக்கில் அமைக்கப்பட வேண்டுமா என முடிவு செய்து தேவையானதைத் தேர்ந்தெடுத்தால், அந்த வழியில் விண்டோக் கள் அமையும்.

கேள்வி: என் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 பயன்படுத்தி வருகிறேன். இதில் உள்ள ஆண்ட்டி வைரஸ் மற்றும் ஆண்ட்டி ஸ்பைவேர் புரோகிராம்களைத் தொடர்ந்து அப்டேட் ஆக வைத்துள்ளேன். கூடுதலாக பயர்வால் தேவையா?
-மா. ஷீலா ப்ரியா, சென்னை.
பதில்: நீங்கள் எச்சரிக்கையாக அனைத்து சாப்ட்வேர் தொகுப்பினையும் அப்டேட் செய்தாலும் உங்கள் சிஸ்டத்திற்குக் கட்டாயம் ஒரு பயர்வால் ஒன்று தேவை. இதற்கு முதல் காரணம் சாப்ட்வேர் தொகுப்புகளில் காணப்படும் பலவீனமான இடங்களைச் சரியாகக் கண்டறிந்து அவற்றிற்கான பேட்ச் பைல்களை எழுத சில நாட்கள், ஏன் சில மாதங்கள், வருடங்கள், கூட ஆகலாம். இது போன்ற பலவீனமான இடங்கள் இருப்பது மிக வேகமாகப் பரவுகிறது. ஆனால் தீர்வு கிடைக்க மிக மிக தாமதமாக ஆகும். மேலும் பயர்வால் தயாரிப்பவர்கள் வேகமாகச் செயல்படுவார்கள். பேட்ச் பைல் எழுதுபவர்கள் அதிகம் உழைக்க வேண்டி வரும். மேலும் பயர்வால் தொகுப்புகள் ஏற்கனவே பல வகையான கெடுதல் முயற்சிகளை முறியடிப்பதால் புதிய முயற்சிகளும் எளிதாக முறியடிக்கப் படும். பேட்ச் பைல்களால் இது காலதாமதமாகலாம்.

கேள்வி: சென்ற மாதம் முதல் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துகிறேன். இப்போது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் மூலம் பிரவுசிங் செய்கையில், எந்த இணைய தளம் என்றாலும், எழுத்துக்கள் சிறியதாகவே உள்ளன. பின்னரே மாற்ற வேண்டியதுள்ளது. டிபால்ட்டாக எப்படி சற்றுப் பெரிய எழுத்தாக இதனை அமைக்கலாம்?
-ஆர்.கே.சியாமளா, கோயம்புத்தூர்.
பதில்: உங்கள் பிரவுசரின் பதிப்பு எண் எதுவெனச் சொல்லவில்லை. இருந்தாலும் பொதுவான தீர்வு சொல்கிறேன். குறிப்பாக, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8க்கு இதனைப் பயன்படுத்தலாம். முதலில் பிரவுசரைத் திறக்கவும். Tools கிளிக் செய்து அதில் Internet Options என்னும் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். Appearance என்ற டேப்பின் கீழ் Fonts என்பதில் கிளிக் செய்திடவும். நீங்கள் விரும்பும் அளவில் பாண்ட் அளவைக் கிளிக் செய்து ஓகே தட்டி வெளியே வரவும். இனி நீங்கள் அமைத்த பெரிய அளவிலான எழுத்துடன், இணையப் பக்கங்கள் காட்டப்படும். இருப்பினும் இன்னொரு எளிய, மிக எளிய வழியைச் சொல்லட்டுமா? அது ஸூம் செய்திடும் முறை. இருந்தாலும் சொல்லிவிடுகிறேன். கண்ட்ரோல் கீயினை அழுத்தியவாறே, மவுஸின் வீலை முன் புறமாக உருட்டினால், பக்க எழுத்துக்கள் பெரிதாகும். கீழாக உருட்டினால், சிறிதாகும்.

கேள்வி: சில வேளைகளில் கம்ப்யூட்டரில் எர்ரர் மெசேஜ் காட்டப்படுகிறது. பின் தானாகவே சிஸ்டம் ரீ பூட் ஆகிறது. நாமாக பூட் செய்திடும் வகையில் இதனை எப்படி அமைப்பது?
-கே.எஸ். திரவியம் ராஜ், மதுரை.
பதில்: விண்டோஸ் இயக்கம் தன் செயல்பாட்டில் ஏதேனும் ஒரு சிக்கலான பிரச்சினையைச் சந்தித்தால் அது மீண்டும் ரீஸ்டார்ட் செய்யப்படும் வகையில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்தும் முதலில் இருந்து இயங்கத் தொடங்குகிறது. மேலும் இதனால் இதற்கு முன் ஏற்பட்ட எர்ரர் குறித்து கூடுதல் தகவல்களைப் பெற முடிகிறது. இந்த சூழ்நிலையில், நீங்கள் விரும்பும் வகையில், சிஸ்டம் ரீ ஸ்டார்ட் செய்வதனை நிறுத்துவதற்கும் வழி தரப்பட்டுள்ளது.
மை கம்ப்யூட்டர் ஐகானில் கிளிக் செய்து ப்ராப்பர்ட்டீஸ் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். பின் Advanced பட்டனை செலக்ட் செய்திடவும். இதில் கிடைக்கும் Startup and Recovery பிரிவில் உள்ள Settings பட்டனில் அடுத்து கிளிக் செய்திட வேண்டும். இதன் பின் “Automatically restart” என்ற பாக்ஸில் இருக்கும் டிக் அடையாளத்தை எடுத்து விடவும். இனி எர்ரர் ஏற்பட்டால் உங்கள் கம்ப்யூட்டர் உங்கள் சிஸ்டம் ஷட் டவுண் ஆகிவிடும். நீங்களாக அதனை ரீ பூட் செய்திட வேண்டும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pk - tamilnadu,இந்தியா
11-ஜன-201223:04:40 IST Report Abuse
pk Mr. Manoj type "stright"in yr google screen . that will appear good.
Rate this:
Share this comment
Cancel
அப்துல் பாசித் - புதுக்கோட்டை,இந்தியா
08-ஜன-201208:23:28 IST Report Abuse
அப்துல் பாசித் hello sir is there any software to set alarm in pc?
Rate this:
Share this comment
Cancel
prabakaran - coimbatore,இந்தியா
05-ஜன-201217:57:27 IST Report Abuse
prabakaran i need karaoke software....please give me some website to download...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X