மேஸ்ட்ரோ பட்ஜெட் டச்ஸ்கிரீன் மொபைல்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 ஜன
2012
00:00

நம்ம பர்ஸுக்குக் கட்டுப்படியாகாது என்று பலரும் எண்ணி விலகிச் செல்லும், டச்ஸ்கிரீன் மொபைல் போன்களைத் தரும் பழக்கத்தைக் கொண்டுள்ள மேக்ஸ் மொபைல்ஸ் நிறுவனம் , அண்மையில் இன்னுமொரு போனை Maestro MT255 என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 3.2 அங்குல அகலத்தில் தொடுதிரை தரப்பட்டுள்ளது. குறைவான தடிமனில், அழகான வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மொபைல் போன் மல்ட்டி மீடியா மற்றும் சோஷியல் நெட்வொர்க்கிங் வசதிகளைக் கொண்டுள்ளதாய் அமைக்கப் பட்டுள்ளது. இரண்டு சிம்களை இயக்கக்கூடியது. இரண்டு கேமராக்கள் (2 எம்.பி. திறன் மற்றும் பிளாஷ் கொண்டது), eBuddy, Bolt & Nimbuzz ஆகிய அப்ளிகேஷன்கள் தரப்பட்டுள்ளன. இதன் King Movie player வீடியோ பைல்களை பத்தில் ஒரு பங்கு என்ற அளவில் சுருக்கி இயக்கக் கூடியவை.
இதன் பேட்டரி 1000 mAh திறன் கொண்டதாய் அமைந்துள்ளது. இதன் மெமரியினை 8 ஜிபி வரை அதிகப் படுத்தலாம். புளுடூத் மற்றும் MMS/WAP /GPRS ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன. MP3/ AAC/ WAV / M4A ஆகிய ஆடியோ பார்மட்டுகளையும், MP4 / 3GP / AVI வீடியோ பார்மட்களையும் இந்த போன் சப்போர்ட் செய்கிறது. இதன் எப்.எம். ரேடியோவினை நேரம் செட் செய்து இயக்கலாம்.
தற்போது இதனை வாங்கினால், 4 ஜிபி மெமரி கார்ட் மற்றும் ரூ.2,499 மதிப்புள்ள ரீபாக் ஷூ பரிசாகத் தரப்படுகிறது. மேக்ஸ் மொபைல்ஸ் டீலர்களிடமும், பிளாநெட் எம், குரோமா, ஹைப்பர்சிட்டி, ஸ்டார் பஸார், இந்திய கடற்படை கேண்டீன், ரிலையன்ஸ் வெப் வேர்ல்ட், நெக்ஸ்ட் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பிரபலமான மொபைல் விற்பனை நிலையங்களில் கிடைக்கிறது.

Advertisement

 

மேலும் மொபைல் மலர் செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X