2012ல் சவாலைச் சந்திக்குமா மைக்ரோசாப்ட்?
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 ஜன
2012
00:00

சென்ற 2011 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு அவ்வளவு சிறப்பான ஆண்டாக இருக்கவில்லை. டேப்ளட் சந்தையில் இந்நிறுவனத்தின் தயாரிப்பு எதுவும் அறிமுகமாகாதது பலரின் விமர்சனத்திற்குள்ளானது. மேலும் விண்டோஸ் போன் சரியாக விற்பனை இல்லாத நிலை மற்றும் கிளவ்ட் கம்ப்யூட்டிங் பிரிவில் மிகத் தாமதமாக இறங்கியது ஆகியவையும் பலரால் எடுத்துரைக்கப்பட்டது. இருப்பினும் இந்நிறுவனத்தின் வருமானம் சிறிதும் குறையாமல், அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
நடப்பு ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்து பல புதுமைகளை மக்கள் எதிர்பார்க்கின்றனர். இவற்றை நிறை வேற்றும் வகையில் தற்போது மைக்ரோசாப்ட் செயல்பட்டு வருகிறது. மிகப் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுவது விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அறிமுகமாகும். குறிப்பாக டேப்ளட் பிசிக்களில் இந்த சிஸ்டம் முற்றிலும் மாறுதலான ஓர் அனுபவத்தினைத் தரும் என்று எதிர்பார்க்கலாம். ஐ-பேட் சாதனத்திற்கு எதிரான போட்டியில், டேப்ளட் பிசி சந்தையில் இது மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஓர் இடத்தைக் கொடுக்கும்.
ஆப்பிள் ஐபேட் ஏப்ரல் 2010ல் வெளியான போது, பாரம்பரியமாகப் பயன்படுத்தி வந்த பெர்சனல் கம்ப்யூட்டர் சந்தை சிறிது ஆட்டம் கண்டது. விண்டோஸ் 8 சிஸ்டம், டேப்ளட் பிசி மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர் என இரு பிரிவுகளிலும் இயங்கும் வகையில் அறிமுகப்படுத்தப் படுவதால், நிச்சயம் இது மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குக் கை கொடுக்கும். ஆனால், இரண்டும் வெவ்வேறு ப்ராசசர்களில் இயங்க இருப்பதால், இவற்றில் இயங்கும் வகையில் சாப்ட்வேர் அப்ளிகேசன்களைத் தயாரிப்பவர்கள் இரு பங்கு உழைத்திட வேண்டியதிருக்கும்.
மேலும், ஏற்கனவே வெளியான விண்டோஸ் 7 சிஸ்டத்தைக் காட்டிலும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அளவிற்கு, விண்டோஸ் 8 மேம்பாடு கொண்ட அம்சங்களைக் கொண்டிருக்கப் போவ தில்லை என்பதால் இதனை மக்கள் அவ்வளவாகச் சிறப்பாகப் பேசப்போவ தில்லை.ஒரே ஒரு சிறப்பான அம்சம் என்னவெனில், அது மல்ட்டி டச் வசதி மட்டுமே.
எனவே டேப்ளட் பிசி பிரிவில் மைக்ரோசாப்ட் மிகக் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். தன் சிஸ்டம் இயங்கும் வகையில், டேப்ளட் பிசிக்கள் சந்தையில் வருவதற்குத் துணை புரிய வேண்டியதிருக்கும். இந்த வகையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு 2012 ஆம் ஆண்டு ஒரு சவாலான ஆண்டாக நிச்சயம் அமையும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
க.பொன்வேல் - சேலம்,இந்தியா
10-ஜன-201205:49:21 IST Report Abuse
க.பொன்வேல் தினமலர் கம்புயூட்டர்மலர் -பகுதியில் வரும் கட்டுரைகள் நன்றாக உள்ளது..! இதுவரை வந்த கட்டுரைகளை தனி தொகுப்பாக இணைத்து புத்தகமாக வெளியிட்டால் நன்றாக இருக்குமே.. இதுவரை படிக்காத என்னைப்போல அதிகம் படித்திராத நிறையபேர் படித்து பயன்பெருவார்களல்லவா..?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X