ஒரு சின்ன பர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 ஜன
2012
00:00

இணைய வழி தொடர்பு என்பது ஒவ்வொருவருக்கும் மூச்சு காற்று போல ஆகிவிட்ட நிலையில், அதற்கான இலவச பிரவுசரின் வேகத்தை அதிகப்படுத்திக் கொடுப்பதில் கூகுள் நிறுவனம் முயன்று வருவதனை வெகு நேர்த்தியாக எடுத்துக் கூறியிருக்கிறீர்கள். தொடர்ந்து இந்த வேகம் அதிகரிக்கும் என்பதனை உங்களுடன் நாங்களும் எதிர்பார்க்கிறோம்.
-சி.எம். கார்த்திகேயன், தலைமை ஆசிரியர், மதுரை.

டெவலப்பர்கள், பயன்படுத்தும் வாடிக் கையாளர்கள் என அனைத்து தரப்பின ருக்கும் மேம்படுத்தப்பட்ட வசதிகளைக் கூகுள் தன் குரோம் பிரவுசரில் கொடுத் திருப்பது வரவேற்கத்தக்கது. இதனால் தான் கூகுள் தரும் அனைத்து வசதிகளும் மிகப் பயனுள்ளவையாய் இடம் பெற்றுள்ளன.
-டி.நிஷா, சென்னை.

வேர்ட் டாகுமெண்ட்டில் சொற்களை அறிய நீங்கள் குறிப்பிட்ட டிப்ஸ் மிகவும் புதுமையானதாகவும், பயனுள்ளதாகவும் உள்ளது. வழக்கமான வேர்ட் கவுண்ட் முறையில் எத்தனை சொற்கள் என்பதனைத் தனியே எழுதி வைக்க வேண்டும். இதில் டாகுமெண்ட்டிலேயே கிடைப்பதால் மிகவும் வசதியாக உள்ளது. டிப்ஸுக்கு நன்றி.
-டி.தேனப்பன், காரைக்குடி.

இந்தக் குளிர் காலத்தில் கூகுள் தேடு தளத்தின் பனிக்காலத்தினைக் காட்டியது வேடிக்கையாகவும், மனதிற்கு குதூகலமாக வும் உள்ளது. என் குழந்தைகள் இப்போது அடிக்கடி கூகுள் பனிப் பொழிவைக் கண்டு ரசிக்கின்றனர். கம்ப்யூட்டர் மலராக இருந்தா லும், அனைவரின் ரசனைக்குமாக எழுதுவதும் தகவல் தருவதும் உங்களின் தனிச் சிறப்பு என்பதை நான் மீண்டும் கூறுகிறேன்.
-மு.இரா. முருக வேலன், சென்னை.

விண்டோஸ் டிஸ்பிளேயில் இவ்வளவு விஷயங்களா! என ஆச்சரியப் பட வைத் திடும் அளவிற்கு துல்லியமாகவும் விளக்க மாகவும் தகவல்களைத் தந்துள்ளீர்கள். பெரிய பாடம் ஒன்றை வாசித்த நிறைவு ஏற்பட்டது.
-எஸ். கிளாடிஸ், கோவை.

ரோம்2ரியோ தளத்தை வடிவமைத்தவர் எப்போதும் விமானத்தில் பறப்பவரோ! எந்த இடத்திற்கு ரூட் கேட்டாலும் விமானப் பயணத்தைக் காட்டுகிறார். நமக்கு கூகுள் மேப்ஸ் தரும் சாலை வழிதான் சரி. இருந்தாலும் நீங்கள் குறிப் பிட்டது போல ரோம்2ரியோ தளத்தை வடிவமைத்தவரை நிச்சயம் பாராட்டத் தான் வேண்டும்.
-என்.வளர்மதி, திருப்பூர்.

2012ல் என்ன மாற்றங்கள் ஏற்படும் என டேப்ளட் பிசியைச் சார்ந்த தகவல்கள் சரியான கணக்கீடாக இருந்தன. ஆகாஷ் டேப்ளட் மார்க்கட்டில் வந்து விட்டால், அனைவரும் ஆளுக்கொரு டேப்ளட் கம்ப்யூட்டரை மொபைல் போன் போலக் கொண்டு செல்லத் தொடங்கிவிடுவார்கள். பல துறைகளில் இது முன்னேற்றத்தைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம்.
-கா. விக்னேஷ்ராஜ், தாம்பரம்.

அடாசிட்டி சாப்ட்வேர் பயன்பாட்டில் என் கேள்வி தனிப்பட்டது என்றாலும், பொறுப்புடன் பதில் அளித்த துணை ஆசிரியருக்கு நன்றி.
-ஆ. சிவமூர்த்தி, திருப்பூர்.

ஏழாயிரம் ரூபாயில் புரஜக்டராகவும் பயன் படும் இரண்டு சிம் போனா! கேட்கவே ஆச்சரியமாக உள்ளது. அறிவியல் ஒரு சிலருக்கு மட்டுமின்றி, அனைவரின் பாக்கெட்டிலும் வந்து அமர்ந்து கொண் டுள்ளது என்ற கூற்று உண்மையாகி வருகிறது. இதனைச் சாதாரண மக்களுக்கு எடுத்துச் செல்லும் அரிய பணியை மேற்கொள்ளும் தினமலருக்கு வாழ்த்துக்கள்.
-சி. புகழேந்தி, கோவை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜி .நாராயணன் - chennai,இந்தியா
09-ஜன-201213:59:16 IST Report Abuse
ஜி .நாராயணன் ₹ இது இந்திய ரூபாயின் அடையாளம் இது அமலுக்கு வந்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் கூட இதை எளிதாக எல்லா பிரௌசர் களிலும் உபயோகிக்க முடியவில்லை விப்ரோ எஸ்.கே 2030 மடல் கீபோர்டில் &39₹ ரெடி என்று போட்டிருந்தும் உபயோகமில்லை. தாங்கள் எளிய வழி எதாவது கூற முடியுமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X