கம்ப்யூட்டர் கேம்ஸ் அணுகும் முறை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 ஜன
2012
00:00

கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடுவது இரு பக்கம் கூர் தீட்டப்பட்ட கத்தி போல. அதில் விளையாடுவது பிரச்னை கொண்ட நம் மனதினை அமைதிப்படுத்தும். அதே நேரத்தில், கேம்ஸ் விளையாடுவதற்கு அடிமையாகி விட்டால், நம் பொன்னான நேரம் வீணாகி, வழக்கமான பணிகள் பாதிக்கப்படும். எனவே கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவதில் கவனத்துடன் நம்மை இழக்காமல் விளையாட வேண்டும். அண்மையில் ஒரு வாசகர், தேர்வுகள் நெருங்கும் நேரம் கேம்ஸ் குறித்த செய்திகள் வேண்டாம்; எச்சரிக்கும் விதத்தில் கட்டுரை எழுதுங்கள் என அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளார். அதனால் தான் இந்த முன்னுரையுடன் கேம்ஸ் குறித்த சில தகவல்களையும் தருகிறேன்.
கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடுவது தவறில்லை. ஆனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிலேயே முழு நேரமும் செலவிடுவதுதான் வருந்தத்தக்கதாயுள்ளது. ஒரு சிலர் இதற்கு அடிமையாகிவிடுகின்றனர். என்னுடைய பேராசிரிய நண்பர் ஒருவர் அவர் ஆராய்ச்சிக்கென கம்ப்யூட்டர் ஒன்றை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கினார். பின்னர் கேம்ஸ் விளையாடத் தொடங்கினார். தினந்தோறும் கம்ப்யூட்டரில் ஆய்வு தகவல்களை இடும் முன்னரும் இட்ட பின்னரும் கேம்ஸ் விளையாடாமல் கம்ப்யூட்டரை ஆப் செய்திட மாட்டார். இதுவே இன்னும் வெறியாக மாறியது. இறுதியில் அவர் டாக்டர் பட்டம் பெறுவது இதனாலேயே ஒன்றரை ஆண்டுகள் தள்ளிப்போயிற்று என அவரே கூறினார்.
கேம்ஸ் விளையாடுவது நல்லதுதான். அது ஒரு சிறந்த பொழுதுபோக்கும் கூட. ஒரு சில கேம்ஸ் நம் தர்க்க ரீதியான சிந்தனையை, லாஜிக்கலாக முடிவெடுக்கும் திறனை வளர்க்கின்றன என்பதுவும் உண்மையே. அண்மைக் காலத்தில் மிக அழகான கிராபிக்ஸ் பின்னணியில் கேம்ஸ் வடிவமைக்கப்பட்டுக் கிடைக்கின்றன. இப்போது சிடி மற்றும் டிவிடியில் கேம்ஸ் பதியப்பட்டுக் கிடைத்தாலும் பலர் இன்டர்நெட்டில் கட்டணம் செலுத்தியோ, இலவசமாகவோ கிடைக்கும் கேம்ஸ்களையே விரும்பி டவுண்லோட் செய்கின்றனர். ஆன்லைனிலேயே கேம்ஸ் விளையாடும் வசதியும் நிறைய கிடைக்கிறது. முகம் தெரியாத எங்கோ இருக்கும் ஒருவருடன் இன்டர்நெட் வழியாக விளையாட விளையாட்டுக் களைத் தரும் இணைய தளங்களும் உள்ளன.
கேம்ஸ் குறித்த இணைய தளங்களை இங்கு காணலாம். அதிகமான எண்ணிக்கையில் மிகவும் ஆர்வமூட்டும் விளையாட்டுக்களைத் தரும் தளங்கள் என எடுத்துக் கொண்டால் மூன்று தளங்களைக் கூறலாம். அவை: Game Daily (www.gamedaily.com) GameSpot (www.gamespot.com) மற்றும் Game Fly (www.gamefly.com) இவற்றில் முதலில் குறிப்பிட்ட Game Daily என்ற தளத்திற்கு ஒவ்வொரு மாதமும் ஒன்றரைக் கோடி பேர் கேம்ஸ் பெற வருகின்றனர். விளையாட்டுக்களை விளையாடத் தேவையான பலவிதமான கன்சோல்கள், மெஷின்கள் மற்றும் டவுண்லோட் செய்யக் கூடிய கேம்ஸ், அவை குறித்த திறனாய்வுக் கட்டுரைகள் என கேம்ஸ் குறித்து அனைத்து கோணங்களிலும் தகவல் தரும் தளமாக இது உள்ளது. பல கேம்ஸ் இலவசமாக இங்கு கிடைத்தாலும் பல புதிய கேம்ஸ் பெற கட்டணம் செலுத்தியே ஆக வேண்டும்.
கேம்ஸ்பாட் (GameSpot) ஒரு கிராபிக்ஸ் நிறைந்த கேம்ஸ் தளமாகும். பெர்சனல் கம்ப்யூட்டர், எக்ஸ் பாக்ஸ் 360, வை, பி.எஸ்.3 என அனைத்து வகை பிரபலமான கேம்ஸ் சாதனங்கள் குறித்தும் இங்கு அறிந்து கொள்ளலாம். அவ்வப் போது வெளியாகும் புதிய கேம்ஸ் குறித்து இங்கு கருத்துக் கட்டுரைகள் வெளியாகின்றன. இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ள கேம்ஸ் தருவதுடன் கட்டணம் செலுத்திப் பெறும் கேம்ஸ்களையும் இந்த தளம் கொண்டுள்ளது. இந்த தளத்தில் இயங்கும் குழுவில் நீங்களும் இணைந்து கேம்ஸ் குறித்த உங்கள் கருத்துக்களை மற்றவர்களுடம் பகிர்ந்து கொள்ளலாம். இந்த தளத்தின் மேலாக உள்ள ஸ்போர்ட்ஸ் ஐகானில் கிளிக் செய்தால் நீங்கள் இன்னொரு இணைய தளத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். இங்கு பலவகையான வீடியோ கேம்ஸ் பட்டி யலிடப்பட்டிருப்பதனைக் காணலாம். இங்குள்ள நியூஸ் ஐகானில் கிளிக் செய்தால் வீடியோ கேம்ஸ் குறித்த அனைத்து செய்திகளையும் பெறலாம்.
கேம் ப்ளை (GameFly) என்பது வீடியோ கேம்களுக்கான இன்னொரு அருமையான வெப்சைட். இந்த தளம் லேட்டஸ்ட் வீடியோ கேம்ஸ்களை தொடர்ந்து அப்டேட் செய்து தந்து கொண்டே இருக்கிறது. இதன் மூலம் ஒரு வீடியோ கேமினை அமெரிக்காவில் வாடகைக்குக் கூட பெறலாம். இதில் தற்போது 6000க்கும் அதிகமான வீடியோ கேம்ஸ் உள்ளன. பலவகையான கேம்ஸ் விளையாடும் சாதனங்களுக்கான (Playstation 3, Playstation 2, PSP, XBox 360, Xbox, Wii, GameCube, Nintendo DS, Gameboy etc.) கேம்ஸ்கள் இங்கு உள்ளன. இது இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர் களுக்கு வாடகைக்கு கேம்ஸ்களை வழங்குமா என்பது இனிமேல் தான் தெரியும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X