ஒரு சின்ன பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 ஜன
2012
00:00

டேட்டாவினை வகைப்படுத்துவதில் சிக்கலா? என்ற கட்டுரையில் நான் வெகு நாட்களாகக் கொண்டிருந்த பல சந்தேகங்கள் தெளிவாயின. விரிவாகவும், விளக்கமாகவும் டிப்ஸ் தந்தது மிகவும் உதவியாக இருந்தது.
-கே. எம். சக்திவேல், மதுரை.

ஆல்ட் கீயுடன் இணைந்த ஷார்ட்கட் கீகள் புதிய சுருக்கு வழிகளைக் காட்டுவதாக உள்ளன. இதுவரை ஒன்றிரண்டு தான் பயன்படுத்தத் தெரிந்து வைத்திருந்தேன். தொடர்ந்து இது போல புதுமையான ஷார்ட்கட் கீகளை எங்களுக்கு அறிமுகம் செய்திடவும்.
-சு. சரவணன், ஸ்ரீவில்லிபுத்தூர்.

மொபைல் போன்களில் 657 புதிய மாடல்களா! வாழ்க்கையுடன் ஒன்றிவிட்ட இதன் வளர்ச்சி பிரம்மிக்க வைக்கிறது.
-கா. நரேந்திர குமார், கோவை.

நம் கம்ப்யூட்டர் நாம் விரும்பியபடி மட்டுமே இருக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். விண்டோஸ் ஸ்டெடி ஸ்டேட் புரோகிராம் இந்த வசதியைத் தந்து நம் கட்டுப்பாட்டில் கம்ப்யூட்டரைத் தருகிறது. மிகவும் பயனுள்ள புரோகிராம்.
-கா. இளஞ்செழியன், சென்னை.

மைக்ரோசாப்ட் எத்தனையோ சவால் களைச் சந்தித்துள்ளது. யாரும் எட்ட முடியாத சாதனைகளைச் சாதித்துள்ளது. எனவே எந்த பிரச்னைகளையும் எளிதில் கையாண்டு இந்த ஆண்டிலும் புதிய வசதிகளை நமக்குத் தரும் என்று எதிர்பார்ப்போம்.
-ஜோசப் குமார், தாம்பரம்.

பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் டிப்ஸ் எளிமையாக இருந்தாலும், சில குழப்பமான சூழ்நிலைகளுக்கான தீர்வுகள் இதில் இல்லை. அப்படிப்பட்ட சிக்கல்களூக்கான தீர்வுகளைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
-நீ. விஜய சந்திரன், கல்லல்.

டெரா பைட் குறித்த தங்களின் வேடிக்கையான விளக்கத்தினை படித்து சிரித்து மகிழ்ந்தேன். டேட்டா சேமிப்பில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன.
-சி. அருண்ராஜ், சென்னை.

ப்ரீமேக் வீடியோ கன்வர்டர் புரோகிராம் இயக்கம் அதிசயத்தக்க திறனுடன் செயல்படுகிறது. இதுவரை ஏன் இது பற்றிக் கூறவில்லை? என உங்களுடன் சண்டை போட ஆசை.
-எஸ். சுப்பிரமணியன், மதுரை.

டாக் எக்ஸ் பைலை டாக் பைலாக மாற்ற இன்டர்நெட் செல்வதைக் காட்டிலும், நீங்கள் குறிப்பிட்ட டாக்ஸ் வியூவர் புரோகிராம்பயன்படுத்துவது
சிறப்பாகவே உள்ளது. தகவலுக்கு நன்றி.
-என். கணேஷ் குமார், விழுப்புரம்.

அடுத்தடுத்து புதிய பிரவுசர் பதிப்புகளை, மொஸில்லா தந்து நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. புதிய வசதிகளும் அடிக்கடி கிடைக்கின்றன. இந்த ஆரோக்கியமான போட்டி, நமக்கு நல்ல பயனை அளிக்கிறது.
-சா. ருத்ரமூர்த்தி, உத்தமபாளையம்.

வடிவமைப்பில் வேறுபட்டுள்ளது என்ற லோகோவுடன் வந்திருக்கும் பயர்பாக்ஸ் புதிய பிரவுசர் உண்மையிலேயே பழைய வற்றிலிருந்து வேறுபட்டு உள்ளது. தொடர்ந்து பயர்பாக்ஸில் இன்னும் பல புதுமைகளை எதிர்பார்க்கலாம்.
-க. பால்ராஜ், உசிலம்பட்டி.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X