மொபைல் வழி பணம் செலுத்துதல்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 ஜன
2012
00:00

மொபைல் போன்களில் சென்ற ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓர் அருமையான தொழில் நுட்பம் நியர் பீல்ட் கம்யூனிகேஷன் (Near Field Communication) என்பதாகும். மொபைல் போன்களைப் பயன்படுத்தி, நாம் பணம் செலுத்த இந்த தொழில் நுட்பம் வழி செய்கிறது. 2011 ஆம் ஆண்டில் மொபைல் பயன்பாட்டில் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றமாக இதனை வல்லுநர்கள் கருதுகின்றனர். அந்த வகையில், இந்த வசதியுடன் கூடிய 3 கோடியே 50 லட்சம் போன்கள் விற்பனையாகியுள்ளதாக ஐ.எம்.எஸ். ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 2012 ஆம் ஆண்டில், இது 8 கோடியாக உயரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 12 மாதங்களில், பல நிறுவனங்கள், குறிப்பாக சாம்சங், ஆர்.ஐ.எம்., நோக்கியா மற்றும் எச்.டி.சி., இந்த வசதியுடன் மொபைல் போன்களை வடிவமைத்துத் தந்துள்ளன. நவீன தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதில் முன்னிலையில் இருக்கும் ஆப்பிள் நிறுவனம் இந்த வசதியுடன் கூடிய மொபைல் போனை இன்னும் அறிமுகம் செய்திடவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
"போனை அசைத்து பணத்தைச் செலுத்திடு' என்பதுதான் இந்த தொழில் நுட்பம் தரும் பெரிய வசதி. 4 அங்குல இடைவெளியில் இரண்டு சாதனங்கள், அவற்றை அசைப்பதின் மூலம் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள இந்த தொழில் நுட்பம் வசதி தருகிறது. தற்போது லண்டன் நகரில் ட்ரான்ஸ்போர்ட் கார்ட்கள் மூலம் இந்த வசதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொருட்களை விற்பனை செய்திடும் கடைகளில் உள்ள சிறிய டெர்மினல் முன்னால், செலுத்த வேண்டிய பணத்தை மொபைலில் குறிப்பிட்டு சற்று அசைத்தால், செலுத்தப்பட வேண்டிய பணம் குறித்த தகவல் பரிமாறிக் கொள்ளப்பட்டு, பணம் கடைக்காரரின் அக்கவுண்ட்டில் சேர்ந்து விடுகிறது. இதற்கு மொபைல் வைத்திருப்பவர், முதலில் தன் பணத்தை, இதற்கான அக்கவுண்ட்டில் செலுத்தி வைத்திருக்க வேண்டும். பர்ஸில் பணம் போட்டு வைத்திருப்பதனைப் போன்றது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது அனைத்து நாடுகளிலும், இந்தியா உட்பட, மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X