சூடு பிடிக்கும் மொபைல் கதிர்வீச்சு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 பிப்
2012
00:00

மொபைல் போன்கள் பயன்படுத்தப்படுகையில் ஏற்படும் கதிர் வீச்சு இதயம், மூளை ஆகியவற்றை அதிகம் பாதிக்கிறது எனவும், அபாய அளவில் கதிர் வீச்சு உள்ள போன்களைத் தடை செய்திட வேண்டும் என்றும் பல அறிக்கைகளை ப் படித்து வருகிறோம். அரசு இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளும் பத்திரிக்கைகள் வாயிலாக வெளி வந்த வண்ணம் உள்ளன. மேலை நாடுகளில் இந்த பிரச்னையை மிகக் கவனத்துடன் அரசுகள் கையாண்டு வருகின்றன. பாதிக்கக் கூடிய அளவில் கதிர்வீச்சு இருக்கும் போன்களை அங்கு விற்பனை செய்திட முடியாது.
இந்தியாவில் இந்த விழிப்புணர்ச்சி மெதுவாக ஏற்பட்டு வருகிறது. இதனால், டில்லி அரசு விழித்துக் கொண்டு, ஒவ்வொரு மொபைல் போன் விற்பனை செய்யப் படுகையிலும், அந்த மொபைல் போனைப் பயன்படுத்துகையில் வெளிப்படும் கதிர் வீச்சு எந்த அளவில் இருக்கிறது என்ற தகவலுடன் கூடிய அட்டையினை இணைக்க வேண்டும் என உத்தர விட்டுள்ளது. மக்கள் நலத்துறை, இந்திய மருத்துவ ஆய்வுத்துறை மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக வல்லுநர்கள் கலந்து கொண்ட கூட்டத்தின் முடிவில் இந்த முடிவு எடுக்கப்பட்டு, அரசு இந்த விதியினைக் கொண்டு வந்துள்ளது. மேலும், மொபைல் போன் களுக்கான டவர் களை அமைக்கும் விஷயத்திலும் பின்பற்ற வேண்டிய நடை முறைகளையும் அறிவித்துள்ளது.

Advertisement

 

மேலும் மொபைல் மலர் செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வைத்திலிங்கம்.s - bahrain,பஹ்ரைன்
10-பிப்-201220:59:13 IST Report Abuse
வைத்திலிங்கம்.s அலைபேசியை உபயோகிக்கும்போது மட்டும்தான் கதிர்வீச்சு பாதிக்குமா ? அல்லது சாதாரணமாக சும்மா வைத்திருக்கும்போதும் பாதிக்குமா? விவரம் தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா.... புண்ணியமாப்போகும் .
Rate this:
Share this comment
Cancel
Gururajan - Jamnagar,இந்தியா
07-பிப்-201208:53:07 IST Report Abuse
Gururajan மொபைல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுவது எல்லோருக்கும் நல்லது. இது பற்றி மக்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X