ஒரு சின்ன பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 பிப்
2012
00:00

இன்டர்நெட் முகவரி மாற்றம் ஏற்படப் போவதனை மிக ரத்தினச் சுருக்கமாகவும், தெளிவாகவும் விளக்கி உள்ளீர்கள்.
-க.சியாமளா சுந்தரம், திருப்பூர்.

யாஹூ ஏற்கனவே தினமலருடன் இணைந்து தமிழில் செய்திகளைத் தந்து வருகிறது. இணைய தளமும் தமிழில் கிடைக்கிறது. மேலும் சில இந்திய மொழிகளில் வருவதனால் இந்தியாவில் யாஹூ அதிகம் பயன்படுத்தப்படும். நமக்கும் பயனாக இருக்கும்.
-பேரா. சி. முத்துராஜ், மதுரை.

இணைய பயன்பாட்டில் எப்படி எல்லாம் சேவையினை பயனாளருக்குக் கொண்டு செல்லலாம் என்பதற்கு வே2 எஸ்.எம்.எஸ். ஓர் உதாரணம். பண்டிகை காலங்களில் வாழ்த்து அனுப்ப மிகவும் உதவிகரமாய் இருந்தது இந்த தளம்.
-எஸ்.கே. அம்பலவாணன், கோவை.

வேர்ட் பார்மட்டிங் மாற்ற கொடுத்த டிப்ஸ் எதிர்பாராத வகையில் சுலபமான வழியைக் காட்டுவதாய் அமைந்துள்ளது.
-என். மரிய சூசை, கிருஷ்ணகிரி.

லேப்டாப் பயன்பாட்டில் இருந்த தயக்கம் விலகும் வகையில் ஒவ்வொரு வாரமும் டிப்ஸ்களைத் தந்து கொண்டிருக்கிறீர்கள். மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்கின்றன.
-என்.சி. கிருஷ்ணன், ஆசிரியர் திண்டுக்கல்.

டிப்ஸ் கம்ப்யூட்டருக்கு மட்டுமின்றி நம் உடல் நலத்திற்கும் தான் என்ற போக்கினை தொடர்ந்து கடைப் பிடித்து, அதற்குமான அறிவுரைகளை வழங்குவதற்கு நன்றி.
-என். கலைச் செல்வி, பெங்களூரு.

ஒருகாலத்தில் உயிராய் இருந்த பேக்மேன் விளையாட்டு குறித்த தகவல்களைத் தந்து, பழைய நினைவுகளூக்கு என்னைக் கொண்டு சென்று விட்டீர்கள். நீங்கள் குறிப்பிட்ட தளம் சென்று ஆசை தீர விளையாடினேன். மிக்க நன்றி.
-மே. சகாயதாஸ், பொள்ளாச்சி.

புரோகிராம்கள் அனைத்தையும் மொத்த மாக மூடுவது ஒரு சிரமமான வேலை. ஆனால் அதற்கும் கூட இணையத்தில் ஓர் இலவச புரோகிராமா என்று வியக்கும் வகையில் நீங்கள் கொடுத்த டவுண்லோட் டிப்ஸ் அமைந்துள்ளது.
-எம். திருமுருகன், வேலூர்.

எம்.எஸ்.ஆபீஸ் ட்யூனிங் குறித்த டிப்ஸ் மிகவும் குறைவாக உள்ளது, இன்னும் நிறைய தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
-அ. கமலேஷ் குமார், சிதம்பரம்.

பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் பயன் பாட்டில், ஸ்லைடுகளை நகர்த்த மட்டும் இத்தனை கீகளா என்று வியக்கும் வகையில் உள்ளது நீங்கள் தந்த குறிப்பு கள். என் மாணவர்களுக்கு இவற்றைக் கற்றுக் கொடுத்தேன். நன்றி.
-பேரா. க.உ. சகாயராஜ், நெய்வேலி.

லேப்டாப் கம்ப்யூட்டரில் உள்ள விஸ்டா சிஸ்டத்தில் பேட்டரி பவர் மிச்சப்படுத்தும் சாப்ட்வேர் ஒன்று உள்ளதே, உங்கள் டிப்ஸைப் படித்த பின்னரே அறிந்து கொண்டேன். அதனை செட் அப் செய்துள்ளேன். மின்சக்தி நிச்சயம் மிச்சப்படுத்தப்பட்டு பேட்டரி வெகு நாட்கள் வரும் என எண்ணுகிறேன்.
-தா. மரியதாஸ், மேலூர்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X