ஒரு சின்ன பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 பிப்
2012
00:00

இந்தியப் பத்திரிக்கைகளுக்கென நீங்கள் தந்த இணைய தளம் மிகப் பயனுள்ளதாக உள்ளது. பத்திரிக்கைகள் மட்டுமின்றி வேறு சில பயனுள்ள தகவல்களும் கிடைக்கின்றன. என் வேலையும் நேரமும் மிச்சமாகிறது. நன்றி.
-தீ. பொன்னீஸ்வரன், ஆசிரியர், கோவை.

எங்களின்கோரிக்கைக்கிணங்க விண்டோஸ் 7 சிஸ்டம் குறித்த தகவல் களைப் பல வகைகளாகத் தந்தமைக்கு நன்றி. இன்னும் இது போல தொடர்ந்து கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
-மீ. செண்பக லஷ்மி, திருப்பூர்.

தமிழ் ஆங்கிலம் கலந்து டைப் செய்கையில், இந்த மேற்கோள் குறிகள் அமைப்பது சிக்கலாகவே இருந்தது. ஏனென்றால், நான் பயன்படுத்தும் தமிழ் எழுத்து சிஸ்டத்தில் மேற்கோள் குறிகள் அமைப்பது சிரமமாக இருக்கிறது. ஆல்ட் கீ மூலம் அமைப்பது மிக எளிதாக உள்ளது. இது போல ஆல்ட் கீ மூலம் அமைக்கக் கூடிய, அடிக்கடி பயன்படுத்தக் கூடிய கேரக்டர் சார்ந்த உதவிக் குறிப்புகளைத் தரவும்.
-என். அப்துல், தேவகோட்டை.

நடந்து கொண்டு மொபைல் பயன்படுத்து வதால், öŒன்னையில் மாதம் ஒருவர் மரண மடைவதாக தகவல் ஒன்றைப் படித்தேன். நீங்கள் தந்துள்ள தகவல்களைப் படித்த பின்னராவது, மக்கள் திருந்த வேண்டும்.
-கே. பாக்யநாதன், மேட்டுப் பாளையம்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பிற்கு தந்தது போல, குரோம் பிரவுசருக்குமான ஷார்ட்கட் கீகளை அடுத்த இதழில் எதிர்பார்க்கிறேன்.
-என்.எஸ். லஷ்மி நாராயணன், ஸ்ரீரங்கம்.

மொபைல் போன் அலைக்கதிர்கள் சார்ந்த செய்திகள் வயிற்றில் நெருப்பு வைப்பதைப் போல் கிடைக்கின்றன. அரசு இதனை மிகக் கடுமையாக அமல் படுத்தினால், மக்களைக் காப்பாற்றலாம். இந்த செய்திகளை அடிக்கடி மக்களுக்குத் தெரிவிக்கவும்.
-பேரா. கே. எஸ். மகேஸ்வரன், நாகமலை புதுக்கோட்டை.

பாதுகாப்பான மின்சக்தியை கம்ப்யூட்ட ருக்கு வழங்குவதில், இத்தனை விஷயங் கள் உள்ளன என்று இப்போதுதான் தெரிகிறது. மின்சக்தி பாதுகாப்பாகச் செல்லவில்லை என்றால், கம்ப்யூட்டர் நிச்சயம் பாழாகிவிடும் என்பதனைப் பல தகவல்கள் மூலம் எடுத்துரைத்த தங்களுக்கு நன்றி.
-கே. ஜெயராம், சென்னை.

யு.பி.எஸ். குறித்த கட்டுரை விளக்கமாக இருந்தது. வாங்குவதற்குச் சரியான சில நிறுவனங்களையும் குறிப்பிட்டிருக்கலாம்.
-எல். கார்த்திகேயன், சிவகாசி.

விண்டோஸ் 7 சிஸ்டத்தினைப் புரிந்து கொள்ள பயன்படுத்தத் தொடங்கிய பின்னர் பல மாதங்களாவது ஆகும். இதற்கு நீங்கள் தரும் குறிப்புகள் நன்றாகவே பயன்படுகின்றன.
-கா. ஆனந்த் குமார், புதுச்சேரி.

ஸ்கேன் செய்திடும் புரோகிராம் விண்டோஸ் சிஸ்டத்திலேயே உள்ளது என்ற செய்தி மிகவும் ஆச்சரியமாக இருந்தது. பயன்படுத்திப் பார்த்தேன். மிக எளிதாகவும் இருந்தது. இன்டர்பேஸ் மிக மிக அருமையாக வழி காட்டியது. காட்டிய உங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
-இரா.திருவள்ளுவன், விழுப்புரம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NARAYANAN. R - Bangalore,இந்தியா
22-பிப்-201217:51:42 IST Report Abuse
NARAYANAN. R  வணக்கம், இணையதளம் முலம் பணம் சம்பாதிக்கலாம் என்று அறிந்தேன் ஆனால் இணையதள முகவரி தேரியவில்லை இணையதள முகவரிகள் சில கூறுங்கள் .
Rate this:
Share this comment
Cancel
ஜானகிராமன் - salem,இந்தியா
21-பிப்-201222:53:24 IST Report Abuse
ஜானகிராமன் தினமலர் கம்யூட்டர் மலருக்கு நன்றி. இன்னும் புதிய விசயங்களை வழங்க வேண்டுகிறேன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X