காலக்ஸி ஒய் டூயோஸ் மற்றும் ப்ரோ டூயோஸ்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

27 பிப்
2012
00:00

சாம்சங் நிறுவனம் சென்ற டிசம்பர் மாதம், தன் டூயல் சிம் ஆண்ட்ராய்ட் மொபைல் போன் வரிசை யில் காலக்ஸி ஒய் டூயோஸ் மற்றும் காலக்ஸி ப்ரோ டூயோஸ் என்ற இரு மொபைல் போன்களை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்திருந்தது. அண்மை யில் இவற்றை இந்தியா விற்குக் கொண்டு வந்துள்ளது. Letsbuy இணைய தளத்தில், இவற்றை முன் கூட்டியே ஆர்டர் செய்திடலாம்.
சாம்சங் காலக்ஸி ஒய் டூயோஸ் மொபைல் போனில் 3.14 அங்குல டச் ஸ்கிரீன் திரை தரப்பட்டுள்ளது. நன்றாக பாலிஷ் செய்யப்பட்ட மெட்டல் மேல்பாகம் பளிச்சிடுகிறது. இதன் தடிமன் 11.98 மிமீ. இதன் எடை 109 கிராம். ப்ரோ டூயோஸ் 2.6 அங்குல அகலத்தில் திரை கொண்டுள்ளது. முழுமையான குவெர்ட்டி கீ போர்டு தரப்பட் டுள்ளது. 3 எம்பி கேமரா மற்றும் இரண்டாவதாக ஒரு விஜிஏ கேமராவும் கிடைக்கிறது. இவை முதல் போனில் இல்லை. இந்த இரண்டு போனிலும் ஆண்ட்ராய்ட் ஜிஞ்சர் ப்ரெட் 2.3 சிஸ்டம் உள்ளது.
இந்த இரண்டு மொபைல் போனிலும் மியூசிக் பிளேயர் சவுண்ட் அலைவ் வசதியுடன் கிடைக்கிறது. 3.5 மிமீ ஹெட்செட் போர்ட் உள்ளது. ஸ்டீரியோ எப்.எம் .ரேடியோ இயங்குகிறது. சாம்சங் நிறுவனத்தின் தொடுதிரை புரோகிராமான, டச்விஸ் யூசர் இன்டர்பேஸ் இயங்குகிறது. இவற்றின் ராம் மெமரி 384 எம்பி. மாறா நினைவகம் 512 எம்பி. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை நினைவகத்தின் திறனை உயர்த்தலாம். 3G (HSDPA 7.2Mbps) , Bluetooth v 3.0, USB 2.0, WiFi 802.11 b/g/n, aGPS ஆகியவை இணைய மற்றும் நெட்வொர்க் இணைப்பு கிடைக்க உதவுகின்றன. இவற்றில் தரப்பட்டுள்ள பேட்டரி 1,300 mAh திறன் கொண்டவை. காலக்ஸி ஒய் டூயோஸ் ரூ. 10,490க்கும், அடுத்த போன் ரூ.11,090க்கும் முன் கூட்டியே ஆர்டர் செய்து பெறலாம். அநேகமாக மார்ச் இரண்டாவது வாரத்தில் இவை வழங்கப்படும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.k.Padmanaban - CHENNAI,இந்தியா
15-செப்-201222:33:48 IST Report Abuse
G.k.Padmanaban similar to computer malar mobile malar also to be allowed to be downloaded.Or else the book can be sold for purchase.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X