கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

27 பிப்
2012
00:00

கேல்வி: கம்ப்யூட்டரில் ஏற்படும் பலவகையான ரிப்பேர்களுக்குத் தீர்வு காணும் வகையில் ஏதேனும் புரோகிராம் இணையத்தில் கிடைக்கிறதா?
-கே. புகழரசி, திருத்தங்கல்.
பதில்: நல்ல கேள்வி. இணையத்தில் பல்வேறு பிரச்னைகளுக்கான தனித்தனி புரோகிராம்களை உள்ளடக்கிய ஒரு புரோகிராம் எனக்குத் தட்டுப்பட்டது. இதனை என் நண்பர்கள் எனக்கு சிபாரிசு செய்ததால், நான் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன். ஒவ்வொன்றையும் நான் இயக்கிப் பார்க்கவில்லை. எனவே நீங்கள் இயக்கிப் பார்த்து, எங்களுக்கு எழுதவும். அந்த புரோகிராமின் பெயர் Computer Repair Kit. இது கிடைக்கும் இணைய தள முகவரி:
http://www.technibble.com/computerrepairutilitykit/

கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தி வருகிறேன். இன்டர்நெட் பிரவுஸ் செய்கையில், டாஸ்க் பார் கூட இல்லாமல், முழுத் திரையையும் பயன்படுத்த விரும்புகிறேன். டாஸ்க் பாரினை மறைப்பது எப்படி?
-நா.ஸ்டாலின், விருதுநகர்.
பதில்: கீழே குறிப்பிட்டுள்ளபடி செட்டிங்ஸ் மேற்கொள்ளவும். டாஸ்க்பாரில் எதுவும் இல்லாத இடத்தில், ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுத்து, அதில் லெப்ட் கிளிக் செய்திடவும். இப்போது ஒரு டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதன் தலைப்பில் Taskbar and Properties என்று இருக்கும். இதில் உள்ள இரண்டு டேப்களில், Taskbar என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் டயலாக் பாக்ஸில், ஐந்து ஆப்ஷன்கள் இருப்பதைப் பார்க்கலாம். மூன்றாவது ஆப்ஷனாக, Keep the Taskbar on Top of the Windows என்று இருக்கும். இதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிட்டு ஓகே கிளிக் செய்து வெளியே வரவும். இப்போது நீங்கள் டெஸ்க்டாப் மட்டும் வைத்திருந்தால் மட்டுமே, டாஸ்க் பார் காட்டப்படும். எந்த புரோகிராமினை இயக்கினாலும், இது மறைந்துவிடும். இதனால், புரோகிராம் ஒன்றை இயக்குகையில், குயிக் லாஞ்ச் மூலம் வேறு புரோகிராம்களை கிளிக் செய்திட இயலாது.

கேள்வி: நாங்கள் ஒரு குழுவாக +2 தேர்வுக்குத் தயார் செய்து வருகிறோம். அண்ணா, எங்களுக்கு இன்டர்நெட்டில் எந்த தளத்தில் பழைய மற்றும் மாடல் வினாத்தாள் கள் கிடைக்கும் என்ற தகவலைத் தரவும். மிகவும் அவசரம். நாங்கள் அரசு இணைய தளத்தில் தேடிய போது கிடைக்கவில்லை.
-எம்.மணிகண்டன், தேவாரம்.
பதில்: இணையத்திலேயே இதற்கான பதிலை கூகுள் தேடுதல் தளத்தில் தேடி இருக்கலாமே தம்பி! இதோ தருகிறேன்.
http://dge.tn.gov.in/question_bank.htm: இங்கு 2006 முதல் 2011 முதல் கேட்கப்பட்ட வினாத்தாள்கள் அனைத்து பாடங் களுக்கும் கிடைக்கும். மாதிரி வினாத்தாள்களைப் பெற http://dge.tn.gov. in/questbank/Plus2Qbank/year2011/default.htm என்ற முகவரிக்குச் செல்லவும். http://dge.tn.gov.in/ என்ற பெயரில் அரசு தேர்வுகள் இயக்ககம் தன் இணைய தளத்தைக் கொண்டுள்ளது. இங்கு சென்றால், நீங்கள் வழி நடத்தப் பெறுவீர்கள். போதுமா தம்பி!

கேள்வி: டூப்ளிகேட் பைல்களைக் கண்டறிந்து நீக்க சில மாதங்களுக்கு முன் பல புரோகிராம்களைத் தந்திருந்தீர்கள். நான் நிறைய பட பைல்களை வைத்துள்ளேன். தொழில் ரீதியாக ஒரு போட்டோ கிராபர். எனவே, படங்களை ஒப்பிட்டுப் பார்த்து, டூப்ளிகேட் பைல்களை அறியும் புரோகிராம் ஒன்றைக் குறிப்பிட்டுக் கூறவும்.
-எஸ்.என். சுகவனம், கோவை.
பதில்: நல்ல கேள்வி. குறிப்பிட்ட பார்மட்களைக் கவனமாகக் கையாண்டு, அதன் அடிப்படையில் டூப்ளிகேட் பைல்களைக் கண்டறிந்தால், நமக்கு மன நிறைவாக இருக்கும். நீங்கள் குறிப்பிட்ட தேவையின் அடிப்படையில், இணைய தளத்தில் உலா வந்த போது, http://duplifinder.codeplex.com/ என்ற இணைய தளம் கண்ணில் பட்டது. இந்த தளத்தில் Duplicate Images Finder என்ற புரோகிராம் உங்களின் தேவையை நிறைவேற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. படங்கள் ஒத்துப் போவதை பிக்ஸெல் பிக்ஸெல்லாக ஒப்பிட்டுப் பார்த்து, டூப்ளிகேட் பட பைல் களைக் கண்டறிகிறது. மற்ற டூப்ளிகேட் பைல்களைக் கண்டறியும் புரோகிராம்களுடன் ஒப்பிடுகையில், இந்த புரோகிராம் சற்று அதிக நேரம் எடுத்தே டூப்ளிகேட் பட பைல்களைக் கண்டறிகிறது.

கேள்வி: சிகிளீனர் என்ற புரோகிராம் குறித்து கேள்விப்பட்டேன். இதன் பயன்கள் என்ன? எந்த இணைய தளத்திலிருந்து இதனைப் பெறலாம்? இதனை நம் பிளாஷ் ட்ரைவில் வைத்துப் பயன்படுத்த முடியுமா?
-என். பிருத்விராஜ், பெங்களூர்.
பதில்: தேவைப்படாத பைல்களைக் கம்ப்யூட்டரை விட்டு நீக்குவதற்கு சிகிளீனர் புரோகிராமினைப் பலரும் தங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்து, பயன்படுத்துகின்றனர். பிளாஷ் டிரைவில் இருந்தவாறு பயன்படுத்த, இதன் போர்ட்டபிள் புரோகிராம் ஒன்று கிடைக் கிறது. இதனை இலவசமாகப் பெற http://www.piriform.com/ccleaner/download/ portable என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும். இந்த புரோகிராம் விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியில் உள்ள உடைந்த வரிகளை நீக்குகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பிற பிரவுசர்கள் வைத்திருக்கும், நம்மைப் பற்றிய பெர்சனல் தகவல்களை எடுக்கிறது. குக்கீஸ், கேஷ் மெமரியில் பதிவாகும் விஷயங்களை நீக்குகிறது. செக்டிஸ்க் பைல் துண்டுகளைக் கண்டறிந்து வெளி யேற்றுகிறது. ரெஸ்டோர் பாய்ண்ட்டுகள் ஏற்படுத்தப் பட்டிருந்தால் அவற்றை பராமரித்துத் தேவையானவற்றை மட்டும் வைத்துக் கொள்கிறது.

கேள்வி: வேர்டில் பல தமிழ் டாகுமெண்ட்களை உருவாக்கி வருகிறேன். வாக்கியம் தொடங்குகையில், ஆங்கில முதல் எழுத்து கேப்பிடல் ஆக இருக்க வேண்டும் என்பதால், நான் டைப் செய்திடும் எழுத்தினை வேறு எழுத்தாக வேர்ட் மாற்றுகிறது. இந்த தொல்லையிலிருந்து நீக்க என்ன செட்டிங்ஸ் ஏற்படுத்த வேண்டும்?
-சி.கே. புவனா, திருப்பூர்.
பதில்: இந்த தொல்லையைத் தமிழில் ஆவணங்களைத் தயாரிப்பவர்கள் எதிர் கொண்டு வருகின்றனர். இதற்கான தீர்வு இதோ. வேர்ட் தொகுப்பில் ஆவணத்தைத் திறந்த பின்னர், Tools | AutoCorrect செல்லவும். பின் கிடைக்கும் பல டேப்கள் அடங்கிய விண்டோவில் AutoCorrect என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இதன் கீழே கீழ்க்காணும் ஆப்ஷன்கள் இருக்கும். இதில் எது உங்களுக்கு எரிச்சலாகத் தோன்றுகிறதோ அதனை நீக்கிவிடலாம். வேர்டில் பெரும்பாலும் தமிழில் டைப் செய்பவர்களுக்கு இவை எதுவுமே உதவப் போவதில்லை. ஏனென்றால் இவை அனைத்துமே ஆங்கில மொழி பயன்பாட்டின் அடிப்படையில் அமைந்தவை. ஆனால் ஆங்கிலத்தைப் பயன்படுத்துபவர் களுக்கு இவை தேவைப்படும். எது தேவையில்லையோ அவற்றை மட்டும் நீக்கி வைக்கலாம். பின் தேவைப்படும் போது மீண்டும் இயக்க நிலைக்கு செட் செய்திடலாம். கிடைக்கும் வசதிகள் பின்வருமாறு:
Correct Two Initial Capitals
Capitalize First Letter Of Sentences
Capitalize First Letter Of Table Cells
Capitalize Names Of Days
Correct Accidental Use Of Caps Lock Key

கேள்வி: சில மாதங்களாக பயர்பாக்ஸ் பிரவுசரைப் பயன்படுத்தி வருகிறேன். இதில் சில புக்மார்க்ஸ் உருவாக்கி உள்ளேன். இருப்பினும் ஏற்கனவே இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் உள்ள பேவரிட் தள பட்டியலையும் இதனுடன் இணைக்க விரும்புகிறேன். இதற்கான வழி என்ன?
-என். மாறன் சகாயராஜ், புதுச்சேரி.
பதில்: பயர்பாக்ஸ் தொகுப்பைத் திறந்து கொள்ளவும். பின் File > Import செல்லவும். கிடைக்கும் இம்போர்ட் விஸார்டில் Microsoft Internet Explorer என்பதைத் தேர்ந்தெடுக்க வும். அதன்பின் Next என்பதில் கிளிக் செய்திடவும். இதில் கிடைக்கும் விண்டோ வில் எந்த விஷயங்களை (Internet Options, Cookies, Browsing History, and/or Favorites) நீங்கள் பயர்பாக்ஸுக்கு மாற்ற விரும்புகிறீர்கள் என்று தேர்ந்தெடுக்கவும். மீண்டும் Next என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து ஒரு விண்டோ உங்களுக்குக் காட்டப்படும். அதில் “The following items were successfully imported” என்று செய்தி இருக்கும். அடுத்து Finish கிளிக் செய்து வெளியேறவும். உங்களுக்கு நீங்களே பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்ளுங்கள். இப்போது பயர்பாக்ஸ் தொகுப்பில் Bookmarks என்பதில் கிளிக் செய்தால் மெனு ஒன்று விரியும். அதில் From Internet Explorer என்று ஒரு பிரிவு இருக்கும். அதனைக் கிளிக் செய்தால் நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் பதிந்து வைத்திருந்த புக்மார்க்குகளைக் காணலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
james alexander - trichy,இந்தியா
28-பிப்-201223:56:04 IST Report Abuse
james alexander அனைத்து தகவல்களும் அனைவர் மனதையும் ஈர்க்கும் வகையில் அமைகிறது, தினமலருக்கு நன்றி!!!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X