ஒரு சின்ன பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 மார்
2012
00:00

இணையம் செயல்படாமல் போய்விடுமா? கேட்கவே நெஞ்சு திக் திக் என்று அடிக்கிறது. இது நெஜமா? அப்படி ஏற்பட்டால், விளைவுகள் மிகவும் தாறுமாறாக இருக்குமே. நாம் கற்காலத்திற்கு போய்விடுவோமே. இன்னும் விரிவாக விளைவுகளை எப்படி எதிர் கொள்ளலாம் என்று ஒரு கட்டுரையைத் தரவும்.
-ஆ. திருமாறன், கோவை
.
இணையம் எல்லாம் முடங்காது சார்!! ஏன் வாசகர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி களைத் தருகிறீர்கள் என்றுதான் எழுத நினைத்தேன். ஆனால் கட்டுரையைப் படித்த பின்னர், தகவல்களையும் தந்து அவற்றிற்கான தீர்வினையும் சுட்டிக் காட்டியது மிகத் தெளிவான ஒரு பார்வையைத் தந்தது.
-கி. ராஜ சிங்கம், சென்னை.

புரோகிராமிங் கற்றுக் கொள்ள நீங்கள் சுட்டிக் காட்டிய அகடமியின் தளம் மிக மிகப் பயனுள்ளது. என்னைப் போன்று கல்லூரியில் பயில்பவர்களுக்கு கூடுதல் துணையாக உள்ளது. உங்களுக்கு கோடி நன்றி. தளத்தில் பதிந்து, மிகவும் அனுப வித்துக் கற்று வருகிறேன்.
-என். சுகந்தன், ஸ்ரீவில்லிபுத்தூர்.

மவுஸ் பைலை தூக்கித் தருமா? என்று வியந்தவாறே உங்களின் கட்டுரையைப் படித்தேன். இப்படியும் மவுஸ் பயன்படுமா என்ற சந்தேகத்துடன் இயக்கிப் பார்த்தேன். இது போன்ற டிப்ஸ்கள் மக்களை கம்ப்யூட்டருக்கு நெருக்கமாகக் கொண்டு செல்கின்றன. இதுதான் உங்களுடைய ஸ்டைலும் கூட. பாராட்டுக்கள்.
-டாக்டர் க. செல்வராஜ், பேராசிரியர், பொள்ளாச்சி.

மின்னஞ்சல் மூலம் பைல் மாற்றும் வசதியைப் பயன்படுத்தினேன். என்ன வேகம்! இந்த தளம் இயக்குபவர் களுக்கும், அது குறித்த தகவல் தந்த உங்களுக்கும் எங்கள் பாராட்டுக் களும் நன்றியும்.
-சி.க. எழில் ராணி, சிவகங்கை.

விண்டோஸ் விநாடி வினா எங்களை பழைய காலத்திற்குக் கொண்டு சென்றது. பல விஷயங்களை என் தந்தையிடம் கேட்டு உறுதிப்படுத்தினேன். இப்படி எல்லாமா இருந்தது என்ற ஆச்சரியமும் கிடைத்தது.
-எஸ்.கே. ராபர்ட், புதுச்சேரி.

நீங்கள் தகவல் தந்துள்ள கம்ப்யூட்டர் ரிப்பேர் கிட் டவுண்லோட் செய்கையில் சற்று தகராறு செய்தது. ஆனால், நன்றாக உதவுகிறது.
-கே.புகழரசி, திருத்தங்கல்.

தமிழ் டாகுமெண்ட்களைத் தயாரிப்பதில் எனக்கிருந்த பல நாள் சிரமத்தைத் தீர்க்கும் வகையில் டிப்ஸையும், அதற்கான விளக்கத்தினையும் தந்ததற்கு நன்றி.
-சி.கே.புவனா, திருப்பூர்.

மொபைல் போன் கோபுரங்கள் பறவை களைக் கொல்கிறதா? என்ன அநியாயம்? அறிவியல் கண்டுபிடிப்புகள் நமக்கு அழிவைத்தான் முதலில் தருகின்றன. இவற்றை அறியாமல் நாம் வாழ்கிறோம். அதற்கு அடிமை ஆகிறோம். இதைத்தான் அன்றே அறிஞர் ரஸ்ஸல் கூறினார்.
-சி.கே.கந்தசாமி, மதுரை.

டி.என்.எஸ். சேஞ்சர் வைரஸ், அதனை உருவாக்குபவர்கள் எப்படி எல்லாம் வழி கண்டு தீமையைத் தருகிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணம்.
-என். கலா ராணி, விழுப்புரம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vinothdharmalingam - Tiruppur,Tamilnadu,இந்தியா
11-மார்ச்-201207:31:38 IST Report Abuse
Vinothdharmalingam Give some tip about trouble shoot
Rate this:
Share this comment
Cancel
நாராயணன் - chennai,இந்தியா
07-மார்ச்-201210:03:58 IST Report Abuse
நாராயணன் கம்ப்யுட்டர் மலர் படித்தவுடனேயே ரிப்பெகிட் டவுன் லோட் செய்யப்போனால் அவர்களே அது கிடைப்பதில்லை என்று போட்டிருந்தார்கள். அதன் ஸ்நாப் ஷாட் கூட அனுப்பியிருந்தேன். எப்படி சகோதரி புவனாவுக்குக் கிடைத்தது. ஆண்களுக்கும் சொல்லி உதவி செய்யவும்
Rate this:
Share this comment
Cancel
ansabapathy - vadalur,இந்தியா
05-மார்ச்-201216:14:14 IST Report Abuse
ansabapathy கம்ப்யூட்டர் மலர் முன்பு புத்தகமாக வந்தது வசதியாக இருந்தது. பின்னர் அதை தாளாக மாற்றினீர்கள் இப்போது சுத்தமாக நிறுத்தி விட்டீர்கள். வீட்டில் கம்ப்யூட்டர் இல்லாதவர்கள் சிரமப்படுகிறோம். தயவு செய்து மீண்டும் புத்தக வடிவில் வெளியிடுமாறு வேண்டுகிறேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X