"கிரீன் டீ' அருந்தலாமா?
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 மார்
2012
00:00

எனது வயது 45. வலது காலில் திடீர் வீக்கம் ஏற்பட்டது. பரிசோதனையில் DVT என வந்துள்ளது. இது என்ன வியாதி? எஸ்.பாலகிருஷ்ணன், சாத்தூர்

Deep Vein Thrombosis என்பதன் சுருக்கமே DVT.. இதில் காலில் உள்ள, "வெயின்'களில் ரத்தக்கட்டி ஏற்பட்டுள்ளது என பொருள். இது காலில் வீக்கமாகவும், வலியாகவும், நிறம் மாறியும் தென்படலாம். அல்லது Thrombosis எனப்படும் ரத்தக் கட்டிகள், மெதுவாக மேலே சென்று, இதயம் வழியாக, நுரையீரல் ரத்தக் குழாயை அடைத்துக் கொண்டு, Pulmonary Embolism எனப்படும் கொடூர பாதிப்பையும் ஏற்படுத்தலாம். இது மூச்சுத் திணறல் மற்றும் திடீர் மரணத்தை ஏற்படுத்தும். ஆகவே, இதற்கு சிகிச்சை முறையாக, முதலில், ரத்தக் கட்டிகளை கரைக்கும் மருந்து வகையாக, Thrombolysis, Heparin F அல்லது Acitrom என்ற மருந்து கொடுக்கப்படும். இந்த ரத்தக்கட்டிகள் நுரையீரல் உள் செல்லாமல் இருக்க, "ஐ.வி.சி., பில்டர்' என்ற, வலை போன்ற உபகரணமும் உள்ளது. இது, வயிற்றில் உள்ள ஐ.வி.சி., ரத்தக் குழாயில் பொருத்தப்படும். இதனால், காலில் இருந்து மேலே செல்லும் ரத்தக் கட்டிகள் தடுக்கப்படும்.


எனது வயது 71. நான்கு ஆண்டுகளுக்கு முன் பை-பாஸ் சர்ஜரி செய்துள்ளேன். நான் "கிரீன் டீ' அருந்தலாமா? ராமன், மதுரை

ஜப்பான், சீனா மற்றும் இதர ஆசிய நாடுகளில், "கிரீன் டீ' அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது, பதப்படுத்தப்படாத தேயிலையில் தயாரிக்கப்படுகிறது. இதில், "ஆன்டி ஆக்சிடென்ட்' அதிகம் உள்ளது. தினமும் மூன்று டம்ளர், "கிரீன் டீ' அருந்தினால் அது பல வழிகளில் நமக்கு நன்மை தருகிறது. மாரடைப்பு வரும் தன்மை குறைகிறது. சில வகை புற்றுநோய்களையும் ஓரளவு தடுக்கிறது. கிரீன் டீ அருந்துவதால், ஞாபக சக்தியும் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. எனவே, தினமும் கிரீன் டீ அருந்துவது நல்ல பழக்கம்தான்.


எனது வயது, 28. எக்கோ பரிசோதனை செய்ததில் எனக்கு, ''RHDN on Calcific MS' என்ற வியாதி உள்ளதாக வந்துள்ளது. நான் திருமணம் செய்து கொள்ள லாமா?
பி. சித்ராதேவி, வேடசந்தூர்

MS என்பது Mitral Stenosis என்பதன் சுருக்கம். இதில் இதயத்தின் இடதுபுறம் உள்ள மைட்ரல் வால்வில் சுருக்கம் ஏற்பட்டுள்ளது என அர்த்தம். இது சிறுவயதில் ஏற்படும் ருமாட்டிக் பீவரின் பாதிப்பாகும். இதற்கு பலூன் சிகிச்சை மூலம், "மைட்ரல் வால்வோ பிளாஸ்டி' என்ற ஆபரேஷன் இல்லாமல், காலில் ரத்தக்குழாய் வழியாக பலூனை செலுத்தி, எளிதில் சரிசெய்யலாம். இச்சிகிச்சையை வால்வுகளில் சுண்ணாம்பு படியாமல் இருந்தால் செய்யலாம். சுண்ணாம்பு படிந்திருந்தால் ஆபரேஷன் செய்ய வேண்டியதிருக்கும். சுண்ணாம்பு படிவதை, எக்கோ மற்றும், கூஉஉ பரிசோதனைகளின் மூலம் அறியலாம். நீங்கள் பலூன் சிகிச்சையை மேற்கொண்டு திருமணம் செய்து, கர்ப்பமும் தரிக்க முடியும்.

டாக்டர் சி.விவேக்போஸ்,
மதுரை

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X