இந்த வார டவுண்லோட் மொபைல் போனுக்கான டால்பின் பிரவுசர்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 மார்
2012
00:00

சென்னை வாசகர் தன் ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களில் தரப்படும் பிரவுசரைக் காட்டிலும் சிறப்பாக இயங்கும் வேறு ஒரு பிரவுசரை நீங்கள் பரிந்துரைக்க முடியுமா என கம்ப்யூட்டர் மலர் பிரிவிற்கு தொலைபேசி யில் வேண்டுகோள் விடுத்தார். இந்த பிரிவில் ஆண்ட்ராய்ட் மொபைல் போன் பயன் படுத்துவோர், நான் உட்பட, பலரும் கூகுள் தரும் பிரவுசரையே பயன்படுத்தி வருகிறோம். கூகுள் இந்த விஷயத்தில் மேற்கொண்ட அசாத்தியமான முதலீடு, முயற்சிகள், மற்றும் பிரவுசர் விஷயத்தில் கூகுள் நிறுவனம் பெற்றுள்ள நல்ல பெயர் ஆகியவற்றால், வேறு பிரவுசரை எண்ணிப் பார்க்கவில்லை. இருப்பினும் வாசகர் கேள்விக்கு பதிலாய் ஏதேனும் உள்ளதா என்று ஆண்ட்ராய்ட் மார்க்கெட்டில் (https://market.android.com/details?id=mobi.mgeek.TunnyBrowser&feature=search_result#?t= W251bGwsMSwxLDEsIm1vYmkubWdlZWsuVH VubnlCcm93c2VyIl0) தேடிப் பார்க்கையில், நம் கண்களில் பட்டது Dolphin Browser HD. இந்த பிரவுசர் குறித்து மேலும் பலரின் கருத்துக்களைப் படிக்க முடிந்தது. பலர் இது குறித்து ஆஹா ஓஹோ எனப் புகழ்ந்துள்ளனர். இது குறித்து, தொழில் நுட்ப ரீதியாக இதன் திறனை விமர்சித்தவர்களும், இதனைப் பாராட்டி எழுதி உள்ளனர்.
இதனை தரவிறக்கம் செய்து, போனில் இன்ஸ்டால் செய்த பின்னரே, இதன் பல சிறப்புகள் மெச்சத்தக்கவையாக இருப்பது தெரிய வந்தது. அவற்றுடன், இந்த பிரவுசர் டெஸ்க்டாப் ஸ்டைலில், டேப் வழி பிரவுசிங், ஸ்பீட் டயல் மற்றும் அருமை யான இன்டர்பேஸ் ஆகியவற்றையும் தருகிற்து. இதனை இயக்கும் வழி குறித்து இங்கு பார்க்கலாம்.
தரவிறக்கம் செய்து போனில் பதிந்தவுடன், இதனை இயக்கவும். உடன் Start now பட்டனில் தட்டவும். அடுத்து கிடைக்கும் Terms of Use திரையில் Accept பட்டனைத் தட்டவும். அடுத்து உங்கள் ராஜ்ஜியம் தான். அடுத்து On demand Flash Support என்பதை நான் தேர்ந்தெடுத்தேன். தொடர்ந்து Perform as Android Phone என்பதையும் என் விருப்பமாகத் தேர்வு செய்தேன். பின்னர் Add shortcuts to the home screen என்பதில் செக் அடையாளத்தை அப்படியே விட்டுவிட்டேன்.
அடுத்து கிடைத்த திரை Import Bookmarks. இதில் Dolphin Connect என்பதை நான் தேர்ந்தெடுக்கவில்லை.
அடுத்த திரையில் slide features விளக்கப்பட்டிருந்தது. இங்கு இடது கீழ் புறம் கிடைக்கும் ஸ்டார் தட்டி புக்மார்க் மற்றும் ஸ்பீட் டயலுக்கான தகவல்களை அமைக்கலாம். புக்மார்க் தட்டியபோது Add bookmark டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதே போல Add to Speed Dial டயலாக் பாக்ஸும் கிடைக்கும். இரண்டிலும் தகவல்களை நிரப்ப வேண்டியதுதான். இறுதியாக ஓகே கிளிக் செய்திட வேண்டியதுதான். அவ்வளவுதான்; உங்கள் பிரவுசர் இயங்க அனைத்தும் ரெடி. டால்பின் பிரவுசர் தொடக்க பக்கத்தில் இரண்டு டேப் மற்றும் நான்கு ஸ்பீட் டயல் பட்டன்கள் கிடைக்கின்றன. அட்ரஸ் பாரின் இடது பக்கத்தில் Home பட்டன் உள்ளது. Refresh பட்டன் வலது பக்கத்தில் உள்ளது. புதிய டேப் வேண்டும் எனில் மேலாக வலது பக்கத்தில் உள்ள + பட்டனைத் தட்ட வேண்டும். நான் ஸ்பீட் டயலில் பல தளங்களை இணைத்தேன். Speed Dial பட்டனில் தொடர்ந்து அழுத்தினால், அதில் ஏற்கனவே பதிந்தவற்றை எடிட் செய்திட அல்லது நீக்கிட முடிகிறது. அசைவுகளுக்கான வடிவமைப்பை உருவாக்கி அதனை ஓர் இணைய தளத்திற்கான ஷார்ட் கட் வழியாக அமைக்க முடிகிறது. நாமாக ஓர் அசைவு கட்டத்தை உருவாக்க, Gesture பட்டனில் டேப் செய்து, பின்னர் Draw a gesture என்பதில் டேப் செய்திட வேண்டும். Gesture settings பிரிவில் இதில் அமைக்கப்பட்டுள்ள பட்டியலை நாம் பரிசீலனை செய்திட முடியும். அல்லது New Gesture அழுத்தி புதிய வடிவமைப்பை உருவக்கலாம்.
இன்னும் இந்த இடைமுகத்தில் உள்ள செட்டிங்ஸ் சென்று, பல வசதிகளைப் பயன்படுத்தும் வழிகளை அறிய முடியும். http://dolphinbrowser.com/download/ என்ற இணைய தளம் சென்றால், ஐ-போன், ஐ-பேட் மற்றும் ஆண்ட்ராய்ட் டேப்ளட் களுக்கான டால்பின் பிரவுசர் தொகுப்பு கிடைக்கிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மகிமை - mettur,இந்தியா
18-மார்ச்-201217:16:44 IST Report Abuse
மகிமை நான் இந்த பிரவுசரை கடந்த நான்கு மாதங்களாக உபயோகித்து வருகிறேன். மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உபயோகிக்க தொடங்கிய நாளிலிருந்து வேறு எந்த பிரவுசரையும் தொடுவது இல்லை. இந்த தகவலை இங்கே கொடுத்த உங்களுக்கு என் நன்றிகள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X