கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 மார்
2012
00:00

கேள்வி: இந்தியாவில் இன்டர்நெட்டை அதிகம் பயன்படுத்துவது இளைஞர்களா? வயதில் மூத்தவர்களா?
-சி. காமராஜ், தேனி.
பதில்: இது என்ன பட்டிமன்றமா? அல்லது வேறு ஏதேனும் குறும்பு உள்ளடக்கி உள்ளதா? இருப்பினும் இதற்கென இணையத்தைத் தேடிய போது, ஆய்வு முடிவு ஒன்று கிடைத்தது. காம் ஸ்கோர் என்ற இந்திய நிறுவனம் இது குறித்த தகவல்களை வெளி யிட்டுள்ளது.
ஆசிய பசிபிக் நாடுகளில் இணையத்தைப் பயன்படுத்துவோரில் 55% பேர் இளைஞர்கள். இந்தியாவில், இணையப் பயனாளர்களில் மூன்றில் ஒருவரின் வயது 15 முதல் 24க்குள்ளாக உள்ளது. இந்தியா வில் சென்ற ஆண்டு 50 கோடி மணி நேரம் இணைய பயன்பாடு மேற்கொள்ளப்பட்டது. இந்த பயன்பாட்டில் 95% பயன்பாடு சமூக வலைத்தளங்களில் இருந்தது. இதிலும் மூன்றில் ஒரு பங்கு பேஸ்புக் தளத்தில் இருந்தது. பயன்படுத்திய 12 பேரில் ஒருவர் ட்விட்டர் தளத்தைப் பயன்படுத்தி உள்ளார். சமூக வலைத் தளங்களினால், இமெயில் பயன்படுத்துவது 15 முதல் 24 வயதுள்ளோரிடம் 22% குறைந்துள்ளது. 25 முதல் 34 வயதுள்ளோரிடம் இது 8% குறைந்தது.

கேள்வி: பைல்களை அழித்த பின்னரும், ஹார்ட் டிஸ்க் ஒன்றிலிருந்து, ரெகவரி சாப்ட்வேர் மூலம் அந்த பைல்களை மீண்டும் பெற முடியும் என்று கூறுகிறார்கள். என் அலுவலகத்தில் அது போல இல்லாமல், நிரந்தரமாக பைல்களை அழிக்க வேண்டும். அதற்கான சாப்ட்வேர் எதுவும் கிடைக்குமா?
-கி. இராஜமாணிக்கம், திருப்பூர்.
பதில்: மிக நல்ல கேள்வி. தாள்களை நீங்கள் விரும்பும் வகையில் அழிக்க, ஷ்ரெடர் (Shredder) பயன்படுத்துகிறோம். அதே போல பைல்களை அழிக்கவும் ஒரு புரோகிராம் உள்ளது. இதன் பெயர் எரேசர் (Eraser). இதனை http://eraser.heidi.ie என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து பெறலாம். இது ஹார்ட் டிஸ்க்கில் காலியாக உள்ள இடத்தில், மேலும் மேலும் எழுதுவதால், ரெகவரி சாப்ட்வேர் பயன்படுத்தி, அழித்த பைல்களைத் திரும்ப எடுக்க முடியாது. ஆனால், இதனை வழக்கமான பிளாட்டர்கள் கொண்ட ஹார்ட் டிஸ்க்குகளில் மட்டுமே பயன்படுத்த முடியும். தற்போது பழக்கத்தில் வந்து கொண்டிருக்கும் சாலிட் ஸ்டேட் டிஸ்க்குகளில் பயன் படுத்த முடியாது.

கேள்வி: நம்மிடம் உள்ள சாப்ட்வேர் புரோகிராம், அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை எப்படி அறிவது?
-சி.ஆரூரான், தஞ்சாவூர்.
பதில்: முதலில் அந்த புரோகிராமின் பதிப்பு எண் தெரிந்து கொள்ள வேண்டும். பின்னர், அதனைத் தயாரித்து வழங்கிய நிறுவனத்தின் இணைய தளம் சென்று, நீங்கள் வைத்துள்ள புரோகிராமிற்கான அப்டேட் பைல்கள் வெளியிடப்பட்டுள்ளனவா என்ற தகவலைத் தேடி அறிந்து கொள்ளலாம். இது ஒவ்வொரு புரோகிராமிற்கும் வேறுபடும். இதற்குப் பதிலாக, இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் அப்டேட் செக்கர் (updatechecker) என்ற புரோகிராமினைப் பயன்படுத்தலாம். இது http://www.filehippo. com/updatechecker என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது. இதனை தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் பதிந்து இயக்கினால், இது தானாகவே செக் செய்து நமக்கு பதில் தருகிறது.

கேள்வி: என் தனிப்பட்ட கம்ப்யூட்டரில் ரூட்கிட் வைரஸ் உள்ளதாகக் கம்ப்யூட்டர் ஸ்கேன் காட்டுகிறது. இதற்கு என் நண்பர் கொடுத்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை இயக்கி னேன். அந்த வைரஸ் நீக்கப்படுவதாக செய்தி வந்தது. ஆனால், மீண்டும் உள்ளதாகத் தெரிகிறது. என்ன செய்யலாம்? பார்மட் தான் செய்திட வேண்டுமா? உங்கள் பதிலைப் படித்த பின்னரே முடிவெடுக்க வேண்டும்.
-கே.என். தமயந்தி, நாமக்கல்.
பதில்: உடனே பதில் வேண்டும் என்பதற்காக இப்படி எல்லாம் பயமுறுத்தக் கூடாது. ஓகே. ரூட்கிட் வைரஸ் நீக்க மற்ற புரோகிராம்கள் தவறிழைக்கையில், காஸ் பெர்ஸ்கி டி.டி.எஸ். கில்லர் (kasperskytds killer) என்ற புரோகிராமினைப் பயன் படுத்தலாம். இந்த புரோகிராம், ரூட் கிட் வைரஸை அறவே ஒழிக்கிறது. இதனை http://support.kaspersky.com/viruses/solutions?qid=208283363 என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாகப் பெறலாம்.

கேள்வி: மெயில்களுடன் அட்டாச் செய்யப்பட்டு வரும் பைல்களை, டவுண்லோட் லிங்க்கில் கிளிக் செய்து, பின் டைரக்டரி அல்லது போல்டர் குறிப்பிட்டு டவுண்லோட் செய்திட வேண்டியுள்ளது. வேறு எளிய வழி உள்ளதா?
-கா.திருமுருகன், வேலூர்.
பதில்: நல்ல கேள்வி தான். சுற்றி வந்து, பைலை சேவ் செய்வதற்குள் நமக்குப் பொறுமை போய்விடுகிறது, இல்லையா? இதற்கான வசதியை ஜிமெயில் அண்மையில் தந்துள்ளது. (மற்ற எந்த மெயில் கிளையண்ட் புரோகிராமும் இந்த வசதியைத் தந்ததாகத் தெரியவில்லை.) இந்த புதிய வசதியினை ஜிமெயில் draganddrop என அழைக்கிறது. ஒவ்வொரு இணைக்கப் பட்ட பைலுக்கும், டவுண் லோட் என்பதில் கிளிக் செய்திடாமல், பைலின் மீது கர்சரைக் கிளிக் செய்து, அப்படியே இழுத்து வந்து, அந்த பைலை எங்கு சேவ் செய்திட வேண்டுமோ, அந்த ட்ரைவ் அல்லது போல்டரில் விட்டால் போதும்.
முன்பு ஜிமெயில், தன் மின்னஞ்சல்களில், பைலை அட்டாச் செய்திட இந்த வசதியைத் தந்தது. பைலின் மீது கர்சர் கொண்டு பிடித்து இழுத்து வந்து மெயிலில் விட்டுவிட்டால் போதும். பிரவுஸ் செய்து, பைலைத் திறந்து, அட்டாச் செய்திடும் வேலை எல்லாம் தேவையில்லை.
இன்றும் ஜிமெயிலே மக்களின் அபிமான மெயிலாக முதல் இடத்தில் உள்ளது என்றால், கூகுளின் தொடர்ந்த உழைப்பும், தன் வாடிக்கையாளர்களுக்கு வசதி தரும் வகையில், ஏதேனும் ஒரு புதியது ஒன்றைத் தந்து கொண்டிருக்கும் பழக்கமே ஆகும்.

கேள்வி: மின் அஞ்சலில் அட்டாச் செய்யப்படும் பைலின் அளவு எந்த அளவை மீறக் கூடாது?
-கா. செண்பக லஷ்மி, மதுரை.
பதில்: நீங்கள் எந்த இமெயில் கிளையண்ட் பயன்படுத்துகிறீர்கள் என்று எழுதவில்லையே. ஜிமெயில் 25 எம் பி அளவு கொண்ட பைல் வரை ஏற்றுக் கொள்கிறது. யாஹூ மெயில் 100 எம்பி, அவுட்லுக் 5 ஜிபி அளவுள்ளவரை பைல்களை ஏற்றுக் கொள்கின்றன. இதற்கும் மேலாக எனில், WeTransfer போன்றவற்றின் உதவியை நாடலாம். இவை போன்றவை, பைல்களைத் தளங்களில் ஏற்றி வைத்துக் கொண்டு, நாம் அனுப்ப விரும்பும் நபர்களுக்கு, அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு, பைல்களை இறக்கிக் கொள்வதற்கான லிங்குக்களை அனுப்புகின்றன.

கேள்வி: நான் எக்ஸெல் 2003 பயன்படுத்தி வருகிறேன். இதில் அதிகபட்சம் எத்தனை படுக்கை வரிசை மற்றும் நெட்டு வரிசைகளில் டேட்டாவினை அமைக்கலாம்?
-பழ. சோலையப்பன், காரைக்குடி.
பதில்: 256 நெட்டு வரிசை மற்றும் 65,536 படுக்கை வரிசை. இதனை உங்கள் ஒர்க்ஷீட் ஒன்றின் இறுதி வரை சென்று பார்த்திருக் கலாமே! இன்னும் சில கூடுதல் தகவல்களைத் தரட்டுமா! ஒரு செல்லில் 32,767 கேரக்டர்களை அமைக்கலாம். ஆனால், செல்லில் 1,024 கேரக்டர்கள் மட்டுமே காட்டப்படும். அனைத்தும் எனில், அவை பார்முலா பாரில் மட்டுமே காட்டப்படும். ஒர்க்ஷீட்டில் மேற்கொண்ட செயல் பாட்டினை, பின்னோக்கிச் சென்று நீக்குவதனை 16 முறை மேற்கொள்ளலாம்.

கேள்வி: என் சிறு வயது மகள், கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடுகிறாள். அப்போது டாஸ்க்பாரில் மவுசை ஏதோ செய்து டாஸ்க் பாரினை வலது பக்கத்தில் இழுத்து வைத்துவிடுகிறாள். மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவது எப்படி? இதனை எந்த வழியில் தடுக்கலாம்?
-கி. இராஜமாணிக்கம், செங்கல்பட்டு.
பதில்: டாஸ்க் பாரில் மீண்டும் எதுவும் இல்லாத இடத்தில் கர்சரைக் கொண்டு சென்று, கீழாக இழுத்துவிடவும். கர்சரை டாஸ்க்பாரின் பார்டரில் கொண்டு சென்றால், கர்சர் தன் உருவை மாற்றுகையில், இதற்கான வழி காட்டப்படும். மீண்டும் டாஸ்க்பார் கீழே வந்தவுடன், அதன் காலிப் பகுதியில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Lock the Taskbar என்பதில் கிளிக் செய்திடவும். இனி மீண்டும் இந்த பிரிவில் உள்ள டிக் அடையாளத்தை எடுக்காமல், டாஸ்க் பாரை நகர்த்த முடியாது.

கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பி பயன்பாடு படிப்படியாகக் குறைந்து விடும் என்று கூறுகிறார்கள். கட்டாயம் வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள வேண்டுமா? (என் கம்ப்யூட்டர் அந்த அளவிற்கு உயர்வகை அல்ல)
-என். சேகர், உசிலம்பட்டி.
பதில்: பலரின் மனதைத் தற்போது ஆட்டி வரும் குழப்பம் இது. விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துவது படிப்படியாகக் குறைந்து வருவது உண்மையே. இருப்பினும் அதிகம் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதுதான். இன்னும் 45% பேரால் எக்ஸ்பி பயன்படுத்தப்பட்டு வருகிறது. விண்டோஸ் 7 படிப்படியாக முன்னேறி வருகிறது (38%).சென்ற ஆண்டு பிப்ரவரியில், எக்ஸ்பி 57% பேரால் பயன்படுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. மைக் ரோசாப்ட் நிறுவனமும், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களை, எக்ஸ்பி சிஸ்டத்தினை விட்டுவிட்டு, விண்டோஸ் 7க்கு மாறச் சொல்கிறது. 2014 ஆம் ஆண்டு ஏப்ரலுக்குப் பின்னர், மைக்ரோசாப்ட் விண்டோஸ் எக்ஸ்பிக்கு தந்து வரும் சப்போர்ட்டை நிறுத்திவிடும். அதாவது, எக்ஸ்பியில் உள்ள பிழைகளைச் சரி செய்திடும் அப்டேட்டட் பைல்களை வெளியிடாது. எனவே மாறிக் கொள்வது நல்லது. கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 பதிய இயலாது எனில், எக்ஸ்பி உள்ள சிஸ்டத்தில் வைரஸ் எதுவும் அணுகாத வகையில் பாதுகாப்பு மேற்கொள்ள வேண்டும். இணைய இணைப்பினைத் தவிர்க்க வேண்டும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முரளி - chennai,இந்தியா
13-மார்ச்-201215:54:24 IST Report Abuse
முரளி கம்ப்யூட்டர் மலர் டவுன்லோட் செய்வது எப்படி இதற்கு சிறந்த வழி எது என்று தயவு செய்து சொல்லவும். இலவசமாகப் பெறலாமா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X