இன்டெக்ஸ் சென்ஸ் பட்ஜெட் போன்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 மார்
2012
00:00

நுகர் வோருக்கான எலக்ட்ரானிக் பொருட்கள், தகவல் தொழில் நுட்பத்துறைக்கான ஹார்ட்வேர் சாதனங் கள் மற்றும் மொபைல் போன் சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் இந்திய நிறுவனமான இன்டெக்ஸ், அண்மையில் சென்ஸ் என்ற பெயரில், பட்ஜெட் விலையில், 3.2 அங்குல அகலத்திரையுடன், டச் ஸ்கிரீன் மொபைல் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.3,690. இதில் இன்டெக்ஸ் அப்ளிகேஷன் ஸ்டோர், பன்னாட்டளவில் பிரபலமான 42 கேம்ஸ், சில அறிவியல் மற்றும் துப்பறியும் நூல்கள் ஆகியன பதிந்தே தரப்படுகிறது. கூடுதலாக, பயனாளர், இதன் கூடுதல் நினைவகத்தில் 500 நூல்களைப் பதிந்து வைத்துக் கொள்ளலாம். இதன் உள் நினைவகம் 79 எம்.பி. இத்துடன் 4 ஜிபி மைக்ரோ எஸ்.டி. கார்ட் வழங்கப்படுகிறது.
இதன் மற்ற சாதனங்கள் நம்மை ஆச்சரியப் பட வைக்கின்றன. ஆடியோ ஈக்குவலைசர், சவுண்ட் ரெகார்டர், டூயல் எல்.இ.டி. டார்ச் லைட், இரண்டு கேமரா, பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக தளங்களுக்கான ஷார்ட் கட், ஸ்கெட்ச் நோட் எனப் பல வசதிகள் தரப்பட்டுள்ளன. தொடர்ந்து 4.5 மணி நேரம் பேசும் வசதியும், மின் சக்தியை 380 மணி நேரம் தக்க வைத்திடும் வசதியும் கிடைக்கும் வகையில் இதன் பேட்டரி திறன் அமைந்துள்ளது.
இதன் அதிக பட்ச விலை ரூ.3,690. இன்டெக்ஸ் நிறுவனத்தின் தனி விற்பனை நிலையங்கள் மற்றும் மொபைல் விற்பனை நிலையங்களில் இது கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது.
வாடிக்கையாளர்களின் தேவைகளையும் எதிர்பார்ப்பினையும் அடிப்படையாகக் கொண்டு தாங்கள் மொபைல் போன் களை வடிவமைப்பதாகவும், அந்த வகையில் ஒவ்வொரு போனிலும் கூடுதல் வசதிகளைத் தந்து வருவதாகவும், இன்டெக்ஸ் நிறுவன பொது மேலாளர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X