பயர்பாக்ஸில் குக்கீகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 மார்
2012
00:00

ஒரு பிரவுசர் புரோகிராமினைப் பயன்படுத்துபவரின் விருப்பங்களையும் தேர்வுகளையும் அறிந்து கொள்ள, பிரவுசர் கம்ப்யூட்டரில் உருவாக்கி வைத்திடும் பைல்களே குக்கீ பைல்கள். பாஸ்வேர்ட் அறிந்து கொள்ளுதல், விருப்பமான தளங்களைப் புரிந்து கொள்ளுதல் போன்ற பயனாளரின் விருப்பங்களை, இந்த குக்கீ பைல்கள் பதிந்து வைத்துக் கொண்டு, இணைய உலாவினை எளிதாகவும், சிக்கலின்றியும், விரைவாகவும் இயக்குகின்றன. பொதுவாக வே, பிரவுசர்கள் அனைத்துமே, குக்கீ பைல்களை உருவாக்கிப் பதிப்பதனை மாறா நிலையில் தாங்களாகவே இயக்கி செயல்படுத்தும் வகையில் வைக்கின்றன. இருப்பினும், பயனாளர் எண்ணினால், அவற்றை இயங்காமலும், இயங்கும் நிலையிலும் வைக்கலாம். பயர்பாக்ஸ் பிரவுசரில் இவற்றை எப்படிக் கையாளலாம் எனப் பார்க்கலாம்.
டூல்ஸ் (Tools) மெனுவில், ஆப்ஷன்ஸ் (Options) பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் விண்டோவில், Privacy என்ற டேப்பினை இயக்கவும். இதில் History என்ற பிரிவில் Use custom settings for history என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். குக்கீ பைல்களை முழுமையாக இயங்கா நிலையில் வைத்திட, Accept cookies from sites என்ற இடத்தில் இருக்கும் டிக் அடை யாளத்தை எடுத்துவிடவும். இதன் மூலம் தர்ட் பார்ட்டி குக்கீ பைல்களையும் எடுத்துவிட முடியும். அல்லது குக்கீ பைல்களை, அவை உருவாக்கப்பட்டு குறிப்பிட்ட நாள்கள் வரை இருக்கட்டும் என எண்ணினால், Keep until என்ற கீழ் விரி மெனுவில் எத்தனை நாட்கள் அவை இருந்து இயங்க வேண்டும் என்பதனை செட் செய்திடலாம். அல்லது, ஒவ்வொரு முறை குக்கீகள் உருவாக்கப் படுகையில், அவற்றை வைத்துக் கொள்ளவா ? வேண்டாமா? என்ற ஆப்ஷன் உங்களிடம் கேட்கப் பட வேண்டும் எனில், ask me every time என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். ஆனால், இதனைத் தேர்ந்தெடுத்தால், அடிக்கடி இந்த ஆப்ஷன் நம்மிடம் கேட்கப்படும். பின்னர், அதனைக் கண்டு எரிச்சல் படக் கூடாது. இவை குறித்த கூடுதலான கட்டுப்பாடு வைத்துக் கொள்ள, அல்லது குக்கீகள் குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ள என்ற Show Cookies பட்டனில் கிளிக் செய்திடவும். இங்கு நீங்கள் குக்கீகள் அனைத்தையும், அல்லது சிலவற்றை நீக்கலாம், இயக்கலாம், முடக்கலாம் அல்லது கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X