பயர்பாக்ஸ் பதிப்பு 14ல் பி.டி.எப்.
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 ஏப்
2012
00:00

இணைய தளங்களில் இருந்து பைல்களை இறக்கிய பின்னர், அவற்றை இயக்க வேறு ஒரு அப்ளிகேஷன் புரோகிராமினை நாம் பயன்படுத்த வேண்டியதுள்ளது. ஆனால், தற்போது இணைய பிரவுசர்களே, இத்தகைய அப்ளிகேஷன் புரோகிராம்களை இணைத்துத் தரத் தொடங்கி உள்ளனர். இசை பாடல் பைல்களை, பிரவுசர்களே இயக்கும் வகையில் அதற்கான புரோகிராம்கள் பிரவுசரில் இணைத்துத் தருகின்றன.
பல ஆண்டுகளுக்கு முன்னர், பி.டி.எப். பைல்களைப் படிக்க அடோப் நிறுவனத்தின் அக்ரோபட் ரீடர் கட்டாயத் தேவையாய் இருந்தது. இணையத்திலேயே பி.டி.எப். பைல்களை வழங்கிய தளங்கள், இத்தகைய பைல்களைப் படிக்க அக்ரோபட் ரீடர் வேண்டும் என்றும், இலவசமாய் அதனைத் தரவிறக்கம் செய்திட, லிங்க் ஒன்றைத் தந்து வந்தன. இப்போதும் சில தளங்கள் இந்த லிங்க்கை வழங்குகின்றன. அதே போல பிளாஷ் புரோகிராமினையும் அடோப் வழங்கி வந்தது.
ஆனால், இப்போது பி.டி.எப். பைல்களைப் படித்தறிய பிரவுசர்களே வழிகளைத் தரு கின்றன. கூகுள் குரோம், இணையத்திலேயே பி.டி.எப். பைல்களைப் படிக்க வசதி தந்தது. இப்போது பயர்பாக்ஸ் பிரவுசர், பிடிஎப் பைல்களைப் படிக்க வசதி செய்துள்ளது. PDF.js என்னும் ஸ்கிரிப்ட் மூலம் இது சாத்தியமாயிற்று. இதனை ஒரு எக்ஸ்டன்ஷன் ஆக பிரவுசரில் பதிந்து இயக்க முடியும்.
ஆனால், இப்போது மொஸில்லா வெளி யிட இருக்கும் பயர்பாக்ஸ் பதிப்பு 14ல் இந்த எக்ஸ்டன்ஷன் பதிந்தே கிடைக்க இருக்கிறது. பயர்பாக்ஸ் பிரவுசரில் இது ஒரு பெரிய முன்னேற்றமாகும். பிரவுசரிலேயே பி.டி.எப். பைல்களைப் படிக்க வசதி இருப்பது, இதனைப் பயன்படுத்துபவர்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், வேலையும் எளிதாக முடியும். அடோப் அக்ரோபட் ரீடர் அப்ளிகேஷன் புரோகிராம் போல அனைத்து வசதிகளும் இதில் எதிர்பார்க்க இயலாது என்றாலும், இன்னொரு தர்ட் பார்ட்டி புரோகிராமினைச் சாராமல் சுதந்திரமாக இயங்க முடியும் என்பது நல்லதொரு வசதிதானே. மேலும் அடோப் அக்ரோபட் ரீடரின் பாதுகாப்பு தன்மை பெரும் கேள்விக்குறியாய் இருக்கும் சூழ்நிலையில், பிரவுசரில் எந்தச் சிக்கலும் இன்றி பி.டி.எப். பைல்களைப் படிக்க முடியும் என்பது நிம்மதியான இயக்கத்திற்கு வழி வகுக்கும்.
இந்த எக்ஸ்டன்ஷன் குறித்த குறியீடுகள் ஒரு திறந்தவெளி திட்டமாகவே மேற்கொள்ளப்பட்டது; இதனை உருவாக்கிய விதம் குறித்து https://github.com/mozilla/pdf.js என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம். இதனை உருவாக்கிய குழுவின் தலைவர், மொஸில்லாவின் ஆய்வு இயக்குநர் டாக்டர் ஆண்ட்ரியாஸ் ஜெல், இதன் பயன்கள் குறித்துச் சொல்வதனை http://andreasgal.com /2011/06/15/pdfjs/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X