டாகுமெண்ட் புள்ளிவிபரங்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 ஏப்
2012
00:00

வேர்ட் டாகுமெண்ட் ஒன்றை உருவாக்கி, அதனைப் பலமுறை எடிட் செய்திருக் கிறீர்கள். சில நேரம் மற்றவர்களிடம் அலுத்துக் கொள்வீர்கள். இந்த டெக்ஸ்ட் டை எத்தனை தடவை தான் திருத்துவது! என்று. அல்லது எவ்வளவு நேரம் இதை சரி செய்திட செலவு செய்திருப்பேன் தெரியுமா என்று மற்றவர்களிடம் சொல்வீர்கள். யாராவது ஒருவர் எவ்வளவு நேரமப்பா? என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? முறைத்துப் பார்ப்பீர்களா?
தேவையே இல்லை. வேர்ட் டாகுமெண்ட் பைல் இது மட்டுமின்றி இன்னும் பல தகவல் களை தொடர்ந்து கண்காணித்து, கணக் கிட்டு பதிந்து வைக்கிறது. டாகுமெண்ட் பைல் எந்த நாளில் உருவானது, என்று எடிட் செய்யப்பட்டது, மொத்தம் எத்தனை நிமிடங்கள் எடிட் செய்யப்பட்டது என்ற புள்ளிவிபரங்களை உடனுடக்குடன் அமைத்துக் கொள்கிறது. இந்த விபரங் களைக் காண வேண்டுமென்றால், டாகுமெண்ட் திறந்திருக்கும்போதே, பைல் மெனு கிளிக் செய்து, அதில் திறக்கப்பட்ட பைல் பட்டியல் மேலாக ப்ராப்பர்ட்டீஸ் என்று ஒரு பிரிவு இருக்கும். அதில் கிளிக் செய்திடவும். உடன் பைல் பெயர் இணைந்த ப்ராப்பர்ட்டீஸ் விண்டோ கிடைக்கும். இந்த சிறிய விண்டோவில் ஐந்து டேப்கள் காட்டப்படும். அதில் ஸ்டேட்டிஸ்டிக்ஸ் என்ற டேப்பில் கிளிக் செய்தால், எப்போது பைல் உருவாக்கப்பட்டது, எப்போது கடைசியாக திறக்கப்பட்டது, எடிட் செய்யபட்டது என்ற விபரங்கள் காட்டப்படும். அதன் கீழாக யார் அதனை சேவ் செய்தது என்று யூசர் நேம் காட்டப்படும். மொத்தம் பைலை எடிட் செய்த நேரம் எவ்வளவு என்று நிமிடங்களில் காட்டப்படும். அத்துடன் பக்கங்கள் எத்தனை, பாராக்கள் எவ்வளவு, வரிகளின் எண்ணிக்கை, சொற்கள், அவற்றை உருவாக்கிய எழுத்துக்கள், ஸ்பேஸ் இணைந்த கேரக்டர்கள் என அக்கு வேறு ஆணி வேறாக என்று சொல்லும் வகையில் புள்ளி விபரங்கள் கிடைக்கும்.
சில வெளிநாட்டு நிறுவனங்கள் நீங்கள் எவ்வளவு நேரம் ஒரு பைலை உருவாக்க எடுக்கிறீர்கள் என்று கணக்கு போட்டு அதற்கான கட்டணம் தருவார்கள். அவர்களுக்கு இந்த புள்ளி விபரங்கள் தான் அடிப்படையாக அமையும். எவ்வளவு நேரம் மொத்தம் ஒரு பைலை எடிட் செய்தீர்கள் என்று அறிய ப்ராப்பர்ட்டீஸ் சென்று தான் அறிய வேண்டும் என்பதில்லை. உங்கள் வேர்ட் டாகுமெண்ட்டிலேயே அதனை இணைக்கும் வசதியையும் வேர்ட் தருகிறது. இதற்குக் கீழ்க்கண்ட படி செட் செய்திடவும்.
1. டாகுமெண்ட்டில் எங்கு இந்த எடிட்டிங் டைம் (Editing time) காட்டப்பட வேண்டுமோ, அங்கு கர்சரை நிறுத்தவும்.
2. Insert மெனுவில் Field என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
3. பீல்டு டயலாக் பாக்ஸ் (Field dialog box) காட்டப்படும். இதில் காட்டப்படும் Categories என்ற பட்டியலில் Date and Time என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அங்கு கிடைக்கும் பீல்டுகளில் EditTime என்பதனையும் தேர்ந்தெடுக்கவும். OK கிளிக் செய்து மூடவும்.
இனி நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் எடிட் செய்த நேரம் நிமிடங்களில் காட்டப்படும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X