இணைய ஆய்வில் சில இனிய தகவல்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 ஏப்
2012
00:00

ஆண்ட்டி வைரஸ் தயாரிப்பில் ஈடுபடும் நார்டன் நிறுவனம், அண்மையில் இந்தியாவில் இணையப் பயன்பாடு குறித்த ஆய்வு ஒன்றை நடத்தி, அதில் கண்டறிந்த முடிவுகளை வெளியிட்டுள்ளது. அவை:
1. இந்தியாவில் சராசரியாக ஒருவரால் நாளொன்றுக்கு 8 மணி நேரம் இணையப் பயன்பாடு மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து இணைப்பில் இருப்பவர்கள், அவர்கள் விழித்திருக்கும் நேரத்தில் பாதிக்கு மேலான நேரத்தை இணையத்தில் செலவிடுகின்றனர். இது வாரத்திற்கு 58 மணி நேரமாக உள்ளது. ஆய்வில் கலந்து கொண்டவர்களில் பாதிப்பேருக்கு, இணைய தொடர்பு அற்ற நிலையில் முதல் மூன்று மணி நேரம் ஒருவகை மனப்பாதிப்பில் இருந்தவர்களாகவே உள்ளனர்.
2. இன்னொரு ஆய்வில், இணையத்தைப் பயன்படுத்துபவர்கள், ஒரு வாரத்தில், இணைய உலாவில் 12.9 மணி நேரமும், சமுதாயத் தளங்களில் 9.7 மணி நேரமும், மின்னஞ்சல் பயன்படுத்துவதில் 6.1 மணி நேரமும் செலவழிக்கின்றனர். இந்த ஆய்வு, இணையம் பயன்படுத்தும் 500 பேர்களைத் தேர்ந்தெடுத்து நடத்தப்பட்டது. இவர்கள் வயது 18 லிருந்து 64 வரை உள்ளவர்கள்.
3. ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 80% பேர், தாங்கள் இணைய இணைப்பில் இல்லாமல் 24 மணி நேரத்திற்கு மேல் இருக்க முடியாது என உறுதியாகத் தெரிவித்தனர்.
4. இணையத் தொடர்பு இல்லாமல் போனால், தங்கள் அத்தியாவசிய வேலை அதிகம் பாதிக்கப்படும் எனவும் கூறினர். அடுத்ததாக, இவர்கள் முக்கியத்துவம் அளித்தது சமுதாய இணைய தளங்களைப் பயன்படுத்துவதுதான். மூன்றாவதாகத் தான், இணையவழி வர்த்தகம் மேற்கொள்வது மற்றும் பணம் செலுத்துவதனைக் கூறினர்.
5. ஒவ்வொருவரும் வீட்டில், குறைந்தது இரண்டு சாதனங்களையாவது இன்டர்நெட்டில் இணைத்து பயன்படுத்துகின்றனர்.
6. இன்னொரு வியக்கத்தக்க தகவலும் வெளியானது. தங்களுடைய தனிப்பட்ட தேவைக்கென வைத்துள்ள கம்ப்யூட்டரில், அடுத்தவர்களை அனுமதிப்பதை வெறுத்தனர். ரூ. ஒரு லட்சம் இழப்பு கூட இதைக் காட்டிலும் பெரியதாகத் தெரியவில்லை.
7. இவர்களில் 60% பேர் மட்டுமே தங்கள் கம்ப்யூட்டர்களில் அடிப்படைப் பாதுகாப்பினை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளும் புதிய மால்வேர் புரோகிராம்களைக் கட்டுப்படுத்தும் வகையில் இல்லை என நார்டன் ஆய்வாளர்கள் தெரிவிக் கின்றனர்.
8. இணைய இணைப்பு பெறுவதில் 92% அளவில் கம்ப்யூட்டர்களும், 72% அளவில் மொபைல் போன்களும், 39% அளவில் டிவிக்களும் பயன்படுத்தப்படுகின்றன.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X