Advertisement
Advertisement
 
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2016 IST
நம் முன்னோர், செம்பு குடங்களில் தான் தண்ணீரை பிடித்து வைப்பார்கள். ஆனால் இன்றோ, செம்புக் குடங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன. ஆனால் வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். செம்புப் பாத்திரத்தில், 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2016 IST
வெந்தயம் ஒன்றும் சாதாரண கசப்பு பொருள் அல்ல; அருமருந்து.நற்குணங்கள்: வெந்தயத்தை வறுத்து பொடி செய்து, 1 டம்ளர் நீரில் ஊற வைத்து உட்கொள்ள வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், சுரம், உட்சூடு, வெள்ளை, சீதக்கழிச்சல் முதலியவைகள் போகும். 17 கிராம் வெந்தயத்தை, 340 கிராம் பச்சரிசியுடன் சேர்த்து சமைத்து, உப்பிட்டுச் சாப்பிட, குருதி பெருகும். கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2016 IST
கோடை காலத்தில், மாசு கலந்த தண்ணீரை பருகினால், பல்வேறு நோய்கள் வர வாய்ப்புள்ளது. இதனால், காய்ச்சி ஆற வைத்த நீரை பருகுவது நலம். காலை ஆகாரத்தை தவிர்த்து விடாதீர்கள். சீரான இடைவெளிகளில், சரியாக உணவு உண்ணுங்கள். ஒருவேளை முடியவில்லையெனில், நல்ல நீரையாவது பருகுங்கள். புகை பிடித்தலை முழுவதுமாக விட்டு விடுங்கள். மது அருந்துதல் மூளையை வேலை செய்யவிடாமல் செய்து விடும்.கண்களை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2016 IST
நம் உடல்நலத்தை தீர்மானிப்பதில், தலையணைக்கு முக்கிய பங்கு உண்டு. தூங்கும்போது நம்மை அறியாமலேயே, கைகளைத் தலைக்கு ஆதரவாக மடக்கி வைத்துக் கொள்வோம். அந்த அளவுக்கு நம்முடைய உடலே, தலைக்கு ஓர் ஆதரவு வேண்டும் என்கிறது. தூக்கத்தில் நம் தலைக்கு ஆதரவாக இருப்பதால்தான், அதை "தலையணை' என்கிறோம். தலையின் எடை ஒருவரின் உடலின் எடையில், 8 சதவிகிதம். இந்த எடையை சரியான நிலையில் வைத்துக் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2016 IST
வீட்டு வேலை, வாகனம் ஓட்டுவது, விரல் ஒடிய கீ-போர்டில் தட்டுவது போன்ற இயக்கங்களால், பெண்களின் கைகள் சொரசொரப்பாகவும், கடினமாகவும் மாறிவிடுகின்றன. சமயங்களில் காய்த்துப்போவதும் உண்டு. கைகள் சொரசொரப்பாக இருப்பதனால், கைகள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. கைகளால் முகத்தைத் தேய்த்துக் கழுவும்போது, கண்களுக்குத் தெரியாத மெல்லிய கோடுகள் முகத்தில் உருவாகும். இதனால் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2016 IST
உடல் ஆரோக்கியத்தை தேடி பயணிக்கும் இயந்திர உலகில், இயற்கை மருந்தாய் கிடைத்திருப்பது காய்களும், பழங்களும். இதில், தான் நம் உடலுக்கு தேவையான, அனைத்து முக்கிய சத்துக்களும் நிறைந்துள்ளன. காய்கறி நிறம், மணம், சுவையை உள்ளடக்கியது. காய்கறிகளில் இருந்து மாவுச்சத்து, புரதம், தாது உப்புகள், வைட்டமின்கள் மற்றும் தண்ணீர் ஆகியவை கிடைக்கிறது. காய்கறிகளில் உள்ள சத்துக்கள் மற்றும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2016 IST
பட்டர் புரூட் என ஒரு பழம் இருப்பது தெரியுமா? பெரும்பாலானவர்கள் இப்பழத்தை அறிந்திருக்க வாய்ப்பில்லை. வெண்ணெய் பழம் என இதை அழைக்கின்றனர். இரண்டாம் சீசன் காலங்களான ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் காய்த்து, சந்தையில் விற்பனைக்கு வரும். தற்போது ஜனவரி இறுதியில், வரத்து துவங்கியதால் பழக்கடைகளில் விற்பனைக்கு வைத்துள்ளனர். இதில், பச்சை நிறத்திலுள்ள மேல் பகுதியை நீக்கி உள்ளே ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2016 IST
மீன் கறியை மண் சட்டியில் வைத்தால், சுவை சிறப்பாக அமைவதுடன், ரத்த கொதிப்பு அதிகரிக்க வாய்ப்பில்லை என, சித்தா மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பொதுவாக, மண் சட்டியை அடுப்பில் வைக்க, பலரும் பயப்படுவது உண்டு. மண் சட்டி வாங்கியதும், சாதம் வடித்த கஞ்சி தண்ணியை சட்டியில் ஊற்றி, சிறு சூட்டில் கொதிக்க வைத்து, ஒரு வாரம் பழக்கினால், சட்டி உடையாது. அதன்பின்பு, முதலில் சட்டியில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2016 IST
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும், கொய்யா பழத்தை, தினமும் மதிய உணவுடன், 200 கிராம் சேர்த்துக்கொள்வதால், ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. கொய்யாப்பழத்தில் வைட்டமின் பி மற்றும் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் அதிகளவில் உள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன. ஆரஞ்சுப் பழத்திலிருக்கும், வைட்டமின் சி போல, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2016 IST
முள்ளங்கியை பயன்படுத்துவோர், அதன் இலைகளை தூக்கி எறிந்து விடுகின்றனர். முள்ளங்கி மட்டுமல்லாமல், அதன் இலை, தண்டுகள், விதை அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்டவை. கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், வைட்டமின் சத்துக்களும் இதில் அதிகம் உள்ளன. இதன் கிழங்கு பகுதியில் இருப்பதை விட, ஆறு மடங்கு வைட்டமின் இ இதன் கீரைகளில் இருக்கிறது.100 கிராம் கீரையில் சுமார், 28 கலோரிகள் ..

 
Advertisement