Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 04,2015 IST
இன்று, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முதல், அரசியல் கட்சிகள் வரை, அனைவரின் கவனத்தை ஈர்க்கும் ஒரே தானம், ரத்த தானம் மட்டுமே. ஆனால் அனைவரும் நினைத்த நேரத்தில், ரத்த தானம் கொடுத்து விட முடியுமா? நல்ல உடல் நலம் உள்ள ஆண், பெண்; 18 வயதுக்கு மேல் 60 வயதுக்கு கீழ் இருப்போர்; குறைந்தது 45 கிலோ எடை இருப்போர், ஆகியோர் ரத்த தானம் அளிக்கலாம் ரத்த தானம் கொடுப்பவரின் ஹீமோகுளோபின் அளவு, 12.5 ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2015 IST
'நேரத்தை வீணாக்க வேண்டாம்; காலம் பொன் போன்றது' என்ற பழமொழிகள் எல்லாம், நாம் அடிக்கடி கேட்டவை; கேட்பவை. 'நேரத்தை வீணாக்காமல், ஏதாவது செய்தால், நல்லது' என்று அந்த பழமொழிகளுக்கு இப்போது அர்த்தம் சொல்லப்படுகிறது. அதன் அடிப்படையில், எப்போது வேண்டுமானாலும், எந்த வேலையையும் செய்யலாம் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. அது தவறு.உண்மை என்ன? : செய்ய வேண்டியதை, செய்ய வேண்டிய ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2015 IST
குழந்தைகள் நல மருத்துவத்தை, சிறப்பு பிரிவாக நான் எடுத்த காரணம், குழந்தைகள் என்றால் எனக்கு பிடிக்கும். தினமும் என் துறைக்கு, சிகிச்சைக்காக வரும் குழந்தைகளோடு, உணர்வுபூர்வமாகவும் இணக்கமாகவும் இருப்பது, என் நடைமுறைகளில் ஒன்று.ஆறு ஆண்டுகளுக்கு முன், மார்ச், 27ம் தேதி, நிஹாரிகா என்ற குழந்தையை சந்தித்தேன். மருத்துவ காரணங்களால், அறுவை சிகிச்சையின் மூலம், தாயின் கருப்பையில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2015 IST
1சொறிசிரங்கு என்றால் என்ன?இது ஒருவகை, தோல் வியாதி. ஆங்கிலத்தில், இதை 'ஸ்கேபிஸ்' என்பர். பொதுவாக, குழந்தைகள் மண்ணில் விளையாடுவதால், சொறிசிரங்கு வரும் என்பர்; அது தவறான கருத்து.2சொறிசிரங்கு வர காரணம் என்ன?ஒரு வகையான, சொறிப்பூச்சிகளே இதற்கு காரணம். இந்த பூச்சிகள், மனிதர்களிடம் மட்டுமே வாழும், ஒரு வகையான ஒட்டுண்ணி. இப்பூச்சிகளின் தாக்கத்தினால்தான் சொறிசிரங்கு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2015 IST
உணவே மருந்தாக இருந்தால், ஆரோக்கிய வாழ்விற்கு தடையில்லை. மாறாக, உணவு நோயை உருவாக்குவதாக இருந்தால், பிரச்னை தான். உணவே மருந்தாக பயன்படும் உணவுதான், வரகு அரிசி காளான் பிரியாணி.வரகு அரிசி காளான் பிரியாணி செய்வது எப்படி?தேவையானவைவரகு அரிசி 1/4 கிலோகாளான் 50 கிராம்வெங்காயம் 1 பெரியதுதக்காளி 1 பெரியதுஎண்ணெய் தேவையான அளவுநெய் சிறிதளவுதயிர் 1 தேக்கரண்டிபச்சை மிளகாய் 2ஏலக்காய் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 08,2015 IST
நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் புளியில் கால்சியம், வைட்டமின் "பி' நிறைந்துள்ளது. தவிர பாஸ்பரஸ், இரும்பு போன்றவைகளும் உண்டு. உணவில் மணம், சுவை ஊட்டவும் புளி பயன்படுகிறது. புளி தென்னிந்தியாவின் ஆதார உணவுகளில் ஒன்று. குழம்பு, ரசம், சாம்பார், புளிக் குழம்பு, புளியோதரை, சட்னி வகைகள். ஆந்திராவில் புளியால் ஆன "பச்சி புளுஸ்'' பிரசித்தம். தாய்லாந்து, மலேசியா, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 08,2015 IST
தேர்வு நேரத்தில் மாணவர்களின் உடல்நலத்தில் கவனம் அவசியம்: பனீர் , பால், தயிர் மாதிரியான புரதச் சத்து அதிகமாக இருக்கிற ஊணவுகள் மாணவர்களின் மூளையை முடுக்கிவிட பயன்படும். தயிர்ல இருக்கிற ப்ரோபையோடிக்-ங்கற ஹூரோ-பாக்டீரியா உடம்புல நோய்கள் பரப்புற, உபாதைகள் கொடுக்கிற வில்லன் பாக்டீரியா கூட்டத்துக்கு எதிரா போராடக்கூடியது. உடம்புல இருக்குற நீர் வத்திப் போச்சுன்னா, தேர்வு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 08,2015 IST
சித்த மருத்துவத்தில், டெங்கு காய்ச்சலை குணப்படுத்த, நிலவேம்பு கஷாயம் பரிந்துரை செய்யப்படுகிறது. இதன்படி, நிலவேம்பு கஷாயத்துடன், சந்திரோதய மாத்திரை, பிரம்மானந்த பைரவ மாத்திரை, மாதுளை மணப்பாகு, அன்னபேதி செந்தூரம் போன்ற சித்த மருத்துவ மருந்துகளை உண்டு பயன்பெறலாம். நில வேம்பு குடிநீர் கஷாயம் என்பது, 9 வகையான மூலிகைகள் கலந்து தயாரிக்கப்படுகிறது. கசப்பு தன்மை கொண்ட நில ..

பதிவு செய்த நாள் : மார்ச் 08,2015 IST
கோதுமை பஞ்சாபிகளின் முதன்மையான உணவு. தற்போது தென்மாநில மக்களிடமும், கோதுமை தனியிடம் பிடித்து வருகிறது. பொதுவாக தெரிந்த இந்த குணங்களை தவிர சிறப்பு தன்மைகள் பல நிறைந்தது. முதுகுவலி, மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு கோதுமையை வறுத்து பொடித்து, அதனுடன் தேன் சேர்த்து உட்கொள்ள கொடுக்க அந்த வலி குணமாகும்.வயிற்றில் புளிப்புத்தன்மை உடையவர்கள் மற்றும் புளித்த ஏப்பம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 08,2015 IST
பூண்டு, வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆலமர விழுதுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி காய வைக்கவும். இத்துடன் படிகாரம் சேர்த்து அரைத்து வைத்து கொண்டு, அதில் பல் துலக்கினால் பல் தொடர்பான பாதிப்புகள் குறையும். ஆலமர பட்டையில் கஷாயம் வைத்து வாய் கொப்பளித்தால் பல்வலி குறையும். நல்லெண்ணெய், 20 மிலி அளவுக்கு வாயில் ஊற்றி அடக்கி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 08,2015 IST
நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி கொப்பளிப்பதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். இத்தகைய நல்லெண்ணெய்யில் வாயைக் கொப்பளிப்பது "ஆயில் புல்லிங்' என்று கூறப்படுகிறது. இதனால் உடலில் உள்ள நோய்களும் குணமாகின்றன. இத்தகைய ஆயில் புல்லிங்கை விடியற்காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில், பல் துலக்கியதும், சுத்தமான நல்லெண்ணெயை இரண்டு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 08,2015 IST
காய்கறியை பச்சையாக சாப்பிட்டால் அது பற்களில் ஒட்டாது. ஆனால் அதை சமைக்கும் போது அது பசையாக மாறி பற்களில் ஒட்டுகிறது. இப்படி நாள்தோறும் பற்களில் ஒட்டிக் கொள்ளும் உணவுத் துகள்கள் பற்களை பாதிக்கின்றன. பல் தேய்க்கும் முறை பற்றியும் நமக்கு சரியாகத் தெரிவதில்லை. விளம்பரத்தில் வருவது போல பிரஷ் முழுவதும் பேஸ்டை நிரப்பி பல் துலக்கக் கூடாது. ஒரு பட்டாணி அளவுக்குத்தான் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 08,2015 IST
உடலில் சாளரமாகவும், தன்னிகரற்ற உறுப்பாகவும் இருப்பவை கண்கள்தான். நமது ஆன்மாவின் கண்ணாடியாக செயல்படுவது கண்கள். அது வெளி உலகை காணும் ஜன்னலாக செயல்படுகிறது. கண்கள் உங்கள் அழகை மட்டும் வெளிப்படுத்துவதில்லை. ஆரோக்கியத்தையும் வெளிப்படுத்துகிறது. நமது வாழ்க்கை முறையே, நமது கண்களின் ஆரோக்கியத்தை நிர்மாணிக்கும் விஷயம் ஆகும். நீண்ட நேரமாக கம்ப்யூட்டர் முன் அமர்ந்து, வேலை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 08,2015 IST
பாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது. வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்டமின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 08,2015 IST
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். அதுபோல ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது கடுகு. திரிகடுகம் என்னும் மூன்று மருத்துவ பொருட்களில், முதல் இடம் கடுகிற்கு உண்டு. அதனால் தான் எல்லா குழம்புகளிலும் கடுகை தாளித்து சேர்க்கிறார்கள். கோடை காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு கடுகு அரைத்துப் பூசப்படுகிறது. கடுகு விதைகளில், உடலுக்கு அவசியமான எண்ணைச் சத்து ..

பதிவு செய்த நாள் : மார்ச் 08,2015 IST
இந்தியாவில் பெருமளவில் பயிரிடப்படும், ஒரு சிறு செடியின் விதை இது. இதன் செடி, 1-2 அடி உயரம் வளரும். விதையின் நிறத்தைக் கொண்டு வெள்ளை எள், செவ்வெள், கரு எள் என மூவகைப் படும். வெள்ளை எள்ளில் எண்ணெய் அதிகம். கறுப்பு எள், அதன் எண்ணெய் அதிகம் உணவுப் பொருளாகவும், மருந்து பொருள்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன. சுவையில் லேசான கசப்பு துவர்ப்புடன் கூடியது, ஜீரண நிலையில் இனிப்பாக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 08,2015 IST
அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உடல்பருமனை கட்டுப்படுத்துகிறது. அத்திப்பழத்தில் வைட்டமின் பி, கே ஆகியவை அடங்கியுள்ளன. இதில் ஆன்டி ஆக்ஸிடென்ட் அடங்கியுள்ளது. இதில் அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து, மாங்கனீசு போன்றவை காணப்படுகின்றன. அத்திப்பழம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. இதற்குக் காரணம் அதில் உள்ள பொட்டாசிய சத்துதான். எனவே ..

பதிவு செய்த நாள் : மார்ச் 08,2015 IST
உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா ..

பதிவு செய்த நாள் : மார்ச் 08,2015 IST
உலகம் எப்படி நீரின்றி அமையாதோ, அதைப்போலவேதான் மனித உடலும். மனித உடலில் தண்ணீர் என்பது ஜீரணம், வியர்வை வெளியேற்றம், உடலுக்குள் சத்துணவை எடுத்துச் செல்வது, திரவ மற்றும் திடக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு, உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருப்பது போன்ற, பல்வேறு இரசாயன மாற்றங்கள் நிகழ்வதற்கு, தண்ணீர் அவசியமாகிறது. நம் உடலின் மொத்த எடையில், 60 சதவீதம் அளவிற்கு இருப்பது ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2015 IST
உடலுக்குள் இருக்கும்போது உறையாமலும், வெளியே வரும் போது உறைதலுமே, ரத்தத்தின் இயல்பு. மனிதர்களில் சிலருக்கு, அடிபட்டு அல்லது காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியில் வந்தால், ரத்தம் உறையாமல், வெளியேறி கொண்டே இருக்கும். அதற்கு, 'ஹீமோபீலியா' எனும் ரத்தம் உறையாமை நோய் என்று பெயர்.ரத்தம், முழுமையாக திரவ நிலையில் இருந்தால் மட்டுமே, ஆரோக்கியமான அணுக்கள் இருக்கும். ஆனால் உடலை விட்டு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2015 IST
ஒவ்வொரு உயிரினமும், ஏதோ ஒரு பயன்பாட்டிற்காகத்தான் உலகில் இருக்கிறது. பரிணாம வளர்ச்சியின்படி வெவ்வெறு திறமைகள், வெவ்வேறு உயிரினங்களிடம் உள்ளன. அனைத்து திறமைகளும், ஒருங்கே உள்ள உயிரினம் என்பது, கிடையாது. கழுதை பொதி சுமக்கும்; நாய் மோப்பம் பிடிக்கும். இவை திறமை; அதாவது இயன்ற விஷயங்கள். கழுதையால் மோப்பம் பிடிக்க முடியாது; நாயால் பொதி சுமக்க முடியாது. அதேபோல்தான் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2015 IST
சரோஜா; அவருக்கு வயது 50, மாதவிடாய் பிரச்னைக்காக, என்னை அடிக்கடி சந்தித்து, சிகிச்சை பெற வருவார். ஆனால், திடீரென்று மாயமானது போல், ஒரு ஆண்டு முழுக்க என்னை சந்திக்க வரவில்லை. நானும் காரணம் தெரியாமல், அவரது உடல்நிலை சரியாகி விட்டது என்று நினைத்து, விட்டுவிட்டேன்.திடீரென்று, ஒருநாள் என்னை சந்திக்க வந்தார். வயிறு இயல்புக்கு மீறி, நான்கு மாத குழந்தை இருப்பது போல், பெரிதாக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2015 IST
1கணையம் என்பது என்ன?உடலில் ஒரேநேரத்தில், செரிமான நீர் மற்றும் ஹார்மோன்களை சுரக்கும், நாளமில்லா சுரப்பியாக செயல்படும், ஒரே உறுப்பு கணையம். இதற்கு இரட்டை சுரப்பி என, மற்றொரு பெயரும் உண்டு.2 கணையம் பாதிக்கப்படுவது எதனால்?'காக்காக்ஸி' எனும் ஒரு வகை வைரஸ், மஞ்சள் காமாலை, அம்மை வைரஸ், 'ருபல்லா' வைரஸ் முதலிய வைரஸ்களில் ஏதாவது ஒன்று, கணையத்தை நேரடியாக தாக்கும்போது, 'நீட்டா ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2015 IST
நார்ச்சத்து மிகுந்த குதிரைவாலி அரிசியில், நம் அன்றாட தேவைக்கான அவசிய ஊட்டச்சத்துகள் உள்ளன. அது, இதயத்துக்கு வலு சேர்க்கும். அதில், சுவையாக செய்யப்படுவதுதான் குதிரைவாலி பணியாரம்.குதிரைவாலி பணியாரம் செய்வது எப்படி?குதிரைவாலி அரிசி 1/2 கிண்ணம்தினை 1/2 கிண்ணம்உளுந்தம் பருப்பு 1/4 கிண்ணம்வெங்காயம் 1 சிறியதுகாய்ந்த மிளகாய் 4உப்பு, எண்ணெய் தேவையான அளவுகடுகு, உளுந்தம் பருப்பு, ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X