Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2015 IST
திடீரென்று ஒருவர் தடுமாறி விழுகிறார். உடனே மருத்துவரிடம் சென்றால், கணுக்கால் மூட்டுக்கு அருகிலுள்ள, 'லிகமென்ட்' எனும் தசைநார் கிழிந்து விட்டது. ஒரு மாதத்திற்கு நடக்கக்கூடாது. மீறி நடந்தால், எலும்பில் முறிவு ஏற்படலாம் என்பார்.'தசைநார்' என்றால் என்ன? அது எப்படி கிழியும்?எலும்பு மூட்டுகளைப் பிணைத்திருக்கும் அமைப்பு தான், 'லிகமென்ட்' எனப்படும் தசைநார், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2015 IST
பெண்களை ஆண்கள் கேலி கிண்டல் செய்ய முக்கிய காரணம் என்ன?லோ.லதா, திருச்சி.பெண்கள் பலவீனமானவர்கள் என்ற எண்ணம் தான். ஆண்கள் கேலி செய்யும்போது, பெண்கள் தைரியமாக எதிர்ப்பு காட்டினால், அது ஆண்களின் ஈகோவை தூண்டுகிறது. இது அதிகமாகும்போது, பெண்களுக்கு ஆபத்தாக மாற வாய்ப்புகள் உள்ளன. பெண்கள் தனியாக இருக்கும்போது, ஆண்கள் கிண்டல் செய்தால், அந்த இடத்திலிருந்து கிளம்புவது தான் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2015 IST
ரம்யாவுக்கு, 32 வயது. திருமணமாகி ஓராண்டு தான் ஆகிறது. 29 வயதிலேயே, 'டைப் 2 டயபடிக்' என்று சொல்லப்படும், இரண்டாம் வகை நீரிழிவு, ரம்யாவுக்கு ஆரம்பமானது. அதற்காக, மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறார். குழந்தை பேற்றுக்கான வயதை அவர் கடந்து விட்டதால், குழந்தை ஏக்கத்தோடு, கணவருடன் ஆலோசனைக்காக என்னிடம் வந்திருந்தார்.தனக்கு, 'டைப் 2 டயபடிக்' இருப்பதால், தான் கர்ப்பமடைந்தால், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2015 IST
கந்தராசனம் செய்முறை1விரிப்பில் மல்லாந்து படுக்க வேண்டும்.2மெதுவாக முழங்காலை மடக்க வேண்டும்; இரு கால்களுக்கு இடையே, சற்று இடைவெளி இருக்க வேண்டும்.3கைகளால் கணுக்காலை பிடிக்க வேண்டும். முடியவில்லையென்றால்,கைகளை குதிகால் அருகில் தரையில் வைத்துக்கொள்ள வேண்டும்.4கைகள் உடம்பை ஒட்டியவாறு இருக்க வேண்டும்.5பின், மெதுவாக மூச்சை இழுத்துக் கொண்டே, முதுகை மேலே உயர்த்த வேண்டும்.6 ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2015 IST
1முதியோரை தாக்கும் முக்கிய நோய்கள் என்னென்ன?முதியவர்களை பாதிக்கும் முக்கியமான நோய், எலும்பு தொடர்பானது. வயதானால் முதலில் முந்திக்கொண்டு வருவது மூட்டுத் தேய்மானம், முழங்கால் எலும்பு அழற்சி, எலும்புகளின் இணைப்பில் ஏற்படும் வலி ஆகியவை தான். 90 சதவீதத்தினருக்கு, எலும்பு தொடர்பான பிரச்னைகள் என்று ஆய்வுகள் சொல்கின்றன. மேலும், ஞாபக மறதி நோய்களும் ஏற்படுகின்றன.2 எலும்பு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2015 IST
உடல் இயக்கத்தில் எலும்பு, நரம்பு, ஜவ்வு ஆகிய மூன்றுக்கும், முக்கியப் பங்கு உண்டு. இதில், பிரச்னை வருவதுதான், உடல் நோயாகிறது. ஜவ்வு மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகள், முதுகு வலியை உருவாக்கும். அளவுக்கு அதிகமான எடையை குனிந்து தூக்குவது, அதிக தூரம் பயணிப்பது, உட்கார்ந்தபடியே பல மணிநேரம் பணியாற்றுவது போன்ற காரணங்களால், உடலின் மைய நரம்பு மண்டல பகுதியான, முதுகுப் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2015 IST
எனது அக்கா மகள், சாதாரண குழந்தைகளை போல் இல்லாமல், வித்தியாசமாக இருக்கிறாள். மருத்துவர் 'மதியிறுக்கம்' (ஆட்டிசம்) என்கிறார். மதியிறுக்கத்தின் அறிகுறிகள் என்னென்ன?த.ரேஷ்மா, சென்னை.மதியிறுக்கம் ஏற்பட்ட குழந்தைகள், நம் கண்களை நேரடியாக பார்க்க மாட்டார்கள்; அவர்களை பார்த்து சிரிக்கும் போது பதிலுக்கு சிரிக்க மாட்டார்கள்; பொருட்களை சரியாக கையாள மாட்டார்கள்; கவனத்தை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2015 IST
சதீஷின் குடும்பம், அழகான கூட்டுக் குடும்பம். அவருக்கு திருமணமாகி இரண்டு பெண் பிள்ளைகள். மூத்த மகள், 10ம் வகுப்பும், இளைய மகள் 8ம் வகுப்பும் படிக்கிறாள். மனைவி கமலா மிகவும் அன்பானவர். எப்போதும் இந்த குடும்பத்தில் மகிழ்ச்சி மட்டுமே நிலவும். இந்த நிலையில், அவர்களின் வாழ்க்கையில் புயல் வீசத் துவங்கியது. திடீரென்று ஒருநாள் சதீஷுக்கு மயக்கம், தலைச்சுற்றல், வாந்தி ஏற்பட்டது. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2015 IST
1 பிறவிக் குறைபாட்டு நோய்கள் என்றால் என்ன?பிறக்கும் போதே குழந்தையின், உடல் கட்டமைப்பில் குறைவு இருந்தால், கருவிலிருக்கும் போது உறுப்புகள் முழு வளர்ச்சியடையாமல் இருந்தால், அதுதான் பிறவிக் குறைபாட்டு நோய். 2 அந்த நோய்கள் ஏன் ஏற்படுகின்றன?ஐம்பது சதவீத பிறவிக் குறைபாடுகளுக்கு நிச்சயமான ஒரு காரணத்தை கூறமுடியாது. சமூக, பொருளாதார காரணிகள் மறைமுகமான காரணமாக அமைகின்றன. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2015 IST
செய்முறை:விரிப்பில் கால்களை முன்புறம் நீட்டி அமர வேண்டும்படத்தில் காட்டியவாறு முழங்கால்களை மடக்கி, கால் விரல்களை கைகளால் பிடிக்க வேண்டும்பார்வையை முன்புறம் ஒரே இடத்தில் பதிக்க வேண்டும். பயிற்சி முடியும் வரை பார்வையை திருப்பக் கூடாதுமெதுவாக மூச்சை இழுத்துக் கொண்டே, கால்களை உடம்பிற்கு முன்னே உயர்த்தி, பின் மூச்சை வெளிவிட்டுக் கொண்டே, முடிந்தவரை இரண்டு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2015 IST
கார்ப்பரேட் கலாசாரம் தந்த வாழ்க்கை முறை...இயந்திரமயமாகி விட்ட வாழ்க்கை முறை...கார்ப்பரேட் கலாசாரம் உருவாக்கி வைத்திருக்கும் “கௌரவ” உணவுப்பழக்கம்...காற்றில் பரவிக்கிடக்கும் கதிரியக்க வலை....இவற்றின் ஆக்கிரமிப்பில் நம்மிடம், நம் முன்னோர்களிடம் இருந்த விஷயங்கள் எல்லாம் கூட நமக்கு “எங்கேயோ கேட்ட விஷயங்களாய்” ஆகிப்போனதன் பலன் தான் இந்த கட்டுரைத் தொடரின் ஆணிவேர். காலைல ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2015 IST
கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆவதற்கு சில ஆசனப் பயிற்சிகள் உண்டு. அவற்றை ஏழாவது மாதத்தில் இருந்து செய்யலாம். ஆசனப் பயிற்சி செய்துதான் சுகப்பிரசவம் ஆக வேண்டியதில்லை. வீட்டு வேலைகளை செய்து வந்தாலே, எளிதாக சுகப்பிரசவம் ஆகும். கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதத்தில் மல்லாந்து படுப்பதோ, மல்லாந்தபடி படுத்திருந்து, அப்படியே எழுவதோ மிகவும் தவறு. முதல் மூன்று மாதங்களுக்கு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2015 IST
அறுசுவை உணவில், தயிருக்கு முக்கியப் பங்கு உண்டு. தயிர் சாப்பிட்டால், என்னென்ன நன்மை கிடைக்கும் என தெரிந்து கொண்டால், தினசரி உணவில் தவிர்க்க முடியாத ஒன்றாததாக தயிர் மாறிவிடும்.தயிர், உடலுக்கு அருமருந்து; குளிர்ச்சியைத் தரும். ஜீரண சக்தியை அதிகரிக்க செய்யும். பால் குடித்ததும், ஒரு மணி நேரம் கழித்து, 32 சதவீத பால் தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர், சாப்பிட்ட ஒரு மணி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2015 IST
விருப்பமான உணவுகள், மசாலா உணவுகள் போன்றவற்றைப் பார்த்தால் சாப்பிடலாமா, வேண்டாமா என்ற அச்சம். அதிகம் சாப்பிடலாமா? சாப்பிட்டால் ஜீரணமாகுமா? நெஞ்சு கரிக்குமா? போன்ற கேள்விகளுக்கெல்லாம் முக்கிய காரணமாக விளங்குவது பித்தம். இந்த பித்தம் தொடர்பான பிரச்னைகளையும், அதனை போக்கும் எளிய இயற்கை மருத்துவ முறைகளையும் பார்ப்போம். இஞ்சித் துண்டை தேனில் ஊற வைத்து, 48 நாட்கள் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2015 IST
இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வறட்சி தாண்டவம் ஆடும் காலங்களில், மக்களின் பசியைப் போக்கும் பொருளாக கம்பு இருந்து வந்துள்ளது. இது இந்தியா முழுவதும் பயிராகும் செடி வகையாகும். வறட்சியான பகுதிகளிலும் விளையக்கூடிய கம்பு பற்றியும், அதன் மருத்துவ குணத்தையும் காண்போம். நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில், அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2015 IST
ஹைஹீல்ஸ் செருப்புகள் பெண்களுக்கு, கம்பீரமான தோற்றத்தை மட்டுமின்றி தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது. இதனால், குட்டையான பெண்கள் தங்களுக்கு உயரமும் கம்பீரமான தோற்றமும் கிடைக்க, உயரமான குதிகால் செருப்புகளை அதிக விலை கொடுத்து வாங்கி அணிகிறார்கள். அப்போது அசவுகரியம், ஆரோக்கிய சீர்கேடுகளையும் சந்திக்கிறார்கள்.குதிகால் செருப்பணியும், 50 சதவீத பெண்கள் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2015 IST
உடலுக்கு வேண்டிய சத்துக்களில், கால்சியம் இன்றியமையாதது. கால்சியம் சத்து உடலில் குறைவாக இருந்தால், எலும்புகள் ஆரோக்கியமின்றி இருப்பதோடு, ரத்த செல்கள் உருவாவதிலும் பிரச்னைகள் ஏற்படும். நிறைய பேர், மூட்டு வலியால் பாதிக்கப்படுகின்றனர். உடலில் கால்சியம் சத்து மிகவும் குறைவாக இருப்பதே காரணம். கால்சியம் அடங்கிய உணவை மட்டும் சாப்பிட்டால், அனைத்தும் சரியாகி விடாது. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2015 IST
இன்றைக்கு, 40 வயதை கடந்த, 80 சதவீதம் பேருக்கு மூட்டுவலி உள்ளது. அதற்கு உடல் உழைப்பும், உடற்பயிற்சியும் இல்லாததே காரணமாகும். அப்படியே வேலை செய்தாலும், பெரும்பாலானவர்கள் நாற்காலியில் அமர்ந்து வேலை செய்கின்றனர். இதனால், உடல் எடை அதிகரித்து மூட்டுவலிக்கு வழி வகுக்கிறது. பாஸ்ட்புட் போன்ற நவீன உணவு பழக்கத்தில் ஆர்வம் காட்டுவதால், உணவை கட்டுப்படுத்த முடியவில்லை. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2015 IST
குழந்தை வளர்ப்பு என்பது, மிகப்பெரிய கலை. வாய் திறந்து பேசும் வரை, எதற்காக குழந்தை அழுகிறது என தெரியாமல், இளம் தாய்மார்கள் படும் அவஸ்தையை விளக்க வார்த்தைகள் இல்லை. இதற்கு தீர்வாக, நாட்டு மருத்துவர்கள் கூறும் சில ஆலோசனைகள்:காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன், ஒரு சொட்டு தேனை நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த, அற்புதமான வரப்பிரசாதம். பொதுவாகவே ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2015 IST
நகங்களில் ஏற்படும் சில மாற்றங்களை வைத்து, உடல் நோய்களுக்கான அறிகுறிகளை எளிதில் கண்டுபிடித்து விடலாம். பொதுவாக நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். நமது உடலில் ஏற்படும் பாதிப்புகளை பொறுத்து, நகங்களின் நிறம் வேறுபட்டிருக்கும். ஈரல் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் வெண்மையாக இருக்கும். சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருந்தால், நகங்களின் வளர்ச்சி குறைந்து, பாதி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2015 IST
வீட்டு விசேஷம், பண்டிகை, திருவிழாவின் போது, வாழை இலையில் சாப்பிடுவது, நமது பாரம்பரியம். ஓட்டல்களும் கூட, இம்முறையை தான் பின்பற்றுகின்றன. வாழை இலையில் சாப்பிடுவது, செரிமானத்துக்கு பெரிதும் உதவுகிறது. முதலில் இனிப்பு: விசேஷங்களில் முதலில் பரிமாறப்படுவது இனிப்பு தான். ஏனெனில், உமிழ்நீர் சுரப்பதால்தான், உணவு செரிமானம் அடையத் தொடங்குகிறது. உமிழ்நீரை அதிகம் சுரக்க ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2015 IST
சங்க காலம் தொட்டே, நெல்லிக்கனி நம் வாழ்வில் கலந்து விட்ட ஒரு கனி ஆகும். அதியமான் அவ்வையாருக்கு நெல்லிக்கனி கொடுத்தில் இருந்து, பல புலவர்கள் நெல்லிக்கனியை பற்றி பாடியுள்ளனர். முதுமையை தடுக்கும் குணம், நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை, சித்தர்கள் முதல் பாமரர் வரை அனைவரும் அறிந்த உண்மை. நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என நிருபித்துள்ளனர். நெல்லிக்கனி அதிக சக்தி வாய்ந்த நோய் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2015 IST
கடலை பர்பியை சிறுவர்களை விட, பெரியவர்களே அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். காரணம் பர்பியின் சுவை தனித்துவமானதாகும். அது மட்டுமல்ல, அதில் உள்ள சத்துக்களும் ஏராளம். வேர்கடலை சாபிட்டால், கொழுப்புச்சத்து அதிகரித்து, உடல் எடை கூடும் என்ற பயம் பலருக்கு உள்ளது, இதனால் ரத்த அழுத்தம் அதிகரித்து மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் வரும் என்ற அச்சமும் உள்ளது. ஆனால், மருத்துவ ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X