Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
Providing an online therapy may be a more effective treatment for anxiety and depression than usual primary care, scientists have found. Researchers at the University of Pittsburgh in the US enrolled 704 depressed and anxious patients who were between 18 to 75 years old. They showed that providing an online computerised cognitive behavioural therapy (CCBT) programme both alone and in combination with Internet Support Groups (ISG) provided better outcomes for patients. The study findings have important implications for transforming the way mental health care is delivered” said the professors at the University of Pittsburgh. ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த ஆர்த்தி மற்றும் ஜஸ்வந்த் இரண்டு பேரும், 1200க்கு 1195 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்தார்கள். திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் மெட்ரிக் பள்ளி மாணவி ஜி.பவித்ரா 1194 மதிப்பெண்கள் பெற்று 2ஆம் இடம் பிடித்தார். நாமக்கல் கந்தம்பாளையம் எஸ்.கே.வி. மேல்நிலைப் பள்ளி மாணவி வேணுபிரீதா 1193 ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
அமெரிக்காவில் உள்ள சிலிகான் வேலிக்கு (Silicon Valley) அடுத்தபடியாக அதிக அளவு மென்பொருள் இன்ஜினியர்கள் பெங்களூருவில்தான் பணி புரிகின்றனர். இங்குள்ள பல்வேறு நிறுவனங்களில் சுமார் 10 லட்சம் பேர் கணினித் துறையில் பணியாற்றி வருகின்றனர். உலகப் புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் 'செயலி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு மையம்' (App Design and Development Centre) தற்போது பெங்களூருவில் அமைய உள்ளது. இதை ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
இந்திய ராணுவத்தில் 2003ல் இணைக்கப்பட்ட பிருத்வி - 2 ஏவுகணையை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (DRDO) வடிவமைத்து உள்ளது. உள்நாட்டுத் தொழில் நுட்பத்துடன், 350 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கக் கூடியதாக பிருத்வி - 2 ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை 500 கிலோ முதல் 1000 கிலோ எடையுள்ள அணு ஆயுதத்தை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது. ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள சண்டிப்பூர் ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
காற்றில் உள்ள மாசு குறித்து உலக அளவில் எடுக்கப்பட்ட ஆய்வில், மிகவும் மோசமான 20 நகரங்களில், 13 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில், கடந்த ஆண்டு முதல் இடத்தில் இருந்த டில்லி, தற்போது, 11ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.உலகம் முழுவதும் 103 நாடுகளில் உள்ள 3,000 நகரங்கள் காற்றில் உள்ள மாசு அடிப்படையில் பட்டியல் இடப்பட்டுள்ளன. பி.எம். - 2.5 எனப்படும், ஒரு கன மீட்டரில் 2.5 ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
1. சபோல் (ஈரான்)2. குவாலியர் (இந்தியா)3. அலகாபாத் (இந்தியா)4. ரியாத் (சவுதி அரேபியா)5. அல் - ஜுபைல் ( சவுதி அரேபியா)6. பாட்னா (இந்தியா)7. ராய்ப்பூர் (இந்தியா)8. பமெண்டா (கேமரூன்)9. க்சிங்டாய் (சீனா)10. பாவ்டிங் (சீனா)11. டில்லி (இந்தியா)12. லுதியானா (இந்தியா)13. டம்மம் (சவுதி அரேபியா)14. ஷிஜியாஜுவாங்க் (சீனா)15. கான்பூர் (இந்தியா)16. கன்னா (இந்தியா)17. ஃபிரோசாபாத் (இந்தியா)18. லக்னோ (இந்தியா)19. ஹண்டன் (சீனா)20. பெஷாவர் ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
போலந்து நாட்டைச் சேர்ந்த 'பார்சி' (Parsee) என்ற தொண்டு நிறுவனம் பார்வையற்றவர்களுக்கு உதவும் 3டி ஸ்மார்ட் கண்ணாடி ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்தக் கண்ணாடியின் மூலம் பார்வையற்றவர்கள் செய்தித்தாள் வாசிக்க முடியும். இந்த ஸ்மார்ட் கிளாஸுடன் இணைக்கப்பட்டுள்ள கேமரா அவர்கள் வாசிக்க வேண்டியவற்றை புகைப்படமாக எடுத்து மொபைல் ஆப்புக்கு (Mobile App) இன்டர்நெட் மூலமாக அனுப்புகிறது. ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
அரசு தாவரவியல் பூங்காவில் வரும், 27, 28, 29 ஆகிய தேதிகளில் மலர் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இதற்காக, தோட்டக்கலைத் துறை சார்பில், ஹாலந்து நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள லில்லியம் மலர்ச் செடிகள் பூக்கும் நிலையில் உள்ளன. ஆசியாட்டிக், ஓரியண்டல் என ஒன்பது வண்ணங்களில் 1,450 தொட்டிகளில் 4,000 லில்லியம் மலர்ச் செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இது சுற்றுலாப் பயணிகளை நிச்சயம் ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
தமிழகம் உட்பட புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் அசாமில் 2 கட்டமாகவும் மேற்கு வங்காளத்தில் 6 கட்டமாகவும் தேர்தல் நடந்தது. தமிழகத்தில் 232 சட்டசபை தொகுதிகளில் நடந்த வோட்டுப் பதிவில் 73.85 சதவீத வோட்டுகள் ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
மாணவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானிகண்களை மூடும்போது சில நிறங்கள் தெரிகின்றன. அது எவ்வாறு தோன்றுகிறது?R.P.ஐஸ்வர்யா, 7ஆம் வகுப்பு , பி.எம்.எஸ். பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சின்ன காஞ்சிபுரம்.கண்களை மூடும்போது நிறங்கள் தெரிவது 'ஒளியறு காட்சிப்போலி' (Phosphene) எனப்படும். வெளிச்சம் ஏற்படும்போது ஒளிக்கதிர்கள் நம் கண்களின் ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
மன்னராட்சிக் காலத்தின் முக்கிய அடையாளம், கோட்டைகள். எதிரிகளின் படையெடுப்புகளில் இருந்து தங்கள் நாட்டைக் காப்பாற்ற, கோட்டை கட்டிக்கொள்வது மன்னர்களின் வழக்கமாக இருந்தது. இந்தக் கோட்டைகள் சில நூறு ஆண்டுகள் தாக்குப்பிடித்த பிறகு, காலப்போக்கில் சிதிலம் அடைந்துவிடும். அவற்றின் பாழடைந்த பகுதிகள்தான் நமக்குப் பார்க்கக் கிடைக்கும். இதற்கு விதிவிலக்காக இருப்பது ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
கணிதத்தில் ஓர் ஆச்சரியமான மேதை ஆய்லர். சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். முழு பெயர் லியோனார்ட் ஆய்லர். பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில் பிரஷ்யப் பேரரசர் பிரெடரிக்கின் சபையில் அறிவியல் ஆலோசகராகப் பணியாற்றினார். பயன்மிக்க சூத்திரங்கள் பலவற்றைக் கண்டுபிடித்து இருக்கிறார். கணிதம் தவிர மற்ற துறைகளிலும் சிறப்பான படைப்புகளை வழங்கி இருக்கிறார். இவரது படைப்புகள் ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
“நான் காணாமப் போயிட்டேன். கண்டுபிடிங்க” என்று குரல் கொடுத்துவிட்டு பாலு ஒளிந்துகொண்டான். நானும் வாலுவும் அவனைத் தேட ஆரம்பித்தோம். இது எப்போதாவது நாங்கள் விளையாடும் ஒரு விளையாட்டு.பாலு சொன்னதைக் கேட்டுக்கொண்டே உள்ளே வந்த ஞாநி மாமா கோபமாக, “ என்ன விளையாட்டு இது. யாரும் காணாம போகக் கூடாது. அதுவும் குழந்தைகள் விளையாட்டாக்கூட காணாமப் போகக் கூடாது” என்று சத்தம் போட்டார். ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
பூமியின் சுற்றளவு சராசரியாக 40,075 கி.மீ. என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்தக் காலத் தொழில்நுட்பங்களைக் கொண்டு இதை அளந்தது பெரிய காரியம் இல்லை. ஆனால், சுமார் 2,250 வருடங்களுக்கு முன்னர், ஓர் அறிஞர் பூமியின் சுற்றளவை ஏறத்தாழ சரியாகக் கணித்துச் சொன்னார்! அவர் பெயர் எரொடொஸ்தேனஸ் (Eratosthenes). கிரேக்க மாமன்னர் அலெக்சாண்டர் உருவாக்கிய, அலெக்ஸாண்ட்ரியா நகரில் வாழ்ந்த அறிஞர் இவர். இவரால் ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
'ஆங்ங்ஙி ஆங்ஙி....' என்று மூச்சு விடாமல் கழுதை கத்துவதைக் கேட்டிருக்கீங்களா? அந்தக் குரல் ஏறக்குறைய 3 கி.மீ. தூரத்திற்கு கேட்கும்.ஈக்விடே (Equidae) என்ற குதிரைக் குடும்பத்தைச் சேர்ந்தது கழுதை. ஆனால் குதிரையை விடவும் வலிமையானது. இதன் அறிவியல் பெயர் ஈக்வஸ் அசினஸ் (Equus asinus). சீனாவில்தான் கழுதைகள் அதிகம் உள்ளன. ஆங்கிலத்தில் ஆண் கழுதையின் பெயர் ஜாக் (jack). பெண் கழுதை ஜென்னி (jennie). கழுதைக் ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
'என்னடா இது பால் நிறத்தில்தானே புறாக்கள் இருக்கின்றன? மாற்றி பால் புகட்டும் புறா'என்று தலைப்பு வைத்து விட்டார்களோ' என்று நினைக்க வேண்டாம். உண்மையிலேயே புறாக்கள் தங்கள் குஞ்சுகளுக்கு பால் கொடுக்கின்றன. புறாக்களின் கழுத்தில் ஒரு சுரப்பி இருக்கிறது. அந்தச் சுரப்பியில்தான் பால் போன்ற திரவம் சுரக்கிறது. திரவத்தை வெளியில் இருந்து தராமல் வாய் வழியாக அப்படியே ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
அமெரிக்கா, கலிஃபோர்னியாவில் கலிசோட்டா என்கிற கற்பனை மாகாணத்தில் இருக்கிறது மவுஸ் டவுன். அங்குதான் மனித குணாதிசயங்களுடன் வாழ்ந்து வருகிறது ஒரு எலி. அதுதான் இன்றுவரை சிறுவர்களின் நம்பர் 1 ஹீரோவாக இருக்கும் 'மிக்கி மவுஸ்'. ஓர் எலியை நாயகனாக்கி வால்ட் டிஸ்னி மற்றும் ஓவியர் ஐவர்க்ஸ் உருவாக்கிய கதாபாத்திரம் இது. முதலில் இந்த எலிக்கு 'மார்டிமர் மவுஸ்' என்றுதான் ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
மஞ்சு: ஏன் சாந்தி மழைல நனையுற. சளி புடிச்சுக்கும். மரியாதையா குடைக்குள்ள வா. சாந்தி: அடப்போடி. எப்பவாவதுதான் இந்த மழையே வருது. கொஞ்ச நேரம் நனையலாம்ன்னு பாத்தா விடமாட்டியே...ம: இப்படியே நனைஞ்சுகிட்டே இரு. பாக்டீரியா, வைரஸ், நாக்குப் பூச்சி அது இதுன்னு ஏதாச்சும் பரவி, காய்ச்சல் வரப் போகுது பாரு.சா: நீ இதுக்கெல்லாம் பயந்துகிட்டு இரு மஞ்சு. அமெரிக்கா விஞ்ஞானிகள் மழையை ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
மே 24, 1819: உலகை ஆண்ட பிரிட்டிஷ் பேரரசின் வரலாற்றில் இவருடைய காலம் மிகவும் முக்கியமானது. மிக அதிக நாட்கள் ராணியாக இருந்துள்ளார். இந்தியாவின் முதல் பேரரசியாக 1876, மே 1 முதல் இறக்கும் வரை இருந்தார். 'ஐரோப்பாவின் பாட்டி' என்று அழைக்கப்பட்ட அலெக்ஸாண்ட்ரினா விக்டோரியா பிறந்தநாள்.மே 24, 1543: வானியலாளர், கணிதவியலாளர், பொருளியலாளர் என பன்முகத் தன்மை கொண்டவர். பூமியை மையமாகக் கொண்டே ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
துண்டுத் தாள்களை வெட்டாமல் ஒட்டாமல், ஒரே மாதிரியாக மடித்து, இணைத்து அழகிய உருவங்கள் செய்யலாம். இந்தக் கலைக்கு 'மாடுலர் ஓரிகாமி' என்று பெயர். இது ஓரிகாமியின் இன்னொரு வடிவம். இந்த வாரம் வெறும் பன்னிரண்டு துண்டுத் தாள்களை இணைத்து, ஒரு தாமரை மொட்டு செய்யப் போகிறோம்.தேவையான பொருட்கள்: வண்ணத் தாள்கள் - பிங்க் நிறம், பச்சை நிறம். இவற்றை 3 செ.மீ. அகலம், 6 செ.மீ. நீளம் அளவிலான ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
உயிரினங்களை ஆய்வு செய்த முன்னோடி விஞ்ஞானி நான். தாவரவியலாளராகவும் விலங்கியலாளராகவும் மருத்துவராகவும் இருந்து புதிய அறிவியல் வகைப்பாட்டு (Scientific classification) முறைக்கும் பெயர் முறைக்கும் (Nomenclature) அடிப்படைகளை உருவாக்கினேன். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்மாலேண்ட் மாகாணத்தில் உள்ள ஒரு பண்ணையில் பிறந்தேன். என் தந்தை ஒரு பாதிரியார். என்னையும் மதகுரு ஆவதற்குப் படிக்கச் சொன்னார். அதில் ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருக்கும் உங்களை, வானத்தில் இருந்து யாராவது படம் எடுத்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் மேலே இருந்தபடி படம் எடுத்துக் கொண்டிருக்கிறது ஒரு கேமரா கண். அதை உங்களுக்குத் தெரியாது. ஆனால், அதற்கு உங்களை நன்றாகத் தெரியும். கூகுள் மேப்ஸ் (Google Maps), யாஹு மேப்ஸ் (Yahoo Maps) போன்ற உலக வரைபட இணையதள செயற்கைக் கோள்களின் கண்கள்தான் அவை! அதுபோன்ற ஓர் இணையதள ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
கேரட் என்றதும் நம் நினைவுக்கு ஆரஞ்சு நிறம்தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால் ஊதா, வெள்ளை, மஞ்சள், சிவப்பு என பல நிறங்களிலும் கேரட் உண்டு.இன்று நாம் பயன்படுத்தும் கேரட்டின் தாயகம் பண்டைய பாரசீகம். அதாவது, இன்றைய ஈரான், ஆப்கானிஸ்தானின் சில பகுதிகள். கேரட் கிழங்கு வகையைச் சேர்ந்தது. கேரட்டின் மேல் பாகத்தில் உள்ள பசுமையான இலை 1 மீட்டர்வரை வளரும். இதன் வெள்ளைப் பூக்கள் கொள்ளை ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
'புளூடூத்' (Bluetooth) - இதற்கும் பல்லுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், தொடர்புக்கும் இதற்கும் பல தொடர்புகள் உள்ளன. வாழ்க்கையில் சிலவற்றை நாம் அடிக்கடி பயன்படுத்துவோம். ஆனால், அதன் பின்னணியில் என்ன இருக்கிறது? அதன் தொழில்நுட்பம் என்ன? போன்றவற்றை அறிந்துகொள்ள, பெரும்பாலும் ஆர்வம் காட்டுவதில்லை. புளூடூத் என்றால் 'அது போன்ல இருக்கும்... பாட்டு, படம் எல்லாம் பகிரலாம்' ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
சாலையில், ஓடாமல் நின்றுபோன வாகனத்தைப் பின்னால் இருந்து சிலர் தள்ளிக் கொண்டிருப்பார்கள். கொஞ்ச தூரம் தள்ளியதும் வாகனம் இயங்கி ஓடத் தொடங்கும். அதைப் பார்த்திருக்கிறீர்களா? ஓடாமல் நின்றுபோன வாகனம், பின்னாலிருந்து தள்ளி விடும்போது மட்டும் எப்படி இயங்குகிறது? வாகனத்தில் சாவியைப் போட்டுத் திருகியதும் அதன் மின் மோட்டார் இயங்குகிறது. எஞ்சினில் உள்ள எரிபொருள் மூலம் ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
அதிர்வே ஒலி. ஒரு பொருளின் ஒவ்வொரு அதிர்வும் காற்றில் ஒலி அலைகளை உருவாக்குகிறது. அதுவே நமக்குக் கேட்கும் சத்தம்.இயற்கையில் அல்லது செயற்கையாக உருவாகும் எல்லா ஒலிகளையும் டெசிபல் (Desibel = db) என்ற முறையில் அளக்கிறோம். ஆரோக்கியமான ஒருவரின் காதால் கேட்க முடிந்த மிகக் குறைந்த ஒலியை 0 டெசிபல் என்று குறிப்பார்கள். அதை விட 10 மடங்கு அதிக சத்தம் 10 டெசிபல் என்றும், நூறு மடங்கு அதிக ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
வேதியியல் பாடத்தில் 'அவகாட்ரோ' எனும் விஞ்ஞானியைப் பற்றிப் படித்திருப்பீர்கள். இவர் இத்தாலி நாட்டில் ஒரு பிரபுக் குடும்பத்தில் பிறந்தவர். குவாரிகுவா, செர்ரெட்டோ எனும் இரு மாவட்டங்களின் பிரபுவாக இருந்தார். அவகாட்ரோ முதலில் படித்தது சட்டம். வழக்கறிஞராகத் தனது பணியைத் தொடங்கினார். அறிவியலில் அதிக நாட்டம் இருந்ததால், அறிவியல் பாடங்களைக் கற்கத் தொடங்கி, ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
மனிதன் கண்ணில்பட்ட நூறு ஆண்டுகளுக்குள்ளாக ஒட்டு மொத்தமாக அழிந்துபோன ஒரு பறவை இனம் உள்ளது. டோடோ (Dodo) என்ற பறவை இனம்தான் அது. மொரிசியஸ் தீவுக்கு 1598-ஆம் நூற்றாண்டில் வந்து இறங்கிய போர்ச்சுகீசிய மாலுமிகள் புதுவிதமான பறவை இனம் ஒன்றைக் கண்டார்கள். அப்பறவையின் மூக்கு வாத்து போலவும், உடல் கோழியைப் போலவும் இருந்தது. இருபது கிலோ வரை எடை இருக்கும் அந்தப் பறவை யாரைப் பார்த்தாலும் ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
தொலைக்காட்சியில் புயல் பற்றிய எச்சரிக்கைச் செய்திகள் சொல்வதைக் கேட்டு இருப்பீர்கள். அப்போது, 'புயல் எச்சரிக்கைக் கூண்டு 1 ஏற்றப்பட்டுள்ளது; 2 ஏற்றப்பட்டுள்ளது' என எண்களைக் குறிப்பிட்டுச் சொல்வார்கள். அது என்ன கூண்டு... என்ன எண்?புயல் வீசும்போது பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாவது கடலோரப் பகுதிகள். குறிப்பாகத் துறைமுகங்கள். புயல் குறித்த எச்சரிக்கையைத் தெரிவிக்க ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
உலக ஆமைகள் பாதுகாப்பு தினம் மே 23மெதுவாகச் செல்வதற்கு உதாரணமாக ஆமைகளைச் சொல்வார்கள். ஆமை நிலத்தில் ஒரு மணி நேரத்திற்கு 70 மீட்டர் தொலைவு வரைதான் செல்லும். ஆனால், நீரில் வேகமாக நீந்தும்.ஆமைகளின் மூன்று வகைகள்1. டர்ட்டில் (Turtle) - நிலத்திலும், நீரிலும் வாழும் கடல் ஆமைகள்2. டார்ட்டாய்ஸ் (Tortoise) - காட்டின் நிலப்பரப்பில் மட்டும் வாழும் ஆமைகள்3. டெராபின் (Terrapin) - ஆறு, குளம் போன்ற சுத்தமான ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
அரண்மனை போன்ற பெரிய வீடு. அதற்கு ஆனந்த பவன் என்று பெயர். அந்த மாளிகையில் ஓர் அரச குமாரனாக வலம் வந்தவர் ஜவஹர்லால் நேரு. பெரும் செல்வந்தரான மோதிலால் நேருவின் மகனான நேரு, தன் பதினைந்தாம் வயதிலேயே கல்விக்காக வீட்டை விட்டு வெளியேறினார். இங்கிலாந்தின் ஹாரோ (Harrow) பள்ளியில் படிப்பு. அவரது பள்ளிக் காலத்தில்தான் ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டு பிடித்தனர். அதைக் கண்ட நேரு ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
கிரனடாவில் நடந்த லா லிகா கால்பந்து தொடரின் லீக் போட்டியில் பார்சிலோனா, கிரனடா அணிகள் மோதின. தொடக்கம் முதலே அசத்திய லூயிஸ் ஸ்வாரெஸ் 'ஹாட்ரிக்' கோல் அடிக்க, பார்சிலோனா அணி 3 - 0 என வெற்றி பெற்றது. இதன் மூலம், 38 போட்டிகளில் 29 வெற்றி, 5 தோல்வி, 4 'டிரா' பெற்ற பார்சிலோனா அணி புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து, கோப்பை வென்றது. இந்தத் தொடரில், பார்சிலோனா அணி கோப்பை வெல்வது ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர், வரும் ஜூன் 10ல் இருந்து 17 வரை லண்டனில் நடக்கவுள்ளது. இதற்கான இந்திய அணியை தேர்வுக்குழு அறிவித்தது. இதில் 'ரெகுலர்' கேப்டன் சர்தார் சிங்கிற்கு ஓய்வு தரப்பட்டது. இவருக்குப் பதில் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் அணியை வழி நடத்த உள்ளார். துணை கேப்டனாக சுனில் அறிவிக்கப்பட்டுள்ளார். ரகுநாத், ஆகாஷ்தீப் சிங் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர். ரியோ ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
இத்தாலி ரோம் நகரில், 'இத்தாலி ஓபன் டென்னிஸ்' தொடர் நடந்தது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி, ரஷ்யாவின் எகடரினா மகரோவா, எலினா வெஸ்னினா ஜோடியை எதிர்கொண்டது. இதில் துடிப்பாகச் செயல்பட்ட சானியா ஜோடி கோப்பையைக் கைப்பற்றியது. சர்வதேச அரங்கில் சானியா - ஹிங்கிஸ் ஜோடி கைப்பற்றிய 14ஆவது பட்டம் ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
சீனாவின் தைபே நகரில், ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதன் பெண்களுக்கான பைனலில் இந்தியா, மலேசியா அணிகள் மோதின. இதில் இந்தியாவின் சஷிகா இங்கலே, ஜோஷ்னா சின்னப்பா தங்களது போட்டிகளில் வீழ்ந்தனர். முடிவில், இந்திய அணி 0 - 2 என தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியது. ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
இத்தாலியில் உள்ள ரோம் நகரில், ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் பைனலில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே, செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி, கோப்பையைக் கைப்பற்றினார். பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் சக வீராங்கனை மடிசன் கீஸை வீழ்த்திப் பட்டம் ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
பெங்களூருவில் நடந்த ஐ.பி.எல். லீக் போட்டியில் பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதின. மழையால் பாதிக்கப்பட்ட போட்டியில், முதலில் விளையாடிய பெங்களூரு அணிக்கு அதிரடி காட்டிய கேப்டன் கோஹ்லி, இந்த சீசனில் 4ஆவது சதம் அடித்தார். பெங்களூரு அணி 15 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய பஞ்சாப் அணி 14 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 120 ரன்கள் மட்டும் எடுத்து, 'டக்வொர்த் ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
அடுத்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடக்கவுள்ள இடம்கோல்டுகோஸ்ட் (ஆஸ்திரேலியா, 2018)'டுவென்டி - 20' அரங்கில் அதிக சதம் அடித்த வீரர்கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்) 17 சதம்பிரேசிலில் நடந்த 'ஃபிஃபா' உலக கோப்பை கால்பந்து தொடரில் அதிக கோல் அடித்தவர்கொலம்பியாவின் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் (2014, 6 ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X