Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநரான, ரகுராம் ராஜனின் பதவிக் காலம், வரும் செப்டம்பர் 4ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. இதை அடுத்து, புதிய ஆளுநராக உர்ஜித் படேல் (52) நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது துணை கவர்னராக இருந்து வரும் படேல், அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதார முனைவர் பட்டம் பெற்றவர். இவர், சர்வதேச செலாவணி நிதியம் (ஐ.எம்.எஃப்), பாஸ்டன் கன்சல்டிங் குரூப், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
உலகின் மிகப்பெரிய முத்து, பிலிப்பைன்ஸ் நாட்டு மீனவர் ஒருவரின் வலையில், 10 வருடங்களுக்கு முன்பு சிக்கியது பற்றிய தகவல், தற்போது வெளியாகி உள்ளது. இந்த முத்தின் எடை 34 கிலோ; நீளம் 2.2 அடி; அகலம் ஒரு அடி. அந்த மீனவர், தனது படகில் தட்டுப்பட்ட இந்த முத்தினை ஓர் அதிர்ஷ்டக் கல்லாக நினைத்து, இவ்வளவு காலமாகத் தனது வீட்டில் வைத்திருந்தார். வேறொரு பகுதிக்குக் குடிபெயர வேண்டி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
சாலை விபத்துகளில் சென்னையும், சாலை விபத்துகளில் உயிர் இழந்தோர் எண்ணிக்கையில் கோவையும் முதலிடம் பெற்றுள்ளன. தமிழகத்தில், கடந்த 2014ல் நடைபெற்ற 67, 250 சாலை விபத்துகளில், 15,190 பேர் உயிர் இழந்தனர்; 2015ல் நடைபெற்ற 69,059 சாலை விபத்துகளில், 15,642 பேர் உயிர் இழந்தார்கள். இந்த ஆண்டில், வாகனங்களின் எண்ணிக்கை, 15.63 லட்சம் அதிகரித்து உள்ளது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வேகத்தில், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
ஆந்திர அரசு , அடுத்த மாதம் முதல் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. இதற்காக, செப்டம்பர் 25 அன்று, விசாகப்பட்டினம் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்துக்கும், ஸ்கை சாப்பர் லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, விசாகப்பட்டினத்தில் குறிப்பிட்ட மூன்று இடங்களில், வரும் அக்டோபர் மாதம் முதல் ஹெலிகாப்டர் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
'நாட்டில், 100 சதவீதம் படிப்பறிவு பெற்ற முதல் மாநிலம்' என்ற பெருமை பெற்ற கேரளா, விரைவில் மற்றொரு பெருமையையும் பெற இருக்கிறது. வரும் நவம்பர் மாதத்தில், 'திறந்தவெளி கழிப்பிடமில்லா முதல் மாநிலம்' என்ற சிறப்பைப் பெற உள்ளது. இதற்காக கேரள அரசு, 'சுசித்வா மிஷன்' எனப்படும் தூய்மை இயக்கத்தின் மூலமாக, மாநிலத்தின் 941 கிராம பஞ்சாயத்துகளில், 1.90 லட்சம் கழிப்பிடங்களைக் கட்ட ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
புதுடெல்லி: நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் வை-ஃபை இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், இந்திய சிவில் விமான போக்குவரத்து துறையின் செயலர் திரு. சௌபே, இந்திய வான் எல்லைக்குள் பறக்கும் விமானங்களில் விரைவில் வை-ஃபை வசதி அனுமதிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார். இந்த அனுமதி, அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
அன்னை தெரசாவின் 19ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள, ஐ.நா. தலைமையகத்தில், சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி, அன்னை தெரசாவின் நினைவு நாள். அன்னை தெரசாவின் வாழ்க்கைப் பயணத்தையும், ஆதரவற்றவர்களுக்கு அவர் செய்த மகத்தான சேவைகளையும் விவரித்து, செப்டம்பர் 6 முதல் 9ஆம் தேதிவரை இந்தக் கண்காட்சி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
According to an Australian based research, the first signs of global warming had appeared as early as 1830, during the first Industrial Revolution itself. Our knowledge about earth's temperature history is very limited, as it is mostly based on temperature recording instruments, that came into use in the late 1880s. This situation prompts scientists, to explore natural archival sources to gauge temperatures that existed in the past. Researchers of this new study, have managed to collect 500 years of organic data found in tree rings, coral reefs and ice sheets, that had survived through ages. The researchers claim that, the greenhouse gas emissions from industries, left their first traces in the temperatures of tropical oceans and the Arctic around 1830. This challenges the widespread views, that man-made climate change began only in the 20th ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
மாணவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அறிவியல் விஞ்ஞானி சூரியகாந்திச் செடி ஏன் சூரியன் இருக்கும் திசையை நோக்கியே இருக்கிறது?M. திவ்யேஷ் மனோலால், 9ஆம் வகுப்பு, நோபல் மெட்ரிக் பள்ளி, விருதுநகர்.சூரியகாந்திச் செடி மட்டுமல்ல, பல செடிகள் சூரியன் உள்ள திசையை நோக்கி வளரும். ஒளிச்சேர்க்கை காரணமாகவே, தாவரங்கள் தமது உணவை தயாரித்துக் கொள்கின்றன, என ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
நுரையீரல்கள் இல்லாவிட்டாலும் தாவரங்கள் சுவாசிக்கின்றன. வயிறு இல்லை என்றாலும் உணவைச் செரிக்கின்றன. தசைகள் இல்லாவிட்டாலும் அவை பல செயல்களை மேற்கொள்கின்றன. தாவரங்களுக்கு நரம்பு மண்டலம் இல்லாவிட்டாலும் அவை உணர்ச்சித் தூண்டல்களுக்கு உள்ளாகின்றன. சில தாவரங்களைத் தொட்டாலே அவற்றின் வளர்ச்சி பாதிப்படைகிறது. அளவுக்கு அதிகமான கரியமில வாயுவை உட்கொள்ளும்போது தாவரங்களும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
'பறந்து கொண்டிருந்த விமானம் மாயமானது. தேடிக்கொண்டு இருக்கிறார்கள். கடலில் விழுந்திருக்கலாம்...' இப்படிப்பட்ட செய்திகளை அடிக்கடி படிக்கிறோம். விமானம் பறந்து கொண்டிருக்கும்போது திடீரென ஏதாவது பெரிய ஆபத்து ஏற்பட்டால் விமானிகள், தரையிலிருக்கும் கட்டுப்பாட்டு அறைக்கு (Control Room) தகவல் அனுப்புவார்கள். 'தாங்கள் ஆபத்தில் இருக்கிறோம்' என்பதைச் சுருக்கமாக, உடனடியாகத் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
ஒரு காகிதத்தை வெறும் கைகளால் எத்தனை முறை மடிக்க முடியும்? பலர் இதை சோதித்துப் பார்த்து இருக்கலாம். A4 அளவு காகிதத்தை எடுத்து மடித்து, பின் மடித்து, பின் மடித்து இப்படியே செய்தால் ஐந்து முறைக்கு மேல் அதை மடிக்க முடியாத அளவு கனம் ஆகிவிடும். ஒவ்வொரு முறை மடிக்கும் போதும் அதன் தடிமன் கூடிக்கொண்டே போகும். 10 அடி நீளமுள்ள மெல்லிய பேப்பரை எந்தக் கருவியையும் பயன்படுத்தாமல் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
“மாலு நான் ஒரு பெரிய தாடியோட இருக்கற மாதிரி என்னை ஒரு படம் வரைஞ்சு கொடு” என்றான் பாலு. ஏன் அப்படி என்று கேட்டார் ஞாநி மாமா.“ஒரு நூற்றாண்டுக்கு முன்னால பார்த்தா, விஞ்ஞானிகள், அறிஞர்கள் எல்லாரும் நீள நீளமா தாடிதான் வெச்சிருக்காங்க. நம்ம ஊர்ல கூட தாகூர், பெரியார்லாம் தாடி வளர்த்திருக்காங்க. அதனால் நான் ஒரு அறிஞராகும்போது தாடி வளர்க்கப் போறேன். அப்ப எப்பிடி இருக்கும்னு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
ஜேம்ஸ் குக் (James Cook), சர் ஜோசப் பேங்க்ஸ் (Sir Joseph Banks) என்ற இயற்கை ஆராய்ச்சியாளர்கள் இருவர் ஆஸ்திரேலியாவிற்கு சென்றனர். அங்கு வாழ்ந்து வந்த பழங்குடியினரிடம் கங்காருவைக் காட்டி 'என்ன மிருகம்' என்று கேட்டதற்கு, அவர்கள் சொன்ன பதில் 'கங்காரு'. அந்தப் பழங்குடி மொழியில் கங்காரு என்றால் 'எனக்குத் தெரியாது' என்று பொருள். அதுவே அதன் பெயராக நிலைத்து விட்டது என்று ஒரு கதை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
சமைத்துண்ணும் இலைகள் கீரை வகையில் சேரும். ஆனால் முட்டைகோஸ் (Cabbage) இலைவகையைச் சேர்ந்தது என்றாலும் அதை காய் என்றே அழைக்கிறோம்.இதன் பூர்வீகம் வடக்கு சீனா என்றும், ஐரோப்பா என்றும் சொல்லப்படுகிறது. கி.மு. 4000ஆம் ஆண்டிலேயே வடக்கு சீனாவில் பயிரிட்டிருக்கிறார்கள்.மேற்கு ஐரோப்பாவில் முட்டை வடிவில் இல்லாமல் இலை இலையாக உள்ளதைத்தான் வளர்த்தார்கள். அப்படித்தான் விளைந்தது. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
உலக தேங்காய் தினம் செப்டம்பர் 2'நாய்பெற்ற தெங்கம்பழம்' என்பது பழமொழி. இந்தப் பழமொழியே தேங்காய் ஒரு பழம் என்பதை புரிய வைத்துவிடுகிறது.'நாயின் கையில் தேங்காய் அகப்பட்டால் உடைக்கவும் அறியாது உருட்டிக்கொண்டே திரியும்' என்பதே பழமொழியின் பொருள்.தேங்காய் ஆங்கிலத்தில் 'கோகநட்' (Coconut) என்று அழைக்கப்படுகிறது. முதலில் 'கோகோ' (Coco) என்றுதான் அழைக்கப்பட்டது. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு என்றெல்லாம் புத்தக வகைகள் இருப்பதைப் பாடத்தில் படித்திருப்பீர்கள். அவற்றில் பத்துப்பாட்டு என்று குறிப்பிடப்படுபவை எந்தெந்த நூல்கள்? அவற்றின் பெயர்கள்தான் பக்கத்தில் உள்ள வட்டங்களின் கட்டத்தில் உள்ளன. படத்தில் குறிப்பிடப்பட்ட பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு. ஒரே தொகுப்பாக, தற்போது ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
மைக்கேல் ஜாக்சன் பிறந்த தினம் ஆகஸ்ட் 29“மைக் பிடிச்சு ஆடிட்டா, மைக்கேல் ஜாக்சன் ஆக முடியுமா?” ஆர்வக்கோளாறில் ஆடுபவர்களைப் பார்த்து இப்படிக் கிண்டல் செய்வதுண்டு. பாடல் எழுதுவார். இசையமைப்பார். அதற்கு ஏற்றபடி நடனம் ஆடுவார். இடையிடையே நடிக்கவும் செய்வார். இப்படி, இசைக் கலவையாகிய 'பாப்' நடனத்தைப் படைத்து இதயங்களைக் கரைத்த கலைஞன் ஜாக்சன்!முன்நெற்றியில் விழும் நூடுல்ஸ் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
சாந்தி: மஞ்சு! ஒரு அர்ஜென்ட் வொர்க் இருக்குது. அப்ப, நான் வரட்டுமா? மஞ்சு: 'வரட்டுமா'ன்னு சொல்லிட்டு, கெளம்புற? ஓ... 'இப்போப் போகட்டுமா'ங்கிறதைத்தான் எதிர்ப்பதமாச் சொல்றியா?சா: எல்லாரும் சொல்றதைத்தானே சொன்னேன். ஆளை விடு.ம: நான் உன்னைப் பிடிச்சுக்கிட்டா இருக்கேன்? எப்பிடி விட முடியும்?சா: ஐயய்யோ சாமீ. எனக்கு மயக்கம் வரப் போகுதும: மயக்கம் வருதா, போகுதா?சா: இவ ஒருத்தி, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
வேறெந்த மொழிக்கும் இல்லாத பல சிறப்புகள் நம் தாய்மொழியாகிய தமிழ் மொழிக்கு உண்டு. அதில் ஒன்று - இரண்டு பொருள் தரும்படியான வார்த்தைகள். மற்ற மொழிகளைவிட தமிழில்தான் அதிகம் உள்ளன. ஒரு வார்த்தை இரு பொருள் தரும்படி அழகாகப் பேசுவதை 'சிலேடை' என்று அழைப்பார்கள். இந்த சிலேடைத் தமிழில் வல்லவர் திரு.கி.வா.ஜகந்நாதன். அவருடைய சிலேடைப் பேச்சுகளில் சில…ஆரம் பிய்த்துக் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
தவளை ஒன்று தாமரை இலையில்தித்தித் தோம் என ஆடுதுஅதன்ஆட்டம் பார்த்து அசந்து போன பட்டாம் பூச்சி பாடுதுபச்சைப் புல்லில்மஞ்சள் பூக்கள்மிச்சம் இன்றி சிரிக்குதுஅங்கேசெக்கர் வானம்சொக்கி மயங்கிபக்கம் வரவே பார்க்குதுகண்ணைத் திறந்தால்அன்னை இயற்கைஉன்னை ஈர்த்து மினுக்குதுஅந்தஇயற்கை யால்தான்இன்று வரைக்கும்நமது குலமே சிறக்குது.- ரமேச்சு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
ஆங்கிலேயர் ஆதிக்கம் செய்த இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் தொடங்கிய காலத்திலேயே அதற்காகக் குரல் கொடுத்தவர்களில் நானும் ஒருவன். பம்பாயில் (மும்பை) ஒரு பார்சியக் குடும்பத்தில் பிறந்தேன். எனக்கு 4 வயதாக இருக்கும்போதே அப்பா இறந்துவிட்டார். அம்மாவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்றாலும் என்னை நன்கு படிக்கவைத்தார். படித்து முடித்தபின் மும்பை எல்பின்ஸ்டன் (Elphinstone) ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
வீட்டில் இருக்கும் புத்தகங்களில், முழுமையாகப் படித்துமுடித்துவிட்டு, 'இனி யாருக்கும் பயன்படாது, எடைக்குத்தான் போட வேண்டும்' என்று நீங்கள் நினைக்கும் புத்தகங்கள் இருந்தால், அவற்றைக் கொண்டு குத்தாத முள்ளம்பன்றி உருவம் செய்யலாம். தேவையான பொருட்கள்: 1. கருப்பு வெள்ளை அச்சுகள் மட்டும் இருக்கும் பழைய புத்தகம் ஒன்று. 2. கருப்பு நிற, சிவப்பு நிற சார்ட் அட்டைகள்.3. பசை,4. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
வரலாற்றுப் புத்தகத்தில், உலகப்போர்களைப் பற்றிய பாடம் மிகவும் முக்கியமானது. முதலாம் உலகப்போர் வெடிக்கக் காரணம் என்ன என்று கேட்டால், ஆஸ்திரிய இளவரசரை செர்பியர் ஒருவர் சுட்டுக்கொன்ற சம்பவம் என்று சொல்வோம். இந்தக் கொலைக்குப் பதிலடி கொடுக்க ஆஸ்திரியா, ஜெர்மனியின் ஆதரவோடு செர்பியா மீது போர் தொடுத்தது; செர்பியாவைக் காப்பாற்ற ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
உலகில் இருக்கும் பாலைவனங்களிலேயே, மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக இருப்பது, இந்தியாவின் தார் பாலைவனத்தில்தான். இங்கு சராசரியாக, ஒரு சதுர கி.மீட்டரில் 83 நபர்கள் என்ற எண்ணிக்கையில் மக்கள் வாழ்கிறார்கள். காலங்காலமாக மழை நீரை முறையாகச் சேமித்துப் பயன்படுத்துவதால், இந்தப் பகுதி மக்களால் வறட்சியை சமாளித்து பாலைவனச் சூழலில் வாழ முடிகிறது. படத்தில் இருக்கும் கூண்டு வடிவிலான ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
கல்லணை! சுமார் 1,800 ஆண்டுகளுக்கு முன்னர், சோழ மன்னர் கரிகாலனால் கட்டப்பட்ட இந்த அணை, இன்றைக்கும் பயன்பாட்டில் இருக்கிறது. இதன் நீளம் 329 மீட்டர், அகலம் 20 மீட்டர்.எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும் ஓர் ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது, இந்தக் காலத்தில்கூட கடினமான காரியம்தான். அதிகப் பொருட்செலவு செய்து, தேவைப்பட்டால் ஆற்றின் போக்கைத் திருப்பிவிட்டு, இன்றைக்கு அணைகள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
சர்வதேச அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினம் ஆகஸ்ட் 29அணுவின் மூலம் மின்சாரம் கிடைக்கிறது. அதுபோல, அணு ஆயுதங்களைத் தவறான வழிகளில் பயன்படுத்துவதால் பல பாதிப்புகளின் விளைவுகளும் நமக்கு 'அன்பளிப்பாகக்' கிடைக்கின்றன. அணு ஆயுதம் முதன்முதலாக, 1945ல் வீசப்பட்ட பிறகே அணு ஆயுதத்தின் கொடூரம் உலகுக்குத் தெரிந்தது. இரண்டாம் உலகப்போரின் இறுதிக் கட்டத்தில் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
பாரம்பரிய விளையாட்டுப் பொருட்களில் ஒன்று நுங்கு வண்டி. ஏப்ரல், மே மாதங்களில் பனங்காய் நிறைய விளையும். வெயிலின் கொடுமையை விரட்ட, இயற்கை தந்த உணவான பனங்காயை சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பர். பனங்காய் உடலுக்கு குளுமை தரக்கூடியது.கிராமத்துச் சிறுவர்கள் நுங்கை, தண்ணீர் சொட்ட சுவைத்து உண்ட பிறகு, அந்தக் காயில் வண்டி செய்து தரச்சொல்லி அடம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
வீரமிக்க ராணி ஒருவர் இருந்தார். அந்த ராணிக்கு கத்திச்சண்டை, குதிரை ஏற்றம், வாள் வீச்சு, ஈட்டி எறிதல் என எல்லா போர்க்கலைகளும் தெரியும். நாட்டைத் திறம்பட ஆட்சி செய்த அந்த ராணி மீது, மக்கள் அளவற்ற பாசமும், அன்பும் வைத்திருந்தார்கள்.பக்கத்து நாட்டில் ஒரு ராஜா இருந்தார். அவருக்கு மனதில் ஓர் எண்ணம் உதித்தது. ஆட்சி செய்பவர் ஒரு பெண்தானே, எளிதாக வென்றுவிடலாம் என்று படையுடன் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
தயான் சந்த் சிங் பிறந்த தினம் ஆகஸ்ட் 29பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைந்துள்ள இந்தியா, விளையாட்டு துறையில் இன்னும் பின் தங்கியே உள்ளது. தற்போது நடந்து முடிந்த ஒலிம்பிக் விளையாட்டு முடிவுகளே இதற்குச் சான்று. விளையாட்டு மீதான ஆர்வத்தை வருங்கால சந்ததியினரிடம் உருவாக்க வேண்டும். அந்த நோக்கத்தில்தான் இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரர் ஒருவரின் பிறந்த நாளை தேசிய ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
பிரேஸிலில் 31ஆவது ஒலிம்பிக் போட்டிகள் நடந்தன. இதன் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் 'மின்னல் வேக மனிதன்' ஜமைக்காவின் போல்ட் தங்கம் வென்றார். இந்த உற்சாகத்தில் 4x100 மீட்டர் தொடர் ஓட்ட ஃபைனலில் போல்ட் குழு பங்கேற்றது. இதில் துடிப்பாகச் செயல்பட்ட ஜமைக்கா அணி தங்கம் வென்றது. இதன் மூலம், தொடர்ச்சியாக மூன்று ஒலிம்பிக்கில் (2008, 2012, 2016) மூன்று ஓட்டப்பிரிவிலும் தங்கம் வென்ற முதல் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
ரியோ ஒலிம்பிக் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் பிரிட்டன் வீரர் மோ ஃபரா தங்கம் வென்றிருந்தார். இந்த உற்சாகத்துடன் 5 மீட்டர் ஓட்டத்திலும் பங்கேற்று தங்கம் வென்றார். லண்டன் ஒலிம்பிக்கிலும் இந்த இரண்டு பிரிவிலும் தங்கம் வென்றிருந்தார். இதன் மூலம், கடந்த 40 ஆண்டுகளில் அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் இந்த இரண்டு பிரிவிலும் தங்கம் வென்ற 2ஆவது வீரர் என்ற சாதனை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
ரஷ்ய 'போல் வால்ட்' வீராங்கனை இசின்பெய்வா. மூன்று முறை (2005, 2007, 2013) உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவர். ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய ரஷ்ய தடகள நட்சத்திரங்களுக்கு ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டதால், இவர் ஏமாற்றம் அடைந்தார். இந்நிலையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தடகள சங்கத்தின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பின், ஓய்வு பெறுவதாக ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
வெஸ்ட் இண்டீஸ் சென்ற இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் மூன்று போட்டி முடிவில் இந்திய அணி 2 - 0 என ஏற்கெனவே தொடரைக் கைப்பற்றி இருந்தது. போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடந்த நான்காவது போட்டி மழையால் பாதிக்கப்பட போட்டி 'டிரா' ஆனது. இந்திய அணி கோப்பை வென்றாலும், டெஸ்டில் 'நம்பர் - 1' இடத்தை பாகிஸ்தானிடம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
பிரேஸிலில் நடந்த ஒலிம்பிக் கால்பந்து ஃபைனலில் பிரேஸில், ஜெர்மனி அணிகள் மோதின. போட்டி 1 - 1 என சமநிலையை எட்ட, 'பெனால்டி ஷூட் அவுட்' முறைக்குச் சென்றது. இதில் கேப்டன் நெய்மர் உள்ளிட்டோர் அசத்த பிரேஸில் அணி 5 - 4 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று தங்கம் வென்றது. இதன் மூலம், ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக தங்கம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
ஐ.பி.எல். போல தமிழக பிரிமியர் லீக் 'டுவென்டி - 20' (டி.என்.பி.எல்.) தொடரின் தொடக்கவிழா சென்னை சேப்பாக்கத்தில் நடந்தது. இதில், சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், காரைக்குடி காளை, லைகா கோவை, மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ், ரூபி காஞ்சி, டுட்டி பேட்ரியாட்ஸ் (தூத்துக்குடி), திருவள்ளூர் வீரன்ஸ் என, 8 அணிகள் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் தூத்துக்குடி அணி, சேப்பாக்கத்தை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
இந்த ஆண்டு உலகக் கோப்பை கபடி எங்கு நடக்க உள்ளது?ஆமதாபாத் (குஜராத், அக்டோபர் 7 - 22)ரியோ ஒலிம்பிக் ஹாக்கி ஆண்கள் பிரிவில் தங்கம் வென்ற அணி?அர்ஜென்டினா (எதிர் - பெல்ஜியம்)ஒரு நாள் போட்டியில் அதிவேக அரை சதம் அடித்தவர்?தென் ஆப்பிரிக்காவின் டிவிலியர்ஸ் (எதிர் - வெஸ்ட் இண்டீஸ், 16 பந்து, 2015) ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X