Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2017 IST
சித்த மருத்துவத்தில் போலிகள்... உஷார்!கடந்த வாரம், எங்கள் ஊரில் உள்ள, 'அலோபதி' மருத்துவரை சந்தித்தேன். அப்போது அவர், சித்த மருத்துவம் என்ற பெயரில், போலி மருத்துவர்கள் உலவி வருவதாக கூறி, 'நான் இல்லாத போது, என், 'அலோபதி' கிளினீக்கிற்கு வந்த ஒரு நபர் செவிலியரிடம், குறிப்பிட்ட வலி நிவாரண மாத்திரைகள் நிறைய தேவைப்படுவதாக கூறியுள்ளார். சந்தேகமடைந்த செவிலியர், இரு நாட்கள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2017 IST
பேசும் திறன் அற்றோர், முகபாவம் மற்றும் அங்க அசைவுகளால், தங்கள் எண்ணங்களை வெளியிட முடியும்.ஒரு கலைஞனோ, தன் எண்ணங்களையும், உணர்வுகளையும், அவனது தொழில் மூலமாக, பேச்சு, எழுத்து மற்றும் பாடல் என வெளிப்படுத்தலாம்.இப்படி, தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த, ஒவ்வொரு மனிதனுக்குமே ஏதாவது ஒரு வழி, இருக்கவே செய்கிறது.என்னைப் பொறுத்தவரை, என் எண்ணம் மற்றும் உணர்வுகளை, என் தொழில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2017 IST
கல்லூரியில் பயிலும், 'டீன்ஏஜை' கடந்த இளம் பெண்ணின் மனநிலை; ஆண் பெண் நட்பு; அவர்களுக்கிடையே முகிழும் காதல்; தனக்கு வரவிருக்கும் கணவன் பற்றிய எதிர்பார்ப்பு; தன் சராசரி சக தோழியரைப் பற்றிய மதிப்பீடு போன்ற எண்ணங்கள், இளம் பெண்களிடையே எப்படி இருக்கும் என்பதற்கு, இதோ ஒரு வாசகியின் கடிதம்:நான் ஒருவரிடம் பழக வேண்டும் என்று நினைத்தால், ரொம்ப யோசித்து தான் பழகுவேன். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2017 IST
என்.செந்தில்குமார், நெய்வேலி: பட்டதாரியான என் நண்பர், 'மாதச் சம்பள வேலை வேண்டாம்; விவசாயத்தில் ஈடுபடப் போகிறேன்...' என்கிறார். அவர் முடிவு சரிதானா?சரிதான்; வரவேற்கிறேன். எல்லா விவசாயிகளையும் போல, செக்கு மாடு மாதிரி செயல்படாமல், இயற்கை உரத்திற்கு மாறி பயிர் செய்தால், அதிக விளைச்சலும், விலையும் கிடைக் கும். இவ்வகை தானியங்களையும், காய், கனிகளையும் எவ்வளவு விலை கொடுத்தும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2017 IST
பொன்னாத்தாளின் பிணத்திற்கு மாலை அணிவித்த மாரப்பன், குலுங்கி குலுங்கி அழுதார். வெளியூரிலிருந்து வந்திருந்த பொன்னாத்தா உறவுக்காரர்கள், ஆச்சரியத்துடன், 'யார் இவர்...' என்று விசாரிக்க, 'பொன்னாத்தாளோட பக்கத்து காட்டுக்காரர்; தாயாப் பிள்ளையா பழகினவங்க. அதான், அவரும், அவர் பொண்சாதியும் அழறாங்க...' என்றனர், அருகில் அமர்ந்திருந்தோர்.மாரப்பனின் மனைவி பெண்கள் கூட்டத்தில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2017 IST
முதல்வரிடம் கோரிக்கை வைத்த தமிழ் சினிமாக் குழு!முதல்வர் பன்னீர் செல்வத்தை சந்தித்த, தமிழ் சினிமாக் குழுவினர், 'நூறு ஆண்டுகளை கடந்து விட்ட, இந்திய சினிமாவின் தலைநகரமான சென்னைக்கு அடையாளம் வேண்டும். அதனால், சினிமா ஜாம்பவான்களின் பெயரில், ஆங்காங்கே, வளைவுகள் வைக்கப் படுவதுடன், தமிழ் சினிமாவுக்கென்று, அருங்காட்சியகம் வைக்க வேண்டும்...' என்று கோரிக்கை வைத்துள்ளனர்.— ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2017 IST
'நான், நாரதராக இருக்கிறேன்...' என்று, கண்ணனாலேயே பாராட்டப்பட்ட நாரத பகவானே வரம் தந்தும், பேராசையின் காரணமாக, விசித்திரமான வரம் பெற்ற மன்னனின் கதை இது.ஒரு சமயம், மன்னர் சிருஞ்சயனின் அரண்மனைக்கு வந்தார், நாரத முனி. அவரை மிகுந்த பணிவோடும், பக்தியோடும் வரவேற்று, உபசரித்தார், மன்னர். ஆனாலும், அவர் மனதில் ஏதோ குறை இருப்பதை முகம் வெளிப்படுத்த, 'மன்னா... உன் மனதில் உள்ள வருத்தம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2017 IST
அன்புள்ள அம்மாவுக்கு —மருத்துவரான என் தந்தைக்கு, இரு மனைவியர். காதலித்து மணந்த முதல் மனைவிக்கு, இரு மகன்கள் உள்ளனர். குடும்ப பிரச்னை காரணமாக, அவர் தற்கொலை செய்து கொள்ள, அதன்பின் என் அம்மாவை, இரண்டாம் திருமணம் செய்து கொண்டார், என் அப்பா.என் உடன் பிறந்தோர், ஒரு அண்ணன் மட்டுமே! தற்போது, அப்பாவின் வயது, 63; அம்மாவின் வயது, 51. அண்ணனுக்கு, 26; எனக்கு, 21 வயது. மூத்த தாரத்திற்கு பிறந்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2017 IST
ஒரு சில மனிதர்களுக்கு பிறக்கும் போதே, தொண்டையில் அலறும் ஒலி பெருக்கியும் இணைந்தே வந்து விடும் போல... எல்லாவற்றிற்கும், எட்டுக் கட்டையில் கத்துவர்.இவர்கள், சாதாரணமாக பேசுவது கூட, யாரோ சண்டையிடுவதைப் போல் அடுத்தவர்களுக்கு தோன்றும். நான் விரும்புவதெல்லாம், சண்டை போடும் போது கூட, குரலை உயர்த்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான். இதில், ஒரு உண்மை என்னவென்றால், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2017 IST
ஜன., 27 - தை அமாவாசைதை அமாவாசையன்று, தீர்த்தக்கரைகளில் புனித நீராடி, முன்னோர்களை வழிபடுவது புண்ணியம். குறிப்பாக, அன்று கடலில் நீராடுவது மிகவும் நல்லது. ராமேஸ்வரம், கன்னியாகுமரி, வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை உள்ளிட்ட கடல் தீர்த்தங்கள் மிகவும் புனிதமானவை. கன்னியாகுமரி கோவிலில் உள்ள தீர்த்தத்தை, பாபநாச தீர்த்தம் என்பர். இங்கே, மூன்று கடல்களும் சங்கமிப்பதால், அனைத்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2017 IST
கடத்தல்!அடிக்கடி நடைபெறுகிறதுவிமான நிலையங்களிலும்பல வழிகளிலும்தங்கக் கடத்தல்!கட்டுப்பாடுகள் அதிகரிக்கும்அளவிற்குகடத்தல்களும்அதிகரிக்கின்றன!தங்கம் மட்டுமாகடத்தப்படுகிறது...நட்சத்திர ஆமைகள்தங்க மீன்கள்போதை பொருட்கள்ஆற்று மணல்கள்...கிரானைட் கற்கள்செம்மரங்கள்சந்தன மரங்கள்சிலைகள்...பொருட்கள் மட்டுமேநமக்கு தெரிகிறதுவிமானம் ஏறும் பொறியாளர்மருத்துவர்கள், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2017 IST
'இந்திய சுதந்திரப் போர்' நூலிலிருந்து:ஜூன், 17, 1910ல், கலெக்டர் ஆஷ் துரையை, வாஞ்சிநாதன், சுட்டுக் கொன்றதைப் பற்றி, 'அபசகுனத்தில் உதித்த இயக்கம்' என்ற தலைப்பில், இச்சம்பவத்தை கண்டித்து பாரதியார் எழுதியது:'இந்தியாவில், முதன் முதலில் ஒரு இந்திய புரட்சிக்காரனால் எறியப்பட்ட வெடிகுண்டு, பிசகினால், திருமதி கென்னடி என்ற வெள்ளைக்கார பெண்ணின் மீது வீசப்பட்ட போது, ஆங்கிலோ, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2017 IST
'சீக்கிரம் தரிசனத்தை முடிச்சுட்டு கிளம்பிடணும்...' என நினைத்து, கோவிலுக்குள் நுழைந்த பாரதி, வரிசையில் நின்றிருந்த மக்கள் கூட்டத்தை பார்த்ததும், மலைத்துப் போனான்.''தம்பி, ஏன் தயங்குறீங்க... இன்னிக்கு நிறைஞ்ச பவுர்ணமி; இந்த நாள்ல, அம்மனை தரிசிச்சா, நினைச்சதெல்லாம் நடக்கும். இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை இல்லயா... அதான், இவ்வளவு கூட்டம். வாப்பா... வந்து, வரிசையில் நில்லு; ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2017 IST
1.இந்தியாவில், குறைந்த வயதில், ஜனாதிபதி பதவியை பெற்றவர் யார்?நீலம் சஞ்சீவ ரெட்டி; ஜூலை, 25, 1977ல் பதவி ஏற்ற போது, அவரது வயது, 64.2.இந்தியாவின் முதல் நீர் மூழ்கி கப்பல் எது?ஐ.என்.எஸ்., கல்வாரி3.இந்திய வரலாற்றிலேயே, குற்றவாளி கூண்டில் ஏறிய பிரதமர் யார்?பி.வி.நரசிம்மராவ்; 1996ம் ஆண்டு4.இந்தியாவில், தேசிய மொழியாக இந்தி எப்போது அறிவிக்கப்பட்டது?செப்., 15, 1949.5.இந்தியாவின், தேசிய விலங்காக, புலி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2017 IST
முன்னாள் அமெரிக்க அதிபரான, ரொனால்டு ரீகன், அப்பதவிக்கு வந்த போது வயது, 69. அப்போதே அவருக்கு அல்சீமர் எனும் மறதி நோயின் அறிகுறி ஆரம்பமாகியிருந்ததால், மேடையில் பேசும் போதெல்லாம், தடுமாற்றத்துடன் தான் பேசினார்.அவருடைய மகன் ரோண், தான் எழுதிய புத்தகத்தில் இதுபற்றி, குறிப்பிட்டுள்ளார். அல்சீமர் நோயால், உலக தலைவர்கள் பலர், பாதிக்கப்பட்டுள்ளனர்.- ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2017 IST
திருநெல்வேலி என்றால் அல்வா, தூத்துக்குடி என்றால் மக்ரோன்ஸ் என்று ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஸ்பெஷல் இனிப்போ, காரமோ அல்லது ஏதோ ஒரு சிறந்த உணவு வகை இருக்கும். அவ்வகையில், வெவ்வேறு ஊர்களின் சிறப்பு உணவு வகைகள் இப்பகுதியில் இடம் பெறும். பிரியாணி மற்றும் பூட்டுக்கு மட்டுமல்ல, ஜிலேபிக்கும் பெயர் பெற்ற ஊர், திண்டுக்கல்.இவ்வூர் ஜிலேபியை சுவைத் தவர்களின் நாக்கை, திண்டுக்கல் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2017 IST
முஸ்லிம் பெண்கள் வெளியே நடமாட தயங்கிய காலத்திலேயே, புனே பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து, நடிப்பில் பட்டம் பெற்றவர், கேரளாவைச் சேர்ந்த ஜெமீலா மாலிக். சில மலையாளப்படங்கள் உட்பட, பல்வேறு மொழிகளில், 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், தற்போது, வாடகை வீட்டில், நோயாளி மகனுடன் ஏழ்மையில் வாடுகிறார். இதுபற்றி, ஜெமீலா கூறும் போது, 'புனே இன்ஸ்டிடியூட்டில் படிக்கும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2017 IST
நம் நாட்டில், பிச்சைக்காரர்கள், சிறிய பலகை வண்டியில் உட்கார்ந்து, இரு கைகளால் தள்ளி, பயணித்து பிச்சை கேட்கின்றனர். ஆனால், ஜெர்மனியில் உள்ள பிச்சைக்காரர்களோ, பி.எம்.டபிள்யு, பென்ஸ் மற்றும் ஆடிக் கார்களில் வந்து பிச்சை எடுக்கின்றனர்.ஜெர்மனி பிச்சைக்காரர் ஒருவரின் தின வருமானம் எவ்வளவு தெரியுமா... நம் பணத்தில், ஏழாயிரம் ரூபாய்!— ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2017 IST
'புகை, உயிருக்கு பகை' என்று எச்சரிக்கை வாசகங்கள் நம்நாட்டில் வலம் வருகையில், வீட்டிற்கு வரும் விருந்தாளிகளைக் கூட, 'தம் அடிச்சுட்டு போங்க...' என்கின்றனர் எகிப்து நாட்டு மக்கள். 'ஹூக்கா' புகைப்பதை, மிகவும் விரும்புவர், எகிப்தியர். அதனால், தெருக்களில், ஆங்காங்கே, 'ஹூக்கா கபே'க்களும் உள்ளன. 'தம்' அடிக்க விரும்புவோர், 'கபே'க்களுக்கு சென்று புகைக்கலாம். பரம்பரை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X