Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2015 IST
கணவன்மார்களே...சமீபத்தில், என் தோழி வீட்டிற்கு சென்றிருந்த போது, தோழியிடம், அவள் கணவர், 'இந்த வாரம் வியாபாரத்துக்காக இந்த முகவரியில் உள்ள நண்பனிடம், 10,000 ரூபாய் கடன் வாங்கியிருக்கேன். தவிர, நம் கம்பெனித் தொழிலாளர்களோட, 'போனஸ்' பிரச்னையை சுமுகமா தீர்த்து வைச்சுருக்கேன்...' என்று, தன் பணப் போக்குவரத்து மற்றும் வியாபாரத்தில் ஏற்படும் பிரச்னைகள், அதற்கான தீர்வுகளை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2015 IST
நாடகக் குழு ஒன்றை நடத்தி, நலிந்து போயிருந்த தாம்பரம் லலிதாவுக்கு உதவ, திருக்கோவிலூரில், ரத்த கண்ணீர் நாடகம் போட்டுத்தர சம்மதித்திருந்தார் எம்.ஆர்.ராதா. நாடகத்தில் மோகனாக அவர் நடித்து கொண்டிருந்த ஒரு காட்சியில்... மின்னல் தாக்கி, பார்வை பறி போவது போல் அமைந்திருக்கும்.'அய்யோ என் கண்கள்... என் கண்கள்...' எனக் கூறியவாறே கீழே விழுந்து புரளுகிறான் மோகன். அவன் அருகிலேயே மரம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2015 IST
'என்ன மணி... வாசகியர் எவரும் இப்போ கடிதம் எழுதுறது இல்லையா? அவர்களுக்கு பிரச்னைகள் எதுவும் எழவில்லையா? உன், 'அட்வைஸ்' இப்போ அவங்களுக்கு தேவைப்படுறதில்லையா?' என, ஆண் வாசகர்கள் பலரும் கடிதம் எழுதி உள்ளனர்.இதோ இந்த வாரம் ஒரு கடிதம்:சிறந்த மனோதத்துவ நிபுணரை விட, ஒரு பத்திரிகையாளர், மிகச் சிறந்த அனுபவசாலி என்பதாலும், எங்களை போன்ற பெண்கள் விஷயத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2015 IST
கே.அமுதா, பசுமலை: யாரை திருத்த முடியாது என நினைக்கிறீர்கள்?மூடர்களை திருத்தவே முடியாது. அவர்களிடம் வண்டி வண்டியாய் புத்திமதி கூறினாலும், எடுபடாது; அவர்களது மூளையிலும் ஏறாது. நாயின் வாலை என்றாவது நிமிர்த்த முடியுமோ? இப்படிப்பட்டவர்களின் சகவாசமில்லாமல் ஒதுங்கி இருப்பதே புத்திசாலித்தனம்! து.ஜீவானந்தம், பழைய பல்லாவரம்: எவ்வளவு தான் சம்பாதித்தாலும் பற்றாக்குறை தானே ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2015 IST
பிப்., 23-செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்முருகப்பெருமான், சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர். ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை தந்தைக்கே குருவாக இருந்து உபதேசித்தவர். அம்மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை, சிறையில் அடைத்தவர். மாமனான மகாவிஷ்ணுவின் பாசத்திற்கு கட்டுப்பட்டவர். இவ்வாறு மும்மூர்த்திகளோடும் தொடர்புடையவர் முருகப்பெருமான்.இதை வெளிப்படுத்தவே, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2015 IST
டவுன் பஸ்சில் செல்லும் போது,'பொட்டல்பட்டி கிராமத்தில் இருக்கும் காலி நிலத்தில ஏதோ யுனிவர்சிட்டி வரப் போகுது...' என்று அரசல் புரசலாக அய்யாசாமியின் காதில் விழுந்தது.கொஞ்ச நாட்களுக்கு முன், அந்த வழியாக பஸ்சில், குடும்பத்துடன் கோவிலுக்கு போகும் போது, நீலநிற சீருடை, குல்லா அணிந்த சிலர், கேமரா ஸ்டாண்டு மாதிரி மூன்று கால்களை உடைய கருவிகளை பரப்பி வைத்து, அந்த நிலத்தை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2015 IST
உங்கள் தூக்கம் கட்டுப்பாட்டில் உள்ளதா என்று கேட்டால், இல்லை என்பதே, பெரும்பாலானவர்களின் பதிலாக இருக்கும்.ஒருவரது தூக்க நேரம் என்பது, உடலுக்கும், மனதிற்கும் இடையே நடக்கும், கபடி கபடி போராட்டத்தின் விளைவே! இப்போராட்டத்தில், உடல் வெற்றி பெறும் போது நீண்ட தூக்கமும், மனம் வெல்லும் போது தூக்கக் குறைவும் ஏற்படுகிறது.மனதிடம், 'ஒரே களைப்பா இருக்கு தூங்குகிறேன்... ப்ளீஸ்...' ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2015 IST
அன்புள்ள தங்கைக்கு,நான் ஓய்வு பெற்ற இன்ஜினியர், 70; என் மனைவியும் ஓய்வு பெற்ற பேராசிரியை, 69. எங்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனியாக வசிக்கின்றனர். மகனுக்கு பெங்களூரில் வேலை; நான்கு மாதங்களுக்கு ஒரு முறை, குடும்பத்தோடு வந்து மூன்று, நான்கு நாட்கள் தங்கி விட்டு போவான். மகள் உள்ளூரில் வசித்தாலும், எப்போதாவது ஒருமுறை தான் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2015 IST
மாசி மகம் அன்று, கடலாடும் வைபவம் மிக விசேஷம். மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக் கடலாட்டு கண்டான் கபாலிச்சரம் அமர்ந்தான்... என, மாசி மகத்தன்று கடலாடுவதின் சிறப்பு குறித்து பாடுகிறார் திருஞான சம்பந்தர்.ஒரு முறை, இரண்யவர்மன் என்ற மன்னன், மாசி மகக் கடலாடுவதின் சிறப்பு குறித்து, வியாக்ரபாத முனிவரிடம் கேட்டான். மனித ஜீவன்களின் பாவக் கட்டுகளை அழிக்கவல்லது என்று கூறி, அதன் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2015 IST
தலைவனான தனுஷ்!அனேகன் படத்தில், வட சென்னை வாசியாக நடித்துள்ள தனுஷ், அதற்கடுத்து நடிக்கும், மாரி படத்தில், குடிசைவாழ் மக்களின் தலைவராக நடிக்கிறார். ஏற்கனவே, அனேகன் படத்துக்காக வடசென்னை தமிழை வாய் மணக்கப் பேசி நடித்துள்ள தனுஷ், இப்படத்தில், இன்னும் பின்னி எடுக்கிறார். அவர் பேசுவதைப் பார்த்து, 'கூவம் ஏரியா பசங்களே தோற்று விடுவர்; அந்த அளவுக்கு சென்னை தமிழை பக்காவாக ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2015 IST
தவம்!அடி மனதின்ஆழத்தில்அரும்பிய மலராய்மணம் கமழ்கிறாய்!இணைவோம்இப்பிறவியில்என்றிருந்தேன்...இணை சேர முடியாமல்இமைகளை நனைக்கிறேன்!போனது போகட்டும்நம் பயணம்இணை கோடுகளாய்பயணிக்கட்டும்!இதயம் என்றும்இடம் பெயர்வதில்லைஉள்ளம் என்றும்தடம் மாறுவதில்லை!நீறு பூத்த நெருப்பாய்உன் நினைவுகள்என் நெஞ்சில்கனன்று கொண்டிருக்கும்!காத்திருப்பேன்...காலம் கனியும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2015 IST
ஊரை நெருங்கிக் கொண்டிருந்தது பஸ். 10 ஆண்டுகள் கழித்து இப்போது தான் தன்னுடைய சொந்த ஊருக்கு செல்கிறாள் கமலா. அவள் மனதிற்குள் மகிழ்ச்சியும், உற்சாகமும் ஊற்றெடுக்க, 'தாயின் வாசத்தை போல் பிறந்த மண்ணுக்கும் ஒரு வாசம் இருக்கத்தான் செய்கிறது...' என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள்.பஸ்சிலிருந்து இறங்கியவுடன் தெரிந்த முகம் ஏதாவது தென்படுகிறதா என்று சுற்று முற்றும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2015 IST
உலகின் மொத்த மக்கள் தொகையில், 40 சதவீதத்துக்கு மேற்பட்டோர், தூக்கமின்மையால் அவதிப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. தூக்கத்தை வரவழைப்பதற்காக அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு, பலர், பக்க விளைவுகளால் அவதிப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக, அமெரிக்காவில்,'ஸ்பிரேயபுள் ஸ்லீப்' என்ற ஸ்பிரே விற்பனை செய்கின்றனர். இந்த ஸ்பிரேயை, கழுத்துக்கு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2015 IST
ஹாலிவுட்டின் பிரபல நடிகர் ஜஸ்டின் டிம்பர்லேக். இவரின் மனைவி ஜெசிகா பைலும் பிரபல நடிகை தான். இவர்களுக்கு,'ரொமான்ஸ் ஜோடி' என, ஹாலிவுட்டில் செல்லப் பெயர் உண்டு. இவர்கள், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றால், கை, கால், உதடுகளை வைத்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள். அக்கம் பக்கம் பற்றி கவலைப்படாமல், காதல் சேட்டைகள் செய்ய ஆரம்பித்து விடுவர். கர்ப்பமாக இருக்கும் ஜெசிகா ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2015 IST
ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர் செப்ரியா டென்பர்கன். இவர், பார்வை இழந்தவராக இருந்த போதும், தன்னாலான உதவிகளை சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்று நினைத்து, பார்வையற்றோருக்கான பள்ளியை நடத்தி வருகிறார்.பள்ளி மாணவியாக இருந்தபோது, 12 வயதில் தன் பார்வையை இழந்தார் செப்ரியா. பின், பள்ளிப் படிப்பை முடித்து, 'போன்' பல்கலைக்கழகத்தில் சென்ட்ரல் ஏஷியன் ஸ்டடீஸ் என்ற பட்டப் படிப்பில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2015 IST
சில சம்பவங்கள், சிலர் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகளை ஏற்படுத்துவதுண்டு. இப்படித் தான், பாடகர் ஜேசுதாஸ் வாழ்க்கையிலும், நடைபெற்றது. கறுத்த கை என்ற மலையாள படத்தில், ஜேசுதாஸ் பாடிய, 'பஞ்சவர்ண தத்தபோலெ கொஞ்சி வன்ன பெண்ணே...' (பஞ்சவர்ணக் கிளி போல் கொஞ்சி வந்த பெண்ணே...) என்ற பாடல் பிரபலமானது.இந்நிலையில், 1966ல் ஒரு நாள், திருவனந்தபுரத்தில், மேடையில் சினிமா பாடல்களை பாடிக் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X